ஒரே சமயத்தில் சங்கிலித் தொடராக நடைபெறும் சூழல் பிரச்னைகள்!
இந்தியாவில்
ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக் 21 விமானங்கள் எப்படி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது,
அப்படியான சூழலில் விமானியை குறை சொல்லி அரசு தப்பிக்குமோ சூழல் பிரச்னையும் இதேபோலத்தான்
நேருகிறது. ஏழை மக்களின் உணவு உண்ணும் பழக்கத்தை குறை சொல்கிறார்கள். தொழிற்சாலைகள் செய்யும் பித்தலாட்டங்களை மறந்துவிடுகிறார்கள். எல்லாம் வாங்கும் இனாமிற்கான விசுவாசம் வேறொன்றுமில்லை.
கடலில் வெப்பநிலை
உயரத் தொடங்கினால், உடனே பவளப் பாறைகள் அழியத் தொடங்குகின்றன. ஆண்டுதோறும் பவளப்பாறைகள்
அழியும் அளவு கூடி வருவதால் விரைவில் அதன் பாதிப்பை உணரத் தொடங்குவோம் என சூழலியலாளர்கள்
எச்சரித்துள்ளனர்.சூழல் பாதிப்பிற்கு மக்கள் இறைச்சி சாப்பிடுவதை குறைக்கவேண்டுமென
சில பத்திரிகைகள் எழுதி வருவதை இப்படித்தான் பார்க்கவேண்டும்.
பல நாடுகள்
நாங்கள் பொருளாதாரத்தில் முன்னேறிய பிறகு சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என
சூளுரைத்து பேசுகின்றன. காசுக்கு மண்டியிடும் ஊடகங்களும் அரசியல் தலைவர்களின் பேச்சை
குழப்பமின்றி வெளியிட்டு விசுவாசம் காட்டுகின்றன. முன்னேறியபிறகு மனிதர்கள் பூமியில்
உயிர்வாழ இருப்பார்களா என்பதே சூழல் போராட்டக்காரர்களின் கேள்வி.
சூழல் பாதிப்புகளின்போது
ஒரே நேரத்தில் பவளப்பாறைகள் அழிவு, துருவப்பகுதியில் பனி உருகுவது, கடலின் நீரோட்டம்
வேகம் குறைந்து பலவீனமாகுவது, மழைக்காடுகள் அழிவு, பருவகாலங்களில் ஏற்படும் மாற்றங்கள்
என நேரும். இதை எதிர்கொண்டு மனிதர்கள் மட்டுமல்ல உயிரினங்கள் பிழைத்திருப்பதே கடினம்தான்.
தகவல்கள் சேகரிப்பு
இன்று உலக
நாடுகள் வானிலையை அறிவதற்காக செலுத்தும் செயற்கைகோள்களின் எண்ணிக்கை அதிகம். நிலம்,
கடல், காற்று என பல்வேறு துறைசார்ந்த கண்காணிப்பு, அளவீட்டு கருவிகள் பெருகியுள்ளன.
கடலில் தொடக்கத்தில் கப்பல் மூலமாகவும் இப்போது ஆய்வுக்கருவிகளை நிறுவியும் சோதித்து
வருகிறார்கள். நிலத்தில் உள்ள வெப்பத்தை, அழுத்தத்தை, மழைப்பொழிவு அளவை நேரடியாக வானிலை
மையங்கள் அளக்கின்றன.
வானில் உள்ள சூழலைக் கண்டறிய பலூன்கள் உதவுகின்றன. இவற்றை பறக்கவிட்டு ஆய்வுகளை செய்வது புதிதல்ல. இன்று டெக் நிறுவனங்கள் தடையில்லாத இணையத்திற்கு கூட பலூன்களை வைத்து சோதித்து வருகின்றன.
பசுமை இல்ல
வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடு பற்றி எதிர்மறையாக நிறையப் பேசுகிறார்கள். பூமியில்
தங்கியிருப்பது அந்த வாயுவுக்கு புதிதல்ல. 1950ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் செய்த ஆய்வில்,
கார்பன் டை ஆக்சைடு ஐஸில் உறைந்து 8 லட்சம் ஆண்டுகளாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதன் அளவு 180-300 பிபிஎம் ஆகும். தொழில்துறை வளர்ச்சி முன்னேற்றம் கண்டபோது கார்பனின்
அளவு மேலும் அதிகரித்தது. 2020ஆம் ஆண்டு 414 பிபிஎம் என்ற அளவில் அதிகரித்தது. இதற்கு
இயற்கையில் மனிதர்களின் செயல்பாடே முக்கியமான காரணம்.
காலநிலை மாற்றங்களை
சூழல் மாதிரிகளை உருவாக்கி வைத்து அதன் வழியாக கணிக்கிறார்கள். இதில் பல்வேறு வகைகள்
உண்டு. ஆனால், அதை நாம் இப்போது பார்க்கப்போவதில்லை..
கார்பன்
கார்பன் என்பது
தனிமம். இயற்கையில் கடல், பயிர்கள், பூமியில் கிடைக்கிறது. சூழலில் கலந்துள்ள கார்பனின்
அளவை வைத்து பசுமை இல்ல வாயு பற்றி அறியலாம். பூமியின் ஆழத்திலுள்ள கார்பன் மனித செயல்பாடுகளால்
வெளியே வருகிறது. அரசின் நிர்பந்தம் பற்றி கவலைப்படாமல் தொழில் நிறுவனங்கள் தங்களைத்
தாங்களே நேர்மையாக கண்காணித்து நடந்துகொண்டால் சூழல் சார்ந்த பிரச்னைகள் அதிகம் எழாது.
மூலநூல்
சிம்ப்ளி
கிளைமேட சேஞ்ச்
டிகே/பெங்குவின்
ராண்டம் ஹவுஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக