இடுகைகள்

மொழிபெயர்ப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழிபெயர்ப்பில் ஆன்மா உயிர்ப்புடன் இருப்பது அவசியம்! - டாக்டர் கே. செல்லப்பன், மொழிபெயர்ப்பாளர்

படம்
            டாக்டர் செல்லப்பன் மொழிபெயர்ப்பாளர் அண்மையில் மார்ச் 12 அன்று தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழிபெயர்த்த பணிக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார் . 2020 க்கான விருது இது . மொழிபெயர்ப்புக்கான விருது என்றாலும் கூட இது தாமதமாகவே இவருக்கு கிடைத்துள்ளது . தாகூரின் நாவல் இன்று கலாசாரம் சார்ந்து ஒருவருக்குள் எழும் பல்வேறு வினாக்களுக்கு பதிலளிக்கும்படி அமைந்துள்ளது . செல்லப்பன் புதுக்கோட்டையில் உள்ள ராஜா கல்லூரியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார் . பிறகு தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான கல்லூரிகளில் ஆசியராக பணியாற்றியுள்ளார் . இவரது கற்பித்தல் முறைகளை மாணவர்களே தன்னார்வமாக பணம் சேகரித்து ஆவணப்படமாக்கியுள்ளனர் . தூங்கும்போது வரும் கனவு அழகாக இருக்கிறது . எழும்போது கண்முன்னே உள்ள வாழ்க்கை அழகாக இருக்கிறது என்று தத்துவமாக பேசுபவர் அப்படியேதான் வாழ்ந்தும் இருக்கிறார் அவரிடம் பேசினோம் . இந்த நேர்காணல் புத்தகத்திலுள்ளதன் சுருக்கமே ஆகும் . தாகூரின் கோராவை மொழிபெயர்ப்புக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் ? அந்த நூலை மொழிபெயர்க்க வேண்டுமென்பது அகாதெமியின் முடிவு . எனக்

வாழும் அலாரமாக மாறிய கதையை கேட்க ஆசையா? கடிதங்கள்

  வாழும் அலாரமாக மாறினேன்! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? உங்களது நாளிதழ் பணிகள் இப்போது எளிமையாகி இருக்கும் என நம்புகிறேன் . எங்கள் பத்திரிகையிலும் வேலைகள் எப்போதும்போல வேகம் பிடித்து நடந்து வருகின்றன . தினசரி நானும் அலுவலக சகாவுமான பாலபாரதி சாரும் ரயில்வே ஸ்டேஷன் வரை நடந்து வருவோம் . அவர் ரயில் ஏறி மடிப்பாக்கம் வரை செல்கிறார் . குங்குமத்தில் வேலை செய்தபோது பொறுப்பாசிரியராக இருந்தவர் என்னை அதிகாலை எழுந்து அவருக்கு போன் செய்யச் சொல்லி வற்புறுத்தியதை சொன்னேன் . உடனே பாரதி சார் , இது சாதிக்கொடுமை தானே என்று சொல்லி டிவியில் வேலை செய்தபோது அவர் பார்த்த விஷயங்களை பேசத் தொடங்கிவிட்டார் . இந்த விஷயத்தை உங்களிடமும் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் . அப்போது இருந்த சூழலில் இதுபோல பொறுப்பாசிரியர் பேசுவார் என்று நினைக்கவில்லை . பாரதி சார் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம் . நான் அந்த சமயத்தில் அந்த கோரிக்கை வினோதமாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன் . ஆனால் அதன் பின்னணி இப்படி இருக்கும் என நினைக்கவில்லை . நான் அவர் அப்படி கூறியதும் , என்னடா சீனியர் இப்படி சொன்னார் எ

