ராயல்டியை ஏமாற்றும் பதிப்பு நிறுவனங்களை நினைத்தாலே கசப்பாக உள்ளது!










6/5/2023

அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். நலமா? தோல் பிரச்னை எப்படி இருக்கு? சிகிச்சை மேற்கொள்ள பொருளாதாரம் உள்ளதா? கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அடிக்கடி டெலிகிராமில் பேசுவதால் முறையாக கடிதம் எழுதவில்லை.

தீராநதியில் பேட்டி கொடுத்த இந்திரா சௌந்தர்ராஜனைப் பற்றி நீங்கள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பல எழுத்தாளர்களும் ராயல்டி விஷயத்தில் ஏமாற்றப்படுவது கசப்பாக உள்ளது. 

நேற்று (5/5/2023) எடிட்டரிடம் பேசினேன். திங்கட்கிழமை தாய் நாளிதழுக்கு எழுதும் ஒரு பக்க கணக்குப் புதிர்களை புத்தகமாக போடுவது சம்பந்தமாக. ‘’நிறுவனப் பதிப்பகத்தில் போடலாம்’’ என்றார். நான்,’’ வேண்டாம் சார். வேறு பதிப்பகத்தை நண்பர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்’’ என்று சொன்னேன். எடிட்டரும் நான் கூறிய பதிப்பகத்தில் இலக்கிய நூலொன்றை எழுதியிருப்பதாக கூறினார். மேலும், அங்கு இலக்கியம் சார்ந்த புத்தகங்களே அதிகம் விற்கும் என்றும், கணக்கு புத்தகங்களை கமர்ஷியல் பதிப்பகத்தில் போட்டால்தான் சரியாக இருக்கும் என்றார். உண்மையா சார்?

சமீபத்தில், மாணவர் இதழுக்கு இன்டர்ன்ஷிப் வந்த இளம்பெண், இதழில் உதவி ஆசிரியராக இணைந்தார். கூடுதலாக 23 வயது இளைஞர் ஒருவரும் வேலைக்குச் சேர்ந்துள்ளார். சம்பளம் 25,000. என்னுடைய கல்லூரி ஜூனியராம். யாரையும் யாருக்கும் தெரியாது.

கடந்த சில வாரங்களாக படம் பார்ப்பதில்லை. புத்தக வேலையில் ஈடுபட்டிருந்தேன். ‘கதை வழிக் கணக்கு’ என்பதே நூல் தலைப்பு.

இரண்டு நாட்களாக மழை. காலையில் குளிர்ச்சியாக உள்ளளது. தினமும் 5.15க்கு எழுந்து நடைப்பயிற்சி செய்கிறேன்; அண்ணனுடன்.

மாணவர் இதழ் வேலை மெத்தனமாக உள்ளது. கட்டுரைகளை தினமும் ஒன்று எழுதுகிறேன். அடுத்த மாதம் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முதன்முதலாக எழுத உள்ளேன். ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சிக்கான தேர்வு. அவ்வப்போது படிக்கிறேன் என்றாலும் ஆர்வம் குறைவு.

நன்றி

காந்திராமன்

 

 https://in.pinterest.com/pin/677862181420888200/

கருத்துகள்