இடுகைகள்

கோபாட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோபாட் என்ன செய்யும்?

படம்
ஒன்றாக வேலை செய்வோமா? ஆட்டோமேஷன் வந்துருச்சா? வேலை போய்டுமே, என் அப்பாவின் வேலையைக் காப்பாத்துங்க என்று நினைக்க அவசியமில்லை. சீனாவில் கோபாட்(Cobot) என்ற எந்திரங்களை உருவாக்கி வருகிறார்கள். வால் இ படத்தில் பார்த்திருப்பீர்களே குப்பைகளை கட்டியாக மாற்றி அடுக்குமே சின்ன ரோபோ அதுபோலத்தான் ஐடியா. இது மனிதர்களுடன் இணைந்து வேலை பார்க்கும். பிரேக் டைமில் சமூக அக்கறையை தம் அடித்தபடியே கேட்கும். லன்சில் தன்னை சார்ஜ் செய்துகொண்டே தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டீர்கள் என்ற காலாவதி பேச்சுக்களை கர்ம சிரத்தையாக கேட்கும் ரோபோ இது. அதிக  காலமில்லை நண்பர்களே. இன்னும் 2020 களில் இதன் ஆட்டம் ஆரம்பம்.  சீனாவில் இந்த வகை ரோபோக்களின் சந்தை மதிப்பு 190 மில்லியன்களாக உயரவிருக்கிறது.  நேபாளத்தில் ஒரு ஓட்டல்காரர், வாடிக்கையாளர்களுக்கு ஆங்கிலத்தில் ஜோக் சொல்லுமளவு பயிற்சியளித்து பயன்படுத்தி வருகிறார் என்றால் ஆச்சரியம்தானே. ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவுடன் இயங்கத் தொடங்கிவிட்டன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஓலா, உபர் டாக்சிகள் கணினி மூலம் இயங்கத் தொடங்கிவிடும். பெட் பிராணிகளிலும் எந்திரன்கள் நு