இன்ஸ்டன்டாக இயர்பட்ஸ் மூலமே மொழிபெயர்க்க முடியும்! மார்ஸ் இயர்பட்ஸ்

படம்
              மொழிபெயர்ப்பு இப்போது ஈஸி மொழிபெயர்ப்பு செய்வது எப்போதும் பிரச்னைக்குரிய ஒன்றுதான் . இன்றுவரையிலும் சரியான மொழிபெயர்ப்பாளர் கிடைத்து நூல்கள் தரமாக வெளிவருவது என்பது கடினமாகவே உள்ளது . முன்னணி பதிப்பகங்களில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் கூட வேலைப்பளு காரணமாக அப்படியே கூகுள் டிரான்ஸ்லேட் வசதியைப் பயன்படுத்தி வேகமாக புத்தகங்களை எழுதி வருகின்றனர் . இதனால் என்ன பிரச்னை என்பீர்கள் . நூலை தமிழில் படிப்பதற்கு அதனை அர்த்தம கூட குறைய புரிந்தாலும் சரி ஆங்கிலத்திலேயே புரிந்துகொள்ளலாம் என பல வாசகர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர் . இதற்கு விடிவு இல்லையா என்று சிலர் கேட்கலாம் . 2018 ஆம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி விழாவில் மார்ஸ் இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்தது . நாவர் , லைன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன . குளோவா ஏஐ முலம் இயர்பட்ஸ் செயல்படுகிறது . இதனை குரல் மூலம் கட்டுப்படுத்தி இயக்ககலாம் ஏறத்தாழ அலெக்ஸா , சிரி போலத்தான் . சிறப்பு என்னவென்றால் , இதனை காதில் பொருத்திக்கொண்டே மொழி தெரியாத இருவர் பேசலாம் . சில நொடிகளில் மொழிபெயர்ப்பு நடந்துவிடுவதால்

இருபது அறிவியல் மொழிபெயர்ப்பு நேர்காணல்களைக் கொண்ட நூல்! - அறிவியலே உலகு- அன்பரசு சண்முகம்

படம்
  இந்த நூலில் இருபது அறிவியல் மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் உள்ளன. கணிதம், இயற்பியல்,வானியல், செயற்கை நுண்ணறிவு, உளவியல் சார்ந்த துறை வல்லுநர்கள் தங்களது ஆராய்ச்சி பற்றி பேசியுள்ளனர்.  இந்த நூல் எழுதப்பட முன்மாதிரி பாரதி புத்தகாலய ஆசிரியர் இரா. நடராசன் ஆவார். அவரது நேர்காணல் ஒன்றை பாரதி  புத்தகாலயத்தின் புதிய புத்தகம் பேசுது இதழில் படித்தேன். அதற்குப்பிறகுதான் அறிவியல் நேர்காணல்களை எழுதலாம் என்ற எண்ணம் மனத்தில் வலுப்பட்டது. அப்படி உருவானதுதான் இந்த நூல்.  நேர்காணலின் இறுதியில் மூலக்கட்டுரையை படிப்பதற்கான க்யூஆர் கோடு உள்ளது. எனவே, படிக்கும் வாசகர்கள் அதனைப் பயன்படுத்தி மூலக்கட்டுரையை வாசித்து அறிவியலாளர்கள் பற்றி கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.  மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் எந்தெந்த வலைத்தளங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன என்ற தகவலும் இறுதிப்பக்கங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நூலை வாசிப்பவர்களுக்கு அறிவியல் துறையில் ஈடுபடுவதற்கான ஆர்வம் வரவேண்டுமென்பதே இலக்கு. வாசியுங்கள் நன்றி! https://www.amazon.in/s?k=ariviyalae+ulagu&i=digital-text&ref=nb_sb_noss அன்பரசு சண்முகம்

துரோக நண்பன், உடலைக் கொடுத்து புகழ்பெற துடிக்கும் காதலி! - அவள் எழுதிய பெஸ்ட்செல்லர்

படம்
காமன்ஃபோல்க்ஸ் அவள் எழுதிய பெஸ்ட் செல்லர் ரவி சுப்ரமணியன் தமிழில் - மஹாரதி வெஸ்ட்லேண்ட் வங்கித்துறையில் பணியாற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆதித்யா கபூர், தன் வாசகி ஒருத்தியைக் காதலிக்கிறார். சூழ்ச்சியான அந்த காதலால் அவர் படும் பாடுகள்தான் கதை.  நூலில் தலைப்புதான் சரியில்லை. ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பு சரளமாக எளிதில் தடுமாற்றமின்றி படிக்கும் வகையில் மஹாரதி மொழிபெயர்த்திருக்கிறார். முக்கியமான அம்சம் இது. வங்கியாளர் ஒருவர் புகழ் வெளிச்சத்தில் இருக்கிறார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியொன்றில் அவர் பேசும் பேச்சை பேத்தல் என்று வாசகி ஒருவர் ஊதாசீனப்படுத்தி பேசுகிறார். இதனால் எழுத்தாளர் ஆதித்யா கோபம் கொள்கிறார். தன்னுடைய நூல்களை படிக்குமாறு கேட்டுக்கொண்டு அங்கிருந்து சமாளித்து பேசி வெளியேறுகிறார். பின்னர் அடுத்த நாள் காலையில் அவருக்கு மின்னஞ்சல் வருகிறது. அதில் தங்களுடைய நாவல் பிரமாதமாக இருக்கிறது. நான் தங்களை அவமதித்து பேசியது தவறு என கூறுகிறாள் ஸ்ரேயா என்ற அந்த பெண். அவள் நடந்துகொண்ட முறையால் கோபத்தில் இருக்கும் நிர்வாகத்தையும் இந்த மின்னஞ்சலையும் அதற்கு பதிலிட்ட ஆதித்யாவின் மின்னஞ்சலையும் வைத

இணையத்தில் உள்ள அடிப்படைவாதிகள் அசாதாரணமானவர்கள்!

