கல்யாணம் சார்ந்து ஏற்பட்ட மன உளைச்சல்கள் அதிகம்!

 











நரசிங்கபுரம்

6/6/2023

அன்பரசு சாருக்கு, அன்பு வணக்கம். நலமா?

கடந்த சில நாட்களாக டெலிகிராமில் மெசேஜ் எதுவும் வருவதில்லை. தினமும் செக் பண்ணுவேன். கடந்த 28.5.2023 அன்று எழுதியிருந்த கடிதத்தில், போன் ரிப்பேர் ஆனதைச் சொல்லியிருந்தீர்கள்.

எதற்கு உங்களை டிஸ்டர்ப் செய்யுறது?ன்னு போன் போடவில்லை. சில விஷயங்களால் மன உளைச்சல் அதிகம். கடிதத்தில் நண்பர் ஜெகன் பற்றி சொல்லியிருந்தீங்க. அவருக்கு ஏற்பட்ட நிலை இன்று எனக்கும்…

பெண்கள் சுயநலவாதிகள். தானும், தனக்குரியவரும் மட்டுமே நல்லா இருந்தா போதும். யார் எப்படிப் போனாலும் கவலை கொள்ளாத மூடர்கள். இதை அறிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனக்கும் சமீபத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தனர். தனிக்குடித்தனம் பற்றிய பேச்சை பெண் வீட்டார் தீவிரமாக வலியுறுத்துகிறார்கள். இதைக் கேட்டதும் கவலையாக உள்ளது.

வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர். அப்பா, பாவம். வரன் கிடைப்பதே கஷ்டம். கெடச்சாலும் இப்படியான கண்டிஷன்ஸ். அவரின் பட்ஜெட்டில் இடி இடிப்பது போல உணர்கிறார்.

பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் இந்த சூழலில் தனிக் குடித்தனம் அவசியமா? இப்பவே இப்படி பேசினால் வாழ்க்கையை எப்படி சீராக நடத்துவாள்? போன்ற கேள்விகள் எனது குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

பெண் தரப்பினர் எங்களைப் போன்ற மிடில் கிளாஸ்தான். ஆனாலும் கூட இப்படியான கண்டிஷன்ஸ் போட்டு திருமணம் செய்வது சரியா? வருங்காலத்தில் இன்னும் பல கண்டிஷன் போட்டால் என்ன செய்வது? இதனால் நானும் இந்த வரன் தொடர்பாக ஈடுபாடு கொள்ளாமல் இருக்கிறேன்.

‘எண்ணங்கள்’ புத்தகத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை. முடியவில்லை. தினமும் திருமணம் பற்றிய பேச்பேச வீட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. என்ன முடிவு எடுக்கலாம் என்ற சிந்தனை அதிகம்.

எனக்குப் பார்த்த பெண்ணிடம் தாத்தா பேசினார். ‘’தனிக்குடித்தனம் போனால் நீயும் வேலைக்குப் போகணும் ’’ என்று சொல்லி பெண் வீட்டாரை சங்கடத்திற்கு உள்ளாக்கினார். அடுத்து, அவர்களின் முடிவுக்காக வெயிட்டிங். நன்றி!

காந்திராமன்


 https://in.pinterest.com/pin/225531893820284511/


கருத்துகள்