பெண் தலைவர்களை நம்பாத நாட்டு மக்கள், ஒழுக்கத்தை தூக்கிப்பிடிக்கும் ஊடகங்கள்- பெண் தலைவர்கள் காணாமல் போவது ஏன்?

 




சன்னா மரின்

ஜெசிந்தா ஆர்டெர்ன்





உலக அரங்கில் பெண் தலைவர்கள் காணாமல் போவது ஏன்?


அண்மையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஆஸ்திரேலியா நாட்டில் உரையாற்றினார். அதில், உலக நாடுகளில் ஏற்பட்டு வரும் ஜனநாயக பாதிப்புகளை பற்றி குறிப்பிட்டு பேசினார். ‘’உலக நாடுகளில் பரிசோதனை முறையாக இரண்டு ஆண்டுகள் பெண்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் உலகம் சரியான திசையில் செல்லத் தொடங்கும்’’ என்று பேசினார். அவரை நேர்காணல் கண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் அதற்கு பதிலாக “ஆறுமாதங்கள் போதும்” என்று கூறினார்.

பராக் ஒபாமா தனது மனதில் இருப்பதைக் கூறினாலும் அவர் கூறிய விஷயம் நடைபெறுவது மிகவுமதொலைதூரத்தில் இருக்கிறது. ஐ.நா சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில், கடந்த இருபது ஆண்டுகளில்தான் பெண்கள் நாட்டின் அதிபர்களாக வரத் தொடங்கியுள்ளனர். இப்படி அவர்கள் நாட்டின் தலைவர்களாக உருவாகி வளரும் எண்ணிக்கையும் ஆண்களோடு ஒப்பிட்டால் குறைவாக உள்ளது.

2022ஆம் ஆண்டு பதினேழு பெண் தலைவர்கள் ஆட்சியில் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை பனிரெண்டாக சுருங்கிவிட்டது. பாலின பாகுபாடு காரணமாக பெண்களுக்கு அரசியலில் அதிகாரத்தில் பதவிகள் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. ஏறத்தாழ உலகளவில் 130 ஆண்டுகளாக இதே நிலைமைதான் உள்ளது. பெண் தலைவர்களின் அரசியல் வளர்ச்சியும், பெறும் பதவிகளும் ஆரோக்கியமாக இல்லை.

கடந்த ஜனவரியில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ‘’இதற்கு மேலும் இந்த பதவியில் இருக்க முடியாது ‘’ என்று கூறினார். பிப்ரவரி மாதம் மால்டோவா நாட்டு பிரதமரான நடாலியா காவ்ரில்டியா தனது பதவியை விட்டு விலகிறார். அதற்கு காரணமாக ரஷ்யாவை சுட்டிக்காட்டினார்.

 ஸ்காட்லாந்து நாட்டின் பிரதமரான நிக்கோலா ஸ்டர்ஜன், தனது பதவியை விட்டு விலகினார். எட்டு ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர். ‘’இதுதான் சரியான நேரம்’’ என்று கூறி பதவியை விட்டு இறங்கினார்.

ஃபின்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த சன்னா மரின், தேர்தலில் மிக நெருக்கமான எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்பை இழந்து பதவியை விட்டு விலகினார். இந்த மாதம், பதவி விலகிய சன்னா, உலகின் இளம் பிரதமர் என்று புகழப்பட்டவர்.

லா ட்ரோப் பல்கலைக்கழக உலக உறவுகள் ஆசிரியரான டாக்டர் ஃபெடெரிகா காஸோ, பெண்கள் அரசியல் உலகில் இருந்து ராஜினாமா செய்து விலகுவதற்கு மக்களின் மனநிலையை  காரணமாக கூறுகிறார். உலகம் முழுக்க ராணுவம் சார்ந்த அதிகார சிக்கல், போர்  உருவாகிவருகிறது. இந்த நிலை, பெண் அதிபர்களுக்கு, பிரதமர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது என சுட்டிக்காட்டினார். ‘’

‘’வாக்காளர்கள், நாட்டின் ராணுவம், பாதுகாப்பு என்று வரும்போது ஆண்களை நம்புகிறார்கள். பெண்கள் துறை சார்ந்த திறமைசாலிகளாக  இருந்தாலும் அவர்களை ஊடகங்கள் ஒழுக்கம் சார்ந்த பார்வையில் பார்த்து ஒடுக்குகின்றன’’ என்கிறார்.