படம்
2019ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சில் அடிப்படைவாதி ஒருவர் மசூதிகளின் மேல் தாக்குதல் நடத்தினார். மேலும் இத்தாக்குதலை திறமாக திட்டமிட்டு பேஸ்புக்கில் லைவ் செய்தார். இத்தாக்குதலை பல்வேறு தரப்பினரும்  பார்த்து அதிர்ந்து போனார்கள். வெளிப்படையாக வெளியுலகில் இருக்கும் அடிப்படைவாதிகளை விட இணையத்தில் உள்ள அடிப்படைவாதிகளின் அளவும் எண்ணிக்கையும் அதிகம். இவர்கள் நடத்தும் தாக்குதல்களை அனைவரும் பார்க்கும்படியாகவும் செய்கிறார்கள். இந்த நூற்றாண்டில் நாம் தொலைத்த முக்கியமான விஷயம். குற்றவுணர்வுதான். தனது சந்தோஷம் முக்கியம் என யாரையும் பலிகொடுக்கத் தயங்காத ஆட்கள் உருவாகி வருகிறார்கள். இவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஜூலியா எப்னரிடம் பேசினோம். இணையத்தில் ஒளிந்துள்ள தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்ததா? அவர்களைக் கண்டறிவது மிகவும் கஷ்டம். காரணம், அவர்கள் படுகொலை செய்வது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிடுகிறார்கள். அதனைக் கண்டறிந்து நீக்குவது மிகவும் கடினம். ஒரு லிங்கை நீங்கள் நீக்கினால் மூன்று லிங்குகளை புதிதாக உருவாக்குகிறார்கள். ட்விட்டர், பேஸ்புக் எ

இந்தியா மேலும் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்!

படம்
பூனம் கேத்ரபால் சிங், உலக சுகாதார நிறுவனம் (கிழக்கு ஆசியா இயக்குநர்) இந்தியாவில் இரண்டுபேர் கோவிட் 19 பாதிப்பால் இறந்துள்ளனர். இதுபற்றி உங்களது கருத்து என்ன? இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு இருவரை பலி வாங்கியுள்ளது. பொதுவாகவே வயதான ஆட்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும்  கோவிட் -19 பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு இன்று உலகில் ஏற்படுத்தியுள்ள பொருளாதார இழப்பும், உயிரிழப்பும் அதிகம். மத்திய அரசு கோவிட் 19 யை தேசியப் பேரிடர் என்று அறிவித்து, பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடை செய்துள்ளது நோயின் பரவலைத் தடுக்கும். இது நல்ல முயற்சி என்பேன். புதிதாக நோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும்? சமூகத்திலிருந்து இனி மக்கள் கொஞ்ச காலத்திற்கு விலகி இருக்கவேண்டும். நுரையீரலை இந்த வைரஸ் பாதிப்பதால், சளி, தும்மல் மூலம் கொரோனா பிறருக்கு எளிதாக பரவும். எனவே மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில்  கூடுவதைத் தவிர்த்தாலே பிரச்னை கிடையாது. வைரஸ் எளிதாக பரவுவதையும் தடுக்க முடியும். உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு நாடுகளுக

அகதிகளை க்ரீசில் அடித்து உதைக்கின்றனர்.! - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

