சரியான கட்சியை வழிநடத்திச் சென்ற சரியான மனிதர்தான் வாஜ்பாய் - எழுத்தாளர் அபிஷேக் சௌத்ரி

 




வாஜ்பாய் பற்றிய நூல்





 வாஜ்பாய்

தி அசன்ட் ஆஃப் தி இந்து ரைட் 1924-1977

அபிஷேக் சௌத்ரி

பிகாடர் இந்தியா

விலை ரூ.899

வாஜ்பாய் பற்றிய புதிய சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது. இதில், பழமைவாதம், தாராளவாதம் ஆகிய இருவித கருத்தியல்களைக் கொண்ட காலத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாய் பற்றிய பல்வேறு கருத்துகளை விவாதித்திருக்கிறார்கள்.

காங்கிரசும், சங் பரிவாரும் ஒரே மாதிரியாக இணைந்து கருத்தியல் அளவில் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என நூலாசிரியர் அபிஷேக் கூறுகிறார். அதைப்பற்றிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வாசிப்போம்.

“தவறான கட்சியில் இடம்பெற்ற சரியான மனிதர்” என வாஜ்பாயை கூறுகிறார்களே? அந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

இல்லை. சரியான கட்சியில் இருந்த  சரியான மனிதர் என்றுதான் அவரைக் கூறுவேன். அதுமட்டுமல்ல, அவர்தான் கட்சியை முன்னெடுத்துச் சென்றார். 1980ஆம் ஆண்டு ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபோது தவறான கட்சியில் இருந்த சரியான மனிதர் என்ற சுலோகன் பிரபலமாக கூறப்பட்டு வந்தது.

அந்த சுலோகன் கூறப்பட காரணம் என்ன?

இங்கிலாந்தில் வெளியிடப்படும் எனது நூலின் தலைப்பு தி பிலிவர் தில்லமா. இப்படி தலைப்பு வைக்க என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?. அன்று வாஜ்பாய் அரசு ஆட்சிக்கு வந்தபோது, இந்து கருத்தியலை அரசு நிர்வாகத்தில் புகுத்துவார்கள் என பலரும் நம்பினார்கள்.

 ஜனதா அரசு ஆட்சி முடிவுக்கு வந்தபோது, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், அரசுக்கும் உள்ள நிறைய பிரச்னைகள் மக்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டன. வாஜ்பாய், 1979ஆம் ஆண்டு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்த தாகவும், ஜனதா அரசின் பார்வை, கொள்கை ஆகியவற்றில் இருந்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தள்ளி இருக்கவில்லை என்றும் கட்டுரை எழுதியிருந்தார்.

 அது ஆர்எஸ்எஸ் அமைப்பை காயப்படுத்தியது. பிறகு ஜனதா அரசின் ஆட்சி வீழ்ந்த பிறகு, அரசியல் ரீதியாக சிக்கல்கள் உருவாயின. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு வாஜ்பாயை பின்தொடருவதை தவிர வேறு வழியில்லாமல் இருந்தது.

அப்போது ஜனசங்கத்தின் கொள்கைகள்தான் உண்மையான ஜனதா கட்சியின் கொள்கைகளாக இருந்தது. அதை ஜெயப்பிரகாஷ் நாரயணன் வழிநடத்தினார். அதில் காந்திய சோசலிசம் சேர்க்கப்பட்டு புதிய பாஜக கட்சி தொடங்கப்பட்டது. ஜெயபிரகாஷ் நாராயணனின் கட்சி என்ற வகையில்தான் பாஜக கட்சியும் சேர்ந்து இயங்கி வந்தது.

இப்படி கட்சியில்,1970இல் தொடங்கிய அரசியல் குழப்பம், 1980ஆம் ஆண்டு வரை நீடித்தது. ஜனதா கட்சியை வாஜ்பாய், இப்படிப்பட்ட கருத்தியலில்தான் நடத்தி வந்தார். அவரது அரசியல் பயணத்தில் மேற்சொன்ன வழிமுறை, சிந்தனையில் தாக்கம் செலுத்தியது.

அவர், உலகைப் பார்க்கும் பார்வை எப்படி மாறியது?

வாஜ்பாய் வெளிநாடுகளுக்கு சென்று வந்தபிறகு உலகைப் பார்க்கும் பார்வை நிறையவே மாறியது. அவர் அமெரிக்காவிற்கு சென்றுவந்ததைப் பற்றி துல்லியமான தகவல்களுடன் நூலில் எழுதியுள்ளேன்.

