இடுகைகள்

காகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நண்பகலில் ஜேம்ஸின் உடலுக்குள் புகும் ஆவி - நண்பகல் நேரத்து மயக்கம் - லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி

படம்
  நண்பகல் நேரத்து மயக்கம் - மலையாளம் நண்பகல் நேரத்து மயக்கம் மலையாளம் இயக்கம் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி வேளாங்கண்ணி கோவிலுக்கு போய்விட்டு கேரளத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கும் ஒரு நபர், திடீரென வேனில் இருந்து இறங்கி ஊருக்குள் சென்றுவிடுகிறார். அங்குள்ள வீட்டில் வாழ்ந்து இறந்துபோன ஒருவராக (சுந்தரம்) மாறி வேலை செய்கிறார். உண்மையில் அவருக்குள் என்ன நடந்தது, ஏன் கிராமத்திலுள்ள வீடு ஒன்றுக்கு சென்று தங்குகிறார் என்பதே கதை. ஆன்மா, இன்னொருவரின் உடலுக்குள் இறங்கி தனது குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதுதான் கதை. இயக்குநர் லிஜோ, சிஜி ஏதும் இல்லாமல் மனிதர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறார். இதனால் நண்பகல் நேரத்து மயக்கம் சிறந்த படமாக மாறுகிறது. படத்தின் கதை புதுமையானது என்று எல்லாம் கூறிவிட முடியாது. இந்து மதத்தில் உள்ள இறந்துபோனவர் மீண்டும் இன்னொரு உடலில் புகுந்து ஆசையை நிறைவேற்றிக்கொள்வதுதான் படத்தின் மையக்கதை. ஆனால் அதை லிஜோ கையாண்ட விதம் முழுக்க மனிதர்களின் உளவியல் சார்ந்த தன்மையில் என்பதுதான் படத்தை நேர்த்தியான படமாக மாற்றியிருக்கிறது. சந்தைக்கு சென்ற கணவர் காணாமல் போய்விடுகி...

மனைவியை வல்லுறவு செய்து கொன்றவர்களை, உயிர்த்தெழுந்து பழிவாங்கும் இசைக்கலைஞன் - தி குரோ

படம்
  தி குரோ பிராண்டன் லீ - தி குரோ தி குரோ இயக்கம் அலெக்ஸ் புரோயாஸ் பிராண்டன் லீ அமெரிக்காவில் உள்ள இசைக்கலைஞர், அவரது மனைவி ஆகியோர் அவர்களது வீட்டில் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இசைக்கலைஞரின் மனைவி நான்கு பேரால் வல்லுறவு செய்யப்பட்டு பிறகே இறக்கிறார். குற்றுயிராக இருக்கும் இசைக்கலைஞர், கடும் வேதனைக்குப் பிறகு மருத்துவமனையில் உயிரை விடுகிறார். இறந்த பிறகு கல்லறையில் இருந்து காகத்தின் உதவியால் வெளியே வந்து, வல்லுறவு கயவர்களின் மண்டையை உடைத்து மாவிளக்கு ஏற்றுவதுதான் கதை. சூப்பர்மேன் தனமான கதைதான். பெரும்பாலும் படக்காட்சிகள் இரவில்தான் நடக்கின்றன. நாயகன், பக்கெட் ஹெட் எனும் கிடார் இசைக்கலைஞர் போலவே இருக்கிறார். வில்லன்களை அடித்து நொறுக்குகிறார். காக்கையின் படத்தை தரையில், சுவரில் வரைந்துவிட்டு செல்கிறார். ரத்தம், நெருப்பு என கிடைத்த பொருட்களை பயன்படுத்துகிறார். பார்க்கும் காவல்துறை மிரண்டு போகிறது. ஏதாவது செய்கிறார்களா என்றால் எதுவும் செய்வதில்லை. ஏனெனில் அந்த ஊரில் போதை மாஃ|பியா தலைவர் இருக்கிறார். அவருக்கு பயந்துகொண்டுதான் காவல்துறையே இயங்குகிறது. இசைக்கலைஞரின் பா...