மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகளால் ஏற்படும் சூழல் பாதிப்பு!

 







மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகள்


உலோகங்கள், வேதிப்பொருட்கள், சிமெண்ட் ஆகிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய பொருட்கள் கரிம எரிபொருட்களை சார்ந்தே இருக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் செயல்முறையில் பெருமளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. 0.98 டன்  ஸ்டீலை உற்பத்தி செய்யும்போது 1.87 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. இப்படி வெளியாகும் வாயுவை குறைக்க முடியாது. ஏனெனில் ஸ்டீல், சிமெண்ட் என இரண்டுமே நகரங்களைக் கட்டமைப்பதில் முக்கியமானவை.

இவற்றுக்கு மாற்று இன்றுவரை வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, காற்றில் வெளியாகும் கார்பன் என்பது மென்மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  கனரக தொழில்துறைக்கு இப்போதைக்கு கையில் உள்ள மாற்று முறை ஸ்டீம் மீத்தேன் ரீஃபார்மிங் எனும் முறைதான். இதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளவில் கனரகத் தொழில்துறை 22 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டிற்கு காரணமாக உள்ளது. இதை மட்டுமே குறையாக கூற முடியாது. ஜவுளித்துறையிலும் அதிக சூழல் பாதிப்பு உள்ளது.

ஆடைகளைப் பற்றிப் பார்ப்போம். இங்கிலாந்தில் விற்கப்படும் எண்பது சதவீத ஆடைகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதன் அர்த்தம். அவை குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு குப்பையாக தூக்கி எறியப்படுகின்றன. ஜவுளித்துறை, கார்பன் டை ஆக்சைடு வாயுவை பத்து சதவீத அளவில் வெளியிடுகிறது. பருத்தி உற்பத்தியில் 22.5 சதவீத பூச்சிக்கொல்லி, 10 சதவீத களைக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, நீர், நிலம் என இரண்டுமே கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றன.

ஆண்டுதோறும் உலகளவில் 80-100 பில்லியன் புதிய ஆடைகள் கடைகளில் வாங்கப்படுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் இப்படி புதிய ஆடைகளை வாங்கும்போக்கு, மக்களிடம் நானூறு மடங்கு அதிகரித்துள்ளது. இப்படி தயாரிக்கும் உடைகள் குறைந்த விலை கொண்ட அதிக நாட்கள் உழைக்காதவை. ஆனால், இவற்றைத் தயாரிக்க ஏராளமான இயற்கை ஆதாரங்கள் செலவாகின்றன. குறைந்த முறை பயன்படுத்தப்பட்டு குப்பையாக நிலத்தில் வீசப்படுகின்றன. செயற்கை இழைகள், இயற்கையாக மட்கிப்போக பல நூற்றாண்டுகள் தேவை.

2018ஆம் ஆண்டு, உலகளவில் உருவான திடக்கழிவுகளின் அளவு 1.97 பில்லியன் டன். இதில், 13.5 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டது. எனவே, மீதியுள்ளவை அப்படியே குப்பையாக நிலத்தில் தேங்கின. ஆயிரம் கிலோ குப்பையில், 0.98 டன் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தியாகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் அளவு திடக்கழிவில் அதிகரித்து வருகிறது. இயற்கைச்சூழலுக்கு இந்த வகையிலான பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம்.

தெர்மோபிளாஸ்டிக்கை திரும்ப திரும்ப பலமுறை மறுசுழற்சி செய்யமுடியும். தண்ணீர் பாட்டில்கள், பைகள், பிளாஸ்டிக்  பெட்டிகள், உணவை பார்சல் செய்யும் ஃபிலிம்கள் ஆகியவை இந்த வகையில் சேரும்.

பூமியைச் சூழ்ந்துள்ள பல்வேறு அடுக்குகளில் பசுமை இல்ல வாயுக்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  சூரியனிடமிருந்து பெறும் வெப்பம், இந்த அடுக்குகளில் தங்குகிறது. அவை வெளியேறாமல் இருப்பதால் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது.