அமெரிக்கா முன்னேறிய நாடாக இருந்தாலும் அங்குள்ள மக்களைப் பொறுத்தவரை ஆண், பெண் பாகுபாடு தீவிரமாகவே உள்ளது. கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளில் பெண்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று கருத்து கூறும் மக்கள், ராணுவம், பாதுகாப்பு என்று வரும்போது ஆண்களை மட்டுமே நம்புகிறார்கள். பழமைவாத தன்மை கொண்ட கருத்துகளை விட்டு விலகி போராடி  வெல்வது பெண்களுக்கு பெரிய சவாலாக மாறிவருகிறது.

நியூசிலாந்து அரசியலில் ஜெசிந்தா சந்தித்த தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகம் பதவியில் இருந்த மூன்று ஆண்டுகளில் அவர் மீதான பல்வேறு புகார்கள், வசைகள், அவதூறு தாக்குதல்கள் பன்மடங்காக பெருகின. இவையெல்லாமே அவரின் பதவி விலகலுக்கான முடிவை எடுக்கத் தூண்டின. ஃபின்லாந்து பிரதமரான சன்னா மரின், மது அருந்துவது, நண்பர்களுடன் ஃபார்ட்டி செய்வது ஆகியவற்றை ஊடகங்கள் வெளியிட்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்தன.

இப்படி பெண் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை ஒழுக்கம் சார்ந்த பார்வையில் ஊடகங்கள் பார்ப்பது, அவர்களின் அரசியல் வாழ்க்கையை உருக்குலைக்கிறது. இதனால் தேர்தல் நேரத்தில் பிற வேட்பாளர்கள் போல அவர்களால் தேர்தல் நன்கொடை பெற முடிவதில்லை..

‘’இந்த சூழல் மிகவும் கடுமையானது. ஒவ்வொரு முறையும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக உங்களின் பாலினம் முன்வைக்கப்படுவது மிகவும் சவாலானது’’ என்கிறார் பல்கலைக்கழக ஆசிரியர் காசோ பெண் தலைவர்களுக்கு அரசியல் பணிகளோடு குடும்பம், குழந்தைகள் சார்ந்த பணிகளும் உள்ளன. இவையும் அவர்களின் அரசில் பணியில் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இதனால் அவர்களின் பணிக்காலம் 2.1 ஆண்டுகளாக சுருங்கிவிடுகிறது என பியூ அமைப்பின் ஆய்வறிக்கை 2021 குறிப்பிடுகிறது.

பெண்கள் பல்வேறு முக்கியமான அரசு பதவியில் இருப்பது மக்களுக்கு நன்மைகளையே அளித்துள்ளது. இதற்கு உதாரணமாக நார்வே நாட்டை எடுத்துக்கொள்வோம். இங்கு, முனிசிபல் பதவிகளில் பெண்கள் உள்ளனர். குழந்தைகளுக்கான பராமரிப்பு இங்கு சிறப்பாக பேணப்படுகிறது. வெளிநாட்டு உறவுகள் சார்ந்த அதிகாரி பதவிகளை பெண்கள் வகிக்கின்றனர். இப்படி செயல்படுபவர்களின் எண்ணிக்கை பெண் அரசியல் தலைவர்களை விட, பிரதமராக அதிபராக இருப்பவர்களை (உயர்பதவியில் உள்ள பெண்கள்) விட அதிகம்.

 ஆனாலும், இந்த பதவிகளில் நிறைய சவால்கள் உள்ளன. இன்றும் உலக நாடுகளில் பெண்கள் என்றால் குடும்பம், குழந்தைகள், சுகாதாரம் என துறைகளை ஒதுக்கிறார்களே தவிர ராணுவம், பொருளாதாரம் சார்ந்த துறைகளை வழங்குவதில் மனத்தடை நீடிக்கிறது.

ஐ.நா சபையில் உள்ள பதிமூன்று நாடுகள் மட்டுமே அரசியல் பதவிகளில் பெண்களுக்கான பாலினத்தடையை களைந்திருக்கின்றன. பொறுப்புகளை, பதவிகளை வழங்கியுள்ளனர. ஆறு நாடுகளில் மட்டுமே பெண்களின் பிரதிநிதித்துவம் 50 சதவீதமாக உள்ளது.

 

 

 

ஜொனாதன் யேருசல்மி

கார்டியன் வீக்லி 14 ஏப்ரல் 2023

கருத்துகள்