இடுகைகள்

பால்கனாடோலியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அழிந்துபோன வணிக கண்டம்! - பால்கனாடோலியா

படம்
  ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான நடுவில் உள்ள கண்டம்! அண்மையில், தோராயமாக 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கண்டம் மறைந்துபோனதாக ஆராய்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இங்கு, ஆசிய உயிரினங்களும், தனித்துவமான தாவரங்களும் இருந்ததாக ஆராய்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.  மறைந்துபோன கண்டத்தின் பெயர், பால்கனாடோலியா (Balkanatolia). இந்த கண்டம், ஆசியா, ஐரோப்பாவிற்கு பாலமாக இருந்துள்ளது. இதன் வழியாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவிற்கு செல்ல முடிந்துள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்நீர் பரப்பு குறைவாக இருந்த காலம் அது. அப்போதுதான் இரு பகுதிகளுக்கும் இடையில் பாலம் உருவாக்கப்பட்டது.  3.4 கோடி ஆண்டுகளுக்கு, முன்னர் ஐரோப்பாவில் உள்ள தாவர இனங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அழிந்துபோயின. இந்த நிகழ்ச்சிக்கு கிராண்டே கூப்பூர் (Grande Coupure)என்று பெயர். இச்சமயத்தில் ஆசிய தாவர, விலங்கு இனங்கள் மெல்ல ஐரோப்பா கண்டங்களுக்கு சென்றன.  ”தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆசிய விலங்குகள் எப்போது, எப்படி இடம்பெயர்ந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களும் துல்லியமாக இல்லை” என்றார் ஆ