இடுகைகள்

குளவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கை பற்றி அறிந்துகொள்ள உதவும் நூல்கள்!

படம்
  ரீவைல்டிங் ஆப்பிரிக்கா கிரான்ட் ஃபோவிட்ஸ் - கிரஹாம் ஸ்பென்ஸ் ராபின்சன் சூழலியலாளர் கிரான்ட் மற்றும் ஸ்பென்ஸ் ஆகியோர் இணைந்து  பெருந்தொற்று காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் வனப்பாதுகாப்பு எப்படியிருந்தது என விளக்கியிருக்கிறார்கள்.  வொய் ஷார்க்ஸ் மேட்டர் டேவிட் ஷிஃப்மேன் ஜான் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி பிரஸ்  விருது பெற்ற தாவரவியலாளர் டேவிட், சுறாக்கள் பற்றி பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். சுறாக்களைப் பற்றித்தான் நாம் நிறைய தவறான தகவல்களைப் பேசி வருகிறோம். புரிந்துகொள்ளாமல் வாழ்கிறோம். நம்மிடமிருந்துதான் சுறாக்கள் பயப்பட்டு வாழ வேண்டுமென பகடியாக எழுதியிருக்கிற தொனியில் நிறைய தகவல்களை வாசகர்களுக்கு கூறுகிறார்.  பிளாட்டிபஸ் மேட்டர்ஸ்  ஜாக் ஆஸ்பை ஹார்பர் கோலின்ஸ் பதிப்பகம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலூட்டிகள் படிக்கவும் அறியவும் வினோதமானவை. இதில் பிளாடிபஸ் என்ற விலங்கு பற்றி ஆய்வாளர் ஜாக் விரிவாக விளக்கி இதன் பின்னணியில் உள்ள புராண புனைவுகளையும் பேசியுள்ளார்.  எண்ட்லெஸ் ஃபார்ம்ஸ்  சீரியன் சம்னர்  ஹார்பர் கோலின்ஸ்  குளவிகள் பற்றி நிறைய சுவாரசியமான விஷயங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். பலரும் பா

நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள்!

படம்
  நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள்! நெற்பயிரில் ஏற்படும் நோய்த் தாக்குதலை இயற்கையாக கட்டுப்படுத்துபவை பூச்சி இனங்கள். ஆனால் இவை வயலுக்கு வரத் தடையாக இருப்பது, பல்வேறு நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகள் ஆகும்.  நன்மை செய்யும் பூச்சிகளை நாம் வயலுக்கு வரவைத்தால், பூச்சிக்கொல்லி செலவுகள் பெருமளவு குறையும். சில நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி இனங்களைப் பார்ப்போம்.   முட்டை ஒட்டுண்ணிகள்,  கிரைசோபா,   குளவி இனங்கள்,  தட்டான் இனங்கள்,  பொறி வண்டு, நீளக்கொம்பு வெட்டுக்கிளி, சிலந்தின இனங்கள்  ஆகியவை வயலில் உள்ள பூச்சிகளை தின்று பயிர்களைக் காப்பாற்றுகின்றன.  முட்டை ஒட்டுண்ணிகள் கைகோகிரம்மா டெலிநாமஸ், டெட்ராஸ்டிக்ஸ் ஒட்டுண்ணிகள் காய்ப்புழுக்களின் மீது முட்டையிட்டு, அவற்றின் இனத்தை அழிக்கின்றன. இந்த ஒட்டுண்ணிகள் கருப்பு நிறம் கொண்டவை. தன் வாழ்நாளில் இருபது முதல் நாற்பது தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கின்றன.  கிரைசோபா இப்பூச்சி, குஞ்சுப் பருவத்திலிருந்தே அசுவினி, இலைப்பேன் ஆகியவற்றைத் தாக்குகிறது. ஆண்பூச்சிகள் 12 நாட்களும், பெண் பூச்சிகள் 35 நாட்களும் உயிர்வாழும்.  தன் வாழ்நாளில் கிரை