மறைமலையடிகளின் தனித்துவமான கடித நூல்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

 





மறைமலையடிகள்





24.1.2022

அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா

வீட்டில் உள்ள தங்களது பெற்றோர்களையும் கேட்டதாக சொல்லுங்கள். நேற்று லாக்டௌன் என்பதால் எங்கும் செல்ல முடியவில்லை. மாணவர்களுக்கான நாளிதழை ஐந்து பக்கமாக்க வடிவமைத்து அதை டிஜிட்டல் வடிவில் பிடிஎஃப்பாக பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு நடக்கிறது. இது எந்தளவு வெற்றி பெறும் என்று தெரியவில்லை. இப்போதைக்கு நாங்கள் இதற்காகவே வேலை செய்கிறோம்.

தினசரி காலை நாளிதழ்களில் வரும் செய்திகளை எடுத்து ஐடியாக்களாக அனுப்புவது, அதில் எடிட்டர் தேர்வு செய்துதருவதை ஒரு மணிக்குள் எழுதி தர வேண்டும். பத்து மணிக்கு தகவல் சொன்னால் கட்டுரை எழுத மூன்று மணி நேரம் உள்ளது. இப்படிதான் இரண்டு நாட்களாக வேலை செய்கிறோம்.

மறைமலையடிகளின் கடித நூலைப் படித்தேன். அவர் அதில் முக்கியமான முறைகளைக் கையாள்கிறார். நூலில், அஞ்சலட்டை என்றால் ஆங்கிலத்தில் எழுதுகிறார். இன்லேண்ட் கவர் என்றால் தமிழில் எழுதுகிறார். இப்படி எழுத அவருக்கென சில காரணங்கள் இருக்கும் என நினைக்கிறேன்.

வெளியூருக்குப் போனால் சோப்பு, சீப்பு இருக்குமாறு பெட்டி ஒன்றைத் தயார் செய்தேன். இதனால் தினசரி நான் செய்யும் செயல்பாடுகள் ஏதும் பாதிக்கப்படாது. நீங்கள் இதுபோல பொருட்கள் கொண்டதாக பேக் ஒன்றை வைத்திருந்ததாக நினைவு.

நன்றி

அன்பரசு

படம் - தமிழ் விக்கி

கருத்துகள்