இடுகைகள்

ஐ.நா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவில் உள்ள சிறந்த சுற்றுலா கிராமங்கள்!

படம்
      சிறந்த சுற்றுலா கிராமங்கள் - சீனா ஷிதி அன்ஹூய் என்ற பகுதியில் ஹூவாங்சன் என்ற இடத்தில் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் 970 ஆண்டுகள் பழமையானது. 2000ஆவது ஆண்டில் யுனெஸ்கோ பாரம்பரிய இடம் என்ற பட்டியலில் இடம்பிடித்தது. ஹூய்சு கலாசார அடையாளம் கொண்ட கோவில்கள், கட்டுமானங்கள் கிராமத்தில் காணப்படுகின்றன. இவை வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கொண்டவை. யுகுன் கிராமம் ஸெஜாங் என்ற மாகாணத்