உங்களை தலைவராக்கும் விதிகளைக் கொண்ட நூல்!

 










21 இர்ரெப்யூடபிள் லாஸ் ஆஃப் லீடர்ஷிப்

ஜான் சி மேக்ஸ்வெல்

336 பக்கம்

ஹார்ப்பர் கோலின்ஸ்

 

தலைமைத்துவத்தை ஒருவர் எப்படி வளர்த்துக்கொள்வது என்பதை ஏராளமான அமெரிக்க நாட்டு உதாரணங்களோடு எழுத்தாளர் எழுதி விளக்கியுள்ளார்.

பிறரது வாழ்க்கை அனுபவங்களோடு, தான் தேவாலயத்தில் பாதிரியாக பொறுப்பேற்று செயல்பட்டபோது செய்த சரி, தவறு, அதனால் நேர்ந்த விளைவுகள் அனைத்தையும் தான் பேசும் தலைமைத்துவ மையப்பொருளுக்கு இணைத்திருக்கிறார்.

நூலில் இந்தியாவைப் பற்றி மோசமான விவரிப்புதான் உள்ளது. அதைப்பற்றி பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை. காந்தி, இந்தியா போன்ற ஒரு தேசத்தில் சுதந்திரம் பெற்றுத்தர எப்படி உழைத்தார், மக்களை தொடர்புகொண்டார் என்பதை சிறப்பாக விளக்கியுள்ளார்.

ஒரு நிறுவனத்தில் ஊழியர்களின் நம்பிக்கையைப் பெறுவது, எதிர்ப்புகளை வெல்வது, பிறருக்கு உதாரணமாக முன்னே நின்று தடைகளை எதிர்கொள்வது, எதிரிகளை வெல்வது, தொலைநோக்காக யோசிப்பது, நெருக்கடியில் வேகமாக சிந்தித்து செயல்படுவது என ஏராளமான விஷயங்களை உதாரணங்களுடன் மெல்ல விவரித்து எழுதியிருக்கிறார்.

சில இடங்களில் எழுத்தாளர் தான் நடத்தும் பயிற்சி வகுப்பு உதாரணங்களைக் கூட பயன்படுத்துகிறார். ஆனால், அவை பொருத்தமின்றி உள்ளன. அமெரிக்க உள்நாட்டு உதாரணங்கள் சற்று அந்நியமாக இருந்தாலும் அந்த சூழலை விதிகளுடன் பொருத்தும்போது  ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது.

நீங்கள் இப்போது எந்த நிறுவனத்தில், எந்த பொறுப்பில் இருந்தாலும் இதுவரை செய்த எடுத்த முடிவுகள் சரியானவையா, அதன் விளைவுகள் எப்படி வந்தன என்பதை மறுபரிசீலனை செய்ய வைப்பது போல எழுத்தாளரின் விதிகளும் உதாரணங்களும் அமைந்துள்ளன.

கோமாளிமேடை டீம்

படம் - அமேஸான்

https://www.amazon.in/21-Irrefutable-Laws-Leadership-Follow/dp/0785288376

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்