படம்
நேர்காணல் பில் ஃபிரெலிக், அகதிகள் மறுவாழ்வு இயக்கத்தின் தலைவர் அண்மையில் க்ரீஸ் தனது நாட்டிற்குள் அகதிகள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதே நேரத்தில் துருக்கி அகதிகளை அனுமதிக்கும் முயற்சியை எடுத்து வருகிறது. க்ரீசில் உள்ளே வரும் அகதிகளை அடித்து நொறுக்கி வெளியே வீசி எறிய ஆட்கள் தயாராக ஆயுதங்கள் உள்ளனர். அங்குள்ள நிலைமை பற்றி பில் நம்மிடம் பேசினார். நீங்கள் முன்னர் வந்ததற்கும் இப்போதைக்கும் லெஸ்போஸ் தீவில் என்ன மாதிரியான நிலைமை உள்ளது? நான் இத்தீவிற்கு 2016ஆம் ஆண்டு வந்தேன். அப்போது காணப்பட்ட நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் முக்கியமான வேறுபாடு உள்ளது. அது சட்டதிட்டங்களே இல்லாத நிலமாக இன்று மாறியுள்ளதைத்தான் சொல்லவேண்டும். முதலில் அங்குள்ள மொரியா கேம்பின் அளவு 3 ஆயிரம் மக்களைத்தான் தங்க வைக்க முடியும். ஆனால் இன்று அங்கு 20 ஆயிரம் பேரைத் தங்க வைத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை மெல்ல அதிகரித்து வருகின்றனர். இது அநீதி அல்லவா? ஐரோப்பிய யூனியன் கண்காணிக்கும் பகுதியில் இந்த நிலைமை. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த தீவுக்கு சுற்றுலா வருவது வாடிக்கை. அத்

சமூக வளர்ச்சிக்கு உதவும் திட்டம்தான் காலை உணவு வழங்கும் திட்டம்!

படம்
சென்னையில் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு அக்சயா பாத்ரா அமைப்புடன் இணைந்து தொடங்கியுள்ளது . பெங்களூருவைச் சேர்ந்த இந்த அமைப்பு பல்வேறு மாநிலங்களுடன் இணைந்து பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது . அமைச்சர் வேலுமணி இத்திட்டம் பற்றி ட்விட்டரில் முன்னமே அறிவித்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி எந அறிவிப்பையும் வெளியிடவில்லை . அக்சய பாத்ரா அமைப்பின் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கட்டிடம் பேசினோம் . தமிழ்நாடு அரசு மதிய உணவுத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது . அதுபற்றிய உங்கள் கருத்து ? தமிழ்நாடு அரசின் மதிய உணவுத்திட்டம் பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடியான திட்டமாக உள்ளது . இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன . உங்களது அமைப்பு இந்தியாவில் உள்ள பன்னிரண்டு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது . ஆனால் தமிழகத்தில் உங்களுக்கென சமையல் செய்ய ஒரே ஒரு சமையற்கூடம்தானே உள்ளது ? நாங்கள் வரும் மார்ச்சிலிருந்து சென்னை கார்ப்பரேஷன் அமைப்புடன் இணைந்து 5, 090 மாணவர்களுக்கு நாங்கள் கா

அகற்ற முடியாத கறையை ஊழல்கள் ஏற்படுத்தின - மான்டேக் சிங் அலுவாலியா

படம்
நேர்காணல்  மான்டேக் சிங் அலுவாலியா நலின் மேத்தா, சஞ்சீவ் சங்கரன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதல் ஏழு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் என்கிறீர்கள். அப்புறம் ஏன் வளர்ச்சி வீழ்ந்தது? முதல் ஏழு ஆண்டுகளில் வளர்ச்சி நாங்களே நினைத்துப் பார்க்க முடியாதபடி இருந்தது உண்மைதான். ஆனால் அதற்குப்பிறகு அதாவது 2011இல் ஐரோப்பாவில் பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டன. அந்த பாதிப்பினால் அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கவிருந்த திட்டங்கள் தள்ளிப்போயின. அச்சூழலிலும் காங்கிரஸ் உள்நாட்டு உற்பத்தியை வைத்து சமாளித்தது. ஆனால் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்ட ஊழல்கள், ஆட்சிக்கு அகற்றமுடியாத களங்கத்தை ஏற்படுத்தின.  2014 தேர்தல் காலத்தில் இந்த விஷயங்கள் அனைத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக மாறிவிட்டன. பொருளாதார வளர்ச்சி, ஏற்றம், இறக்கம். வீழ்ச்சி என்பது தொடர்ச்சியான விளைவுதான். தொலைத்தொடர்புத்துறையில் கிடைத்திருக்க வேண்டிய அதீத லாபம் பற்றி தணிக்கைத்துறை சொன்னது மிகப்பெரிய சர்ச்சையானது. உலகில் அலைக்கற்றை விவகாரத்தில் தீர்க்கமான விதிகளைக் கொண்டு ஏலம் எங்கு

