கொழுப்பை முதன்மையாக கொண்ட கீட்டோ உணவுமுறை!
கீட்டோ உணவுமுறை |
கீட்டோஜெனிக் உணவு
கீட்டோ உணவு
முறைக்கு, என்ன அர்த்தம். பெயர் ஃபேன்சியாக கொண்ட உணவுமுறை என்பதல்ல பதில். குறைந்த
மாவுச்சத்து, அதிகளவு கொழுப்பு கொண்ட உணவுமுறை என்று அர்த்தம். தினசரி இருபது அல்லது
முப்பது கிராம் அளவுக்கு மாவுச்சத்தை எடுத்துக்கொள்ளும் உணவுமுறை கீட்டோ. ஒரு ஆப்பிளில்
உள்ள மாவுச்சத்தின் அளவு.
உணவுமுறையில்
மாவுச் சத்தைக் குறைத்தால் ஒருவருக்கு ஏற்படும் பசியின் வேகம் குறையும். இதன் வழியாக
உடல் எடை குறையும். மாவுச்சத்து, புரதம் ஆகிய இரண்டையும் குறைத்துவிட்டு உடலின் தேவைக்கான
ஆற்றல் கொழுப்பு மூலம் பெறப்படுகிறது.
ஒருவரின் உடலுக்கான ஆற்றல் 70-80 சதவீதம் கொழுப்பிலிருந்தும். 15-20 சதவீதம்
வரை புரதத்தில் இருந்தும், 5-10 சதவீதம் வரை மாவுச்சத்தில் இருந்தும் பெறப்படுகிறது.
அமெரிக்கர்கள்,
தமது உடல் ஆற்றலை மாவுச்சத்திலிருந்து 50 சதவீதமும், புரதத்திலிருந்து 15 சதவீதமும்,
கொழுப்பிலிருந்து 30 சதவீதமும் பெறுகிறார்கள். புரத தேவையைக் குறைத்து உணவுமுறையை அமைத்துக்கொண்டு
வாழ்ந்தால் 65 வயதுக்கு மேலும் நலமுடன் வாழ முடிவதாக ஊட்டச்சத்து அறிவியல் தொடர்பான
ஆய்வறிக்கை தகவல் கூறுகிறது.
ஆற்றலை சுமந்து
செல்லும் மூலக்கூறின் பெயர், கீட்டோன். மாவுச்சத்தில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸை
எரித்தால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. ஆனால் மக்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதில்
இருந்து உடல் தனக்கு தேவையான ஆற்றலை எடுத்துக்கொள்ளும். குளுக்கோஸ் உடலுக்கு கிடைக்காதபோது,
அதற்கு பதிலாக கொழுப்பைக் கரைத்து ஆற்றலைப் பெறும். கீட்டோ உணவு முறை, 1920ஆம் ஆண்டு,
தொடங்கி நடைமுறையில் உள்ளது.
மேற்கு நாடுகளில்
வலிப்பு நோய்க்கு மருத்துவ சிகிச்சை பயனளிக்காதபோது, கீட்டோ உணவுமுறையைப் பயன்படுத்தினர்.
இது ஓரளவுக்கு நோயாளிகளுக்கு பயன் கொடுத்தது. இரண்டாம் நிலை நீரிழிவு நோய் கொண்டவர்கள்,
உடல் பருமன், கல்லீரலில் கொழுப்பு படியும் பிரச்னை ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு கீட்டோ
உணவுமுறை சிறப்பான பயன் அளிக்கும் என உணவு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பொதுவான மேற்சொன்ன
நோய்களைக் கொண்டவர்கள் வயதானவர்களாகவும், குழந்தைகளாகவும் இருந்தால் மருத்துவர்களின்
மேற்பார்வை தேவைப்படும் என்பது உண்மை. இளம் வயதினராக இருந்து ஆரோக்கியமானவர்கள் கீட்டோ
உணவுமுறையைக் கடைபிடித்தால், மாவுச்சத்தை முற்றிலும் குறைப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
கீட்டோ உணவுமுறை
பிரச்னைகள் என்ன? உணவுமுறையை கடைபிடிக்கும் ஒருவருக்கு மூச்சு விடுதல் சீராக இருக்காது.
மலம் வெளியேறுவதில் பிரச்னை இருக்கும். காய்ச்சல் போன்ற சில அறிகுறிகள் இருக்கும்.
உடம்பில் எலக்ட்ரோலைட்டுகள் குறையாமல் இருக்க நீரை அதிகம் குடிப்பது முக்கியம். இறுதியாக
பசி குறைந்து, உடல் எடை குறைவதோடு உடலின் ஆற்றலும் அதிகரிக்கும்.
வர்ஜீனியா
பல்கலைக்கழக மருத்துவமனையில் இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு கீட்டோ உணவுமுறை
பரிந்துரைக்கப்பட்டது. அவர்களுக்கு ஆறு மாதத்தில் எடை குறைந்ததோடு, அதுவரை எடுத்துக்கொண்ட
இன்சுலின் மருந்தின் தேவையும் கணிசமாக குறைந்துபோனது.
கீட்டோவில்
சில பிரச்னைகளும் உள்ளன. ஒருவருக்கு சிறுநீரகம், கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது
என்றால், அவர் கீட்டோ உணவுமுறையில் கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது
ஆபத்தை ஏற்படுத்தும்.
தாவர அடிப்படையிலான
கொழுப்பை எடுத்துக்கொள்பவர்களுக்கு, இதயநோய் சார்ந்த பிரச்னை இருந்தால் அது நிலையை
இன்னும் ஆபத்தாக்கும். எனவே, இப்படியான உடல்நலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிதான்
கீட்டோவை பின்பற்ற வேண்டும்.
விலங்கிலிருந்து
பெறும் கொழுப்பு, தாவரத்திலிருந்து பெறும் கொழுப்பு என இரண்டு வகை கொழுப்புகளையும்
ஒருவர் பயன்படுத்தலாம். மாவுச்சத்து குறைந்த காய்கறிகளைப் பயன்படுத்தலாம்.
கீட்டோ டயட்
காலை எட்டு
மணி
க்ரீம் கொண்ட
காபி
ஒன்பது மணி
இரண்டு முட்டைகள்,
சீஸ், பேகான், அவகாடோ பழம்
நண்பகல்
1 மணி
காய்கறி சாலட்,
சுட்ட மீன், வெள்ளரிக்காய், அவகாடோ துண்டுகள்
மாலை 4 மணி
உப்பிட்ட
பிஸ்தா, பாதாம் பருப்புகள், மற்றும் சூரியகாந்தி விதைகள்
இரவு 7 மணி
வறுத்த புராகொலி,
காலிஃப்ளவர்
மார்கம் ஹெய்ட்,
அலிசா சைபெர்ட்ஸ்
டைம் வார
இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக