இடுகைகள்

ஜல்சக்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாநில அரசுகள் நீராதார திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிதியை செலவிட வேண்டும்! - ஜல்சக்தி துறை அமைச்சர்

படம்
NIE மாநில அரசுகள் நீருக்கு செலவு செய்யத் தயங்குகின்றன ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் நாட்டின் நீர்த்தேவை இப்போது என்ன நிலையில் உள்ளது? நீர் என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தில் உள்ளது. அதனை மக்களுக்கு வழங்க அவர்கள்தான் முயற்சிக்க வேண்டும். நாட்டிலுள்ள 5,500 நீராதாரங்களில் 138 இடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவை நாட்டின் நீர்த்தேவையில் 60 சதவீதத்தை நிறைவு செய்கின்றன. ஏப்ரல் 30 நிலைமைப்படி நம்மிடம் 56 சதவீதம் நீர் உள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் நாம் பெற்ற நீரை விட 46 சதவீதம் அதிகமாகும். இமாலயத்தில் அதிக பனி படர்ந்து அது உருகி கிடைத்த நீர் கங்கை யமுனைக்கு வந்துள்ளது. எனவே, சென்ற ஆண்டு சென்னையில் தண்ணீருக்கு தவித்த நிலைமை ஏற்பட வாய்ப்பில்லை.   2025ஆம் ஆண்டு நன்னீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் என நேஷ்னல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆஃப் பைப்லைன் டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டுள்ளதே? நாங்கள் இந்த அறிக்கையை மனதில் கொண்டுதான் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்பட்டு வருகிறோம். பெருந்தொற்று பிரச்னைக்கு பிறகு