இசையை திட்டமிட்டு உருவாக்குவதில்லை! - ரோஜர் ராபின்சன்

படம்
ரோஜர் ராபின்சன் கவிஞர் ரோஜர் ராபின்சன், தனது கவிதைகளுக்காக (தி போர்ட்டபிள் பாரடைஸ்) டி.எஸ். எலியட் பரிசை வென்றிருக்கிறார். அவரிடம் அவருடைய படைப்பு பற்றி பேசினோம்.  பரிசு வென்றது எப்படியிருக்கிறது? நான் கவிதை எழுதிவிட்டு அதற்கு பரிசுகளை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. கிடைத்திருப்பது மகிழ்ச்சி. முடிந்தளவு என்னுடைய கவிதைகளை மக்கள் வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்பரிசு மூலம் கவனம் ஈர்க்கப்பட்டு மக்கள் கவிதைகளை வாசித்தால் நல்லது.  எலியட் கூட அமெரிக்காவில் பிறந்தவர்தான். ஆனால் அவர் வாழ்ந்தது முழுக்க இங்கிலாந்தில். அதேபோல நீங்கள் இங்கிலாந்தில் பிறந்து டிரினாட்டில் சிறுவனமாக இருக்கும்போது சென்றிருக்கிறீர்கள்.  பின்னர், இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறீர்கள். படைப்புக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறது.  படைப்புக்கு டிரினாடுதான் சரியான இடம். ஆனால் இங்கிலாந்தில் வணிகச்சந்தை உள்ளது. பதிப்புக்கான பல்வேறு வாய்ப்புகள் இங்குள்ளன.  உங்களை கார்டியன் பத்திரிகை டப் கவிஞர் என்று அழைத்திருக்கிறதே? முன்னர் சில டப் ஆல்பங்களை நான் செய்திருக்கிறேன். அதனால் மக்கள் என்னை இப்பெயர

இயற்கைக்கும் பெண்ணுக்கும் தொடர்பு உண்டு!

படம்
நேர்காணல் கிறிஸ் குவோமோ, சூழலியலாளர் பெண்கள் இயற்கையோடு இணைந்தவர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள் எப்படி? நீங்கள் பெண்ணை அவளின் பொறுமை, பாதுகாக்கும் குணம் ஆகியவற்றை வைத்து இயற்கையோடு இணைக்கிறீர்கள். நானோ மனிதர்கள் அனைவரும் இயற்கையை சார்ந்து அதிலிருந்து அறிவைப் பெற்று தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைக் காண்கிறேன். இதில் பெண்கள் அர்ப்பணிப்பாக பணிகளைச் செய்கிறார்கள் இங்கு நான் சொல்வது பெண்ணின் பணிகளை மட்டுமே. அவர்களை உடல்களாக கருதி, இயற்கையோடு இணைக்கவில்லை. பெண்கள் உலகை வேறுவிதமாக பார்க்கிறார்கள் என்கிறீர்களாழ ஆமாம். கடந்த இருநூறு ஆண்டுகளாக நாம் காலனியாதிக்கத்தால் அவதியுற்றோம். இன்று முதலாளித்துவத்தால் மறைமுகமாக பிரச்னைகளுக்கு உள்ளாகிறோம். பெண்கள் இக்காலகட்டங்களில் தங்களுக்கான பிரச்னைகளை தீர்க்க முனைந்திருந்தார்கள். அதாவது பாலின பாகுபாடு, சமூகப் பிரச்னைகள், சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த உழைத்து வந்தனர். ஆனால் இருநூறு ஆண்டுகளில் இவர்களை அமைப்புகளை உருவாக்க வைத்திருந்தால் பருவநிலை மாறுபாடுகளை நாம் சந்திக்கும் நிலை வந்திருக்காது. இப்படி உருவாக்கப்படும் தொழிற்சாலைகளை அவர்கள்

இலங்கையின் வளர்ச்சிக்காக மகிந்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

படம்
இலங்கையில் அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே தேர்வாகியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடி வென்று சிங்கள இனவாத த்திற்கு உறுதுணையாக நின்றவர் இவர். இவரின் வெற்றி பற்றி இலங்கையில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர்  அசங்கா அபேயாகூனசேகராவிடம் கேட்டோம். இலங்கையில் மகிந்தா அதிபராகியுள்ளார். இந்நிலையில் டெல்லி - கொழும்பு உறவு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? மகிந்தா, டெல்லியுடன் சிறப்பான உறவைப் பேணுவதாக முன்னமே கூறிவிட்டார். அதிபரான நிலையில் இதில் சில மாறுபாடுகள் நடக்கலாம். மகிந்தா முன்னமே இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் இது தென்னிந்தியாவுக்குப் பொருந்தாது. மொத்தமாக இந்தியா - இலங்கை உறவுகள் சிறப்பாகவும் உறுதியாகவும் இருக்கும் என கூறலாம். மகிந்தா வெற்றி பெற்றதை இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள்? மக்கள் அவரை வரவேற்கிறார்கள். காரணம் நாட்டின் பொருளாதார நிலைமை படுமோசமாக இருக்கிறது.அதனை சரிசெய்ய மகிந்தாவினால் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர் தான் செய்யப்போகும் செயல்களைப் பற்றி முன்னமே கூறிவிட்டார். இப்போது அவர் எப

