சந்திக்கும் ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் நூல் எழுதலாம்!
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் |
நரசிங்கபுரம்
3/1/2023
அன்புள்ள
அன்பரசு சாருக்கு வணக்கம்.
வலைப்பூ
உங்களை வளமுடன் இருக்கச் செய்யும் என நம்புகிறேன். சென்ற வாரம் நீங்கள் எழுதிய கடிதம்
ஊக்கம் தருவதாக இருந்தது. மிக்க நன்றி!
நீங்கள்
வழிகாட்டியது போல சென்ற வாரம் ஆனந்த விகடன் இதழை வாங்கினேன். இன்னும் படிக்கத் திறக்கவில்லை.
காரணம், தீராநதி மாத இதழ். ஆம். இதழ் முழுவதும் படித்தேன். எழுத்தாளர் அ. முத்துலிங்கத்துடனான
நேர்காணல் சிறப்பாக இருந்தது. தான் சந்தித்த ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதலாம்
என கனடாவில் வாழும் அகதிகளைப் பற்றி கூறியுள்ளார். பல மனிதர்கள் புத்தகங்களை எழுதுகின்றனர்.
சில மனிதர்கள் புத்தகமாகின்றனர் என்ற கருத்து அவரது எழுத்தில் இருந்தது. அதேபோல, ‘தி
மேன் ஹூ சோல்டு இஸ் ஸ்கின்’ என்ற படக்கதையும் சிறப்பு. ஆண்களின் தோலை விபசாரமாக்குவது
பற்றிய கதை. 2020இல் படம் வெளியாகியுள்ளது.
மாணவர்
இதழ், 2ஆம் தேதி முதல் பறக்கிறது. அனைவரும் ஓட ஆரம்பித்து விட்டனர். எனக்கு எழுத்தாளர்கள்
பலர் எழுதுகின்றனர். செர்ஜின் என்ற எழுத்தாளருடனான சந்திப்பு ஊக்கம் தருவதாக இருந்தது.
மேலும் அவரிடம்தான் அரசு வேலைக்கான பயிற்சிகளை எடுக்க உள்ளேன்.
நாளிதழ் வேலை, தற்போது பொருளாதாரத்திற்கு உதவுகிறது. இன்னும் ஓராண்டு வேலை செய்தால் கடன் தீர்ந்துவிடும். இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டேன். இந்தாண்டிற்கான தேர்வு அட்டவணையை அரசு அறிவித்துள்ளது. ஆனால், அவர்கள் அறிவித்தது போல் தேர்வு நடத்தமாட்டார்கள். இருப்பினும் தேர்வுக்கு பயிற்சி செய்தால் வருங்காலத்திற்கு உதவும் என நம்புகிறேன்.
கணக்கு காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு உள்ளேன். சாரி வாழ்கிறேன்.
எழுதும் புதிர்களையும், கட்டுரைகளையும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் முகநூலில் பதிவு
செய்கிறேன். நல்ல வரவேற்பு கிடைக்கிறது. புதிர்களுக்கு சிலர் பதிலனுப்புகின்றனர். மகிழ்ச்சியாக
உள்ளது. உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
காந்திராமன்
கருத்துகள்
கருத்துரையிடுக