உலக நாடுகளில் தொழில்புரட்சி தொடங்கிய நாள் முதலே பூமியின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. சூடான தட்பவெப்பநிலை சூழல், நீரின் சுழற்சியை மாற்றியது. இதன்விளைவாக புயல்கள் அதிகம் உருவாகத் தொடங்கின. மழைப்பொழிவும் தீவிரமாக மாறியது. கரிம எரிபொருட்களின் பயன்பாட்டால் காற்று மாசுபட்டது. கூடவே, காற்றை சுவாசித்தவர்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டனர். மூச்சு சார்ந்த பல்வேறு நோய்களை எதிர்கொண்டனர்.

உலக நாடுகளில் வெப்பம் உயர்வது சீராக நடைபெறுவதில்லை. உதாரணத்திற்கு உலக நாடுகளில் உயரும் வெப்பநிலையை விட மூன்று மடங்கு அதிகமாக துருவப்பகுதிகளில் உள்ளது. இதன் விளைவாக அங்குள்ள பனிப்பாறைகள் கரைந்து உருகுகின்றன.

அறிவியல் முறையில் வெப்பமயமாதலை ஆய்வாளர்கள் கணித்து வருகிறார்கள். இதன்படி, 1896ஆம் ஆண்டு முதலாக சூழல் மாதிரிகள் மூலம் வெப்பமயமாதல் கணிக்கப்படுகிறது. மனிதர்களின் செயல்பாடு காரணமாகவே இருநூறு ஆண்டுகளாக உயராமல் இருந்த வானிலை மாற்றம் கண்டது.

அறிவியலாளர்கள், மனிதர்களின் மூலமாக காலநிலை மாற்றம் ஏற்படுவதை எக்ஸ்ட்ரீம் வெதர் ஈவன்ட்ஸ் என்று குறிப்பிடுகின்றனர். வெப்பஅலை, அதீத புயல், வெள்ளம், காட்டுத்தீ ஆகியவற்றை இதில் உள்ளடக்கி கூறலாம்.

காலநிலைகள், மனிதர்களின் ஆரோக்கியம், இயற்கைச் சூழ்நிலை என அனைத்துமே பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. வேளாண்மை, பண்ணை விலங்குகள் வளர்ப்பு ஆகிய துறைகளில் காலநிலை மாற்றத்தை ஒருவர் எளிதாக தெரிந்துகொள்ள முடியும். இவைதான் அதிகம் பாதிக்கப்படக்கூடிய துறைகளும் கூட.

மனிதர்கள் இயற்கையை உணவுக்காகவும், குடிநீருக்காகவும் சார்ந்திருக்கிறார்கள். எனவே, மனிதர்களின் செயல்பாடு என்பது உள்ளூர், உலகம் என இரண்டு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மரங்களும், கடலிலுள்ள சிற்றுயிர்களும் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடைக் கட்டுப்படுத்துகின்றன. காடுகள் மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகளில் செல்வாக்கு செலுத்துகின்றன. காடுகள் அழிந்து விலங்குகள் மனிதர்கள் வாழும் இடத்திற்கு வருவது, அவற்றுக்கு எளிதாக நோய்த்தொற்றுவதற்கான வாய்ப்பாக உள்ளது.  உண்மை என்னவென்றால் இயற்கை உலகம் அழிந்துகொண்டிருக்கிறது. நாம் அதை முழுமையாக சார்ந்து இயங்கி வருகிறோம்.

நீராவி ஆகும் செயல்பாடு மாறும்போது காற்றின் சுழற்சி முறையும் மாறுகிறது. இதனால், வானிலை மிகவும் கணிக்க முடியாத வெப்பபம் கொண்டதாக மாறுகிறது. அதாவது, வெப்ப அலைகள் தோன்றத் தொடங்குகின்றன.

 

 

மூலநூல்

சிம்ப்ளி கிளைமேட் சேஞ்ச்

டிகே/பெங்குவின் ராண்டம் ஹவுஸ்

மூலத்தை தழுவிய தமிழாக்க கட்டுரை.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்