இடுகைகள்

வாழ்க்கை - மினிமலிசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மினிமலிச இன்பம்!

படம்
மினிமம் பொருட்களில் இன்பம் அநேகம்! – - ச.அன்பரசு நம் பீரோவில் பொங்கல் டூ தீபாவளி வரை அணிவதற்கென வாங்கிய டிரெஸ்களை எத்தனை முறை பயன்படுத்தியிருப்போம்? டிரெஸ் மட்டுமல்ல மாதம்தோறும் வாங்கும் மளிகைப்பொருட்களில் கூட ஆஃபர்களில் கிடைக்கிறதென வாங்கி பயன்படுத்தாமல் விட்ட நிறைய பொருட்கள் நம் அனைவரின் வீடுகளிலும் உண்டுதானே! தற்போது அவசியமான பொருட்களே வாழப் போதுமானவை என்ற எண்ணம் இளைஞர்களின் மனதில் வேரூன்றிவருகிறது. குறைவான பொருட்களை, சிறிய வீடுகளை பயன்படுத்தும் மினிமலிச கலாசாரம் உலகமெங்கும் அதிகரித்துவருகிறது. அதன் வரலாறு இதோ.. மினிமலிச உடைகளை பயன்படுத்தும் கேப்சூல் வார்ட்ரோப் என்ற கருத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த பிரைடன் சூசி பாக்ஸ் என்ற ஃபேஷன் டிசைனர் உருவாக்கினார். தரமான தகுதியான விலைகளில் பருவச்சூழலுக்கு பொருத்தமாக சில உடைகளை வாங்கினால் வீடு ஸ்டோர்ரூம் ஆகாது; உடைகளால் நம்பிக்கையும் உயரும் என்பது பாக்ஸின் கருத்து. 2002 ஆம் ஆண்டு அமெரிக்கரான ஜே சாஃபர் 500 ச.அடி வீடுகளை உருவாக்கினார். 2007-08 பொருளாதார மந்தநிலை சிறுவீடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதனைப் புகழ்பெறவைக்க நகர்த்த