திருவண்ணாமலையில் சுமைதாங்கி யாருமில்லை!

 





பயணம்




6.1.2022

அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நான் நேற்று திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். அதற்காக அங்குள்ள நண்பர் வினோத்திற்கு போனில் அழைத்தேன். அப்போது நான் அவரது வீட்டில் தங்கிவிட்டு வந்துவிடலாம் என நினைத்தேன்.

ஆனால், அவரது வீட்டில் ஏற்கெனவே இரண்டு விருந்தாளிகள் இருக்கிறார்கள் என்று கூறினார். ‘’முன்னமே தகவல் சொல்லிவிடு அங்கு வந்தால் தங்கும்படியான அறையைத் தயாரித்து வைக்கலாம்’’ என்று சொன்னார். நான் அதை மறந்துவிட்டேன். வீடு, அவர்களுக்கும் சேர்த்து வேண்டுமே? அவர்களது குடும்ப உறுப்பினர்களே நான்கு பேர் ஆகிவிட்டனர். இனிமேல் தனியார் விடுதியில் தங்கிவிட்டு வினோத் அண்ணனைப் பார்த்துவிட்டு வரவேண்டும். இனியும் அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என நினைத்துள்ளேன்.

சென்னையில் மெல்ல நோய்க்கட்டுப்பாடு இறுகி வருகிறது. வேலையை செய்துவிட்டால் வேறு எங்காவது போய்விட்டு வரலாம் என நினைத்துள்ளேன். ஆபீஸ் வேலையை முடித்துவிட்டால், சொந்த வேலைகளை செய்துகொண்டிருக்கலாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைக்கிறேன். இயற்கை சார்ந்த நூல்களைப் படிக்கலாம். அத்துறை சார்ந்த செயல்பாட்டாளர்களை பற்றி எழுத மனதில் திட்டமிருக்கிறது.

அலுவலக நண்பர் காந்திராமன், தனது ஊரான அரக்கோணத்திற்கு வரச்சொன்னார். அவரது வீட்டுக்குத்தான் அழைத்தார். அடுத்த வாரம் போகவேண்டும். பயணம்தானே எல்லாவற்றையும் மாற்றும். பார்ப்போம்.

அன்பரசு

 https://pixabay.com/photos/mountaineering-man-trail-path-455338/


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்