ரஜினியை பின்னாலிருந்து இயக்குகிறார்கள்! - கே.வீரமணி

படம்
சாதி பிரிவினைகளை ஆதரிக்க ராமாயணத்தை அடையாளம் காட்டுகிறார்கள்! பிரிவினையின் லாபம் அடையும் கட்சிகள் அதற்காக நவீன இந்திய சிற்பிகளை அவமானப்படுத்துவதும், அதற்காக பாடநூல்களை கூட மாற்றுவதும் நடந்து வருகிறது. இப்போது கூடுதலாக, பிரபலமாக உள்ள நபர்களை தூண்டிவிட்டு ஒட்டுமொத்த மக்களையும் பிரிவினைப்படுத்த மதவாத கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இதற்கான செயல்பாடுகளில் பெரியார் சிலைகள் உடைப்பு, அவரது கருத்துகள் திரிக்கப்படுவது என நடந்து வருகிறது. பிரபல நடிகரான ரஜினிகாந்த் துக்ளக் வார இதழில் பெரியார் பற்றி பேசிய கருத்து சர்ச்சையானது. ரஜினி தவறான தகவல்களை ஊடகங்களுக்கு தருகிறார் என்று இதற்கு பதில் சொல்லுகிறார்   திராவிடர் கழக பொதுச்செயலாளரான கி.வீரமணி. மக்களிடையே பிரிவினை விதைக்கும் பிளவு செயல்பாடுகள் தொடரும் என்று நினைக்கிறீர்களா? எனக்கு ஜோதிடம் தெரியாது. இதுபோன்ற யூக கேள்விகளுக்கு என்னிடம் பதில் கிடையாது. ரஜினி மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்று கூறியதற்காக பெரியாரிஸ்டுகள் மன்னிப்பு கேட்கவேண்டுமென நினைக்கிறீர்களா? இல்லை. அவசியம் கிடையாது. ரஜினி போன்ற நபர்கள் இப்ப

மனநல பிரச்னைகளை சினிமாவில் சரியாக காட்டுவதில்லை! - ஷகீன் பட்

படம்
மன அழுத்தம், விரக்தி, மனச்சோர்வு ஆகியவற்றை இன்று அனைவரும் பேசி வருகிறோம். காரணம், பணி, குடும்பம் என பல்வேறு விஷயங்கள் இடியாப்பம் போல ஒன்றாக கலந்து நம் மனதைப் பாதிக்கின்றன.   திரைப்பட எழுத்தாளர் ஷகீன் பட் இதுபற்றிய ஐ ஹேவ் நெவர் பீன் அன் ஹேப்பியர் என்ற நூலை எழுதியுள்ளார். தன் இருபது ஆண்டு, மனச்சோர்வு விடுதலைப்போராட்டம் பற்றிய நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார். இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம். நீங்கள் எழுதியுள்ள நூலில் மனச்சோர்வு எப்படி உறவுகளை பாதித்தது என்று கூறியுள்ளீர்கள். உங்கள் குடும்பத்தில் இதனை எப்படி எதிர்கொண்டார்கள்.? என் குடும்பத்தில் எனக்கு ஏற்பட்ட மனச்சோர்வு பிரச்னை பற்றி அனைவருக்கும் தெரியும். இதனால் நூல் வெளியானபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் அறையில் இருக்கும்போது, தனியாக இருக்க விரும்ப அதிகம் விரும்பியிருக்கிறேன். மனதிற்கு நெருக்கமானவரிடம் கூட சில விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்ள முடியாது. இதனால்தான் நான் பிறருக்கு சொல்லவேண்டிய விஷயங்களை நூலாக்கியுள்ளேன். இதனை படிக்கும்போது குழந்தை வளர்ப்பை ஆண்களும் செய்யவேண்டும், மனச்சோர்வு காலகட்டம், பாதிப்பு ஆக