நீ விரும்பி விளையாடும் பொம்மை நான்!
காதல் விகடன் கவிதைகள்
உன் கோணல் எழுத்துக்கள் போல இல்லை
இந்த நேர்த்தியான எஸ்எம்எஸ்-கள்
ஒரு கடிதம் இடேன்
யாரோ ஒருவர்
யாரோ ஒருவரைக்
கைதட்டி அழைத்தபோது
திரும்பிய உன்னை
யாரோ ஒருத்தியாக நினைக்க முடியவில்லை
-ஜா.பிராங்க்ளின் குமார்
ஒரு சில முத்தங்களிலேயே
உதறி விலகினாய்
நாணமா என்றேன்
நாளைக்கும் கொஞ்சம் இருக்கட்டும் என்றாய்.
அடிகள்ளி
நாளைய முத்தங்களை
இன்றுவரையா வைத்திருப்பேன்?
-மா.காளிதாஸ்
திருக்கல்யாணம்
வண்டி கட்டி
வந்து குவிகிறது
ஊர் மொத்தமும்
நம் திருமணத்திற்கு
தேர் கட்டி
வந்து குவிவார்கள்
கடவுள் மொத்தமும்
-பொன்.ரவீந்திரன்
உன் விழி வில்லால்
உயிர் உடைந்திட்ட
ராமன் நான்
-ப்ரியன்
கனிவானதொரு சொல்லோ
நேசம் துளிர்க்குமொரு பார்வையோ
சில்லறையற்ற பொழுதில்
நீயெடுக்கும் பயணச்சீட்டோ
போதுமானதாயிருக்கிறது
உன்னை நேசிக்க
-யாழினி முனுசாமி
உப்பைக் கொட்டியவர்கள் கூட
அள்ளிக்கொண்டு போகிறார்கள்
ஆனால் நீயோ உன்
உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு அள்ளாமலே போகிறாயே
-தபூ சங்கர்
நீ நடந்த தடங்களின் அடியில்தான்
கிடக்கிறது நம் மணல்
மணல் என்றால் மணல்
மனசென்றால் மனசு
நீ விரும்பி விளையாடும் பொம்மை என்பதால்
பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்னை.
-பா.ராஜாராம்
படம் - பிக்ஸாபே
கவிதைகளுக்கான காப்புரிமை - ஆனந்தவிகடன்
கருத்துகள்
கருத்துரையிடுக