 அமெரிக்காவில் உள்ள பல்வேறு கலாசாரங்கள், பல்வேறு இனக்குழுக்களைப் பார்வையிட்டார். அவருக்கு அந்த சமூகம் ஒன்றாக இருப்பதற்கான காரணத்தை அறிவதில் ஆர்வமிருந்தது. வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது பதினாறு நாடுகளுக்குச் சென்று வந்தார். இந்தியாவில் பல்வேறு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சென்றிருக்கிறார். இப்படி சென்ற பயணங்களால்தான் அவரது கருத்துகள் நிறைய மாற்றமடைந்தன. ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்த காரணத்தால் அவர் கருத்துகள் மேம்படவில்லை.

வாஜ்பாயின் பொருளாதார கொள்கை பல்வேறு முரண்பாடுகளை உருவாக்கியிருக்கியது அல்லவா?

தொடக்க காலத்தில் சங் பரிவார் அமைப்பு, பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், அந்த அமைப்பு ஜன சங்கமாக மாறியபோது, பொருளாதார கொள்கையை உருவாக்க வேண்டியிருந்தது. நிலங்களை கையகப்படுத்தி வைத்திருந்த மேல்சாதிக்காரர்களின் வாக்குவங்கி அல்லது நேருவின் பெரும் தொழில்துறை சார்ந்த கொள்கைகளுக்கு எதிராக இருந்த சிறு வணிகர்களுக்காக ஆர்எஸ்எஸ் போராட வேண்டியிருந்தது. எனவே, அரசின் கொள்கைகளுக்கு பல்வேறு எதிர்வினைகளை வெளிப்படுத்த தொடங்கினர்.

இந்திராகாந்தி, பிரதமராக இருந்தபோது நாட்டில் இயங்கி வந்த பல்வேறு வங்கிகளை அரசுடைமை ஆக்கினார். இந்த நடவடிக்கையை ஆர்எஸ்எஸ் முதலில் எதிர்த்தது. பிறகு, தேசியமயமாக்கல் மக்களின் ஆதரவைப் பெற்றபிறகு தங்களின் மறுப்பு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்து பொருளாதார கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது. இதன் காரணமாக வாஜ்பாய்க்கும் ஸ்வதேசி ஜாக்ரன் மன்ச், பாரதீய மஸ்தூர் சங் ஆகிய அமைப்புகளை உருவாக்கிய தத்தோபன்ட் தெங்காடி என்ற நீண்ட நாள் நண்பருக்கும் கூட நட்புறவில் சிக்கல்கள் உருவாயின.  

சோசலிசவாதிகளும், அவசரநிலை இயக்கமும் ஜனசங்கம் மற்றும் பாஜகவினால் முன் நடத்தி செல்லப்பட்டனரா?

நான் இதை ஏற்கமாட்டேன். அன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சியை எதிர்க்க ஜனசங்கம் தேவைப்பட்டது. தொடக்கத்தில் ஜனசங்கம், வலது சாரி அமைப்புகளான ராம ராஜ்ஜியம் பரிஷத், இந்து மகாசபை  ஆகியவற்றின் கூட கூட்டுறவாக செயல்பட நினைத்தது இந்த அமைப்புகள் சாதி தொடர்பான பல்வேறு சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்டிருந்தன. ஆனால், பல்வேறு காரணங்களால் அவர் நினைத்த விஷயங்களை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

ஜனசங்கம் பிற அமைப்புகளை போலில்லாமல் அரசியலில் இறங்குவதை சோசலிசவாதிகள் கவனித்தனர். அவர்களுக்கு தேர்தல் அரசியலில் நிறைய மாற்றுக் கருத்துகள் இருந்தன. அன்றிருந்த சூழலில் ஜெயப்பிரகாஷ் நாரயணன், ஜனசங்கம் அமைப்புக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று எண்ணினார். இந்த விவகாரத்தில் மது  லிமாயா, மது தாண்டவடே ஆகியோருக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தன. மேலே கேள்வியில் நீங்கள் கேட்டுள்ளது பகுதியளவு உண்மை. அதிகாரத்தை அடைய ஒழுக்கத்துடன் உழைத்துத்தான் ஜனசங்கமும்/ பாஜகவும் முன்னேறி வந்தன.  அன்றைய காலத்தில் பசுக்களின் பாதுகாப்பு, வி வி பி சிங்கின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என பல்வேறு அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டு வந்தது.

 

 

 

 

நிஸ்துலா ஹெப்பார்

இந்து ஆங்கிலம்

 

கருத்துகள்