தூமகேதுவுக்கு கிடைக்கும் சாமந்திமாலை சொல்லும் செய்தி! - இடக்கை - எஸ் ராமகிருஷ்ணன்
இடக்கை எஸ் ராமகிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகம் ப.318 ஒளரங்கசீப்பின் இறுதிக்காலம், அவரது இறப்பு, புதிய பாதுஷா ஷா ஆலம் பதவியேற்பது, மெல்ல இந்தியா பல துண்டுகளாக பிளவுபடுவது, ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக வருவது, ஆட்சியைப் பிடிப்பது என நாவல் பயணித்து நிறைவடைகிறது. உண்மையில் இந்த நூல் அரசர்கள்,சமூகத்தில் கீழ்மட்டத்தில் உள்ள தீ்ண்டத்தகாதவர்கள் அதாவது இடக்கையர்கள் ஆகிய இருவரின் அக புற பிரச்னைகளைப் பேசுகிறது. நூலிலுள்ள முக்கியமான பாத்திரங்கள் என அஜ்யா, தூமகேது, சக்ரதார், படகோட்டி சம்பு, பிஷாடன், மந்திரி முக்தலன், மகாபிரஜா சபை, கவிஞர் ஜமீல் ஆகியோரைக் கூறலாம். இந்த பாத்திரங்கள் அனைவருமே அதிகாரத்தின் அருகே நின்று அதன் சாதக, பாதக விளைவை அடைந்தவர்கள். அதிகாரத்தின் அருகில் நிற்பவர்கள் எவருமே அந்த அதிகாரத்தால் எப்போது வேண்டுமானாலும் பலி கொடுக்கப்படலாம். ஆனால், அதை பலரும் பின்னாளில்தான் உணர்வார்கள். ஆனால் என்ன பயன்? அதிலிருந்து மீள வழி கிடைக்காது. அஜ்யா, ஒளரங்கசீப்பின் பணிப்பெண். காலை அமுக்கிவிடுவதுதான் வேலை. ஆனால் அவர் இறந்தபிறகு, மன்னருக்கு நெருக்கமாக இருந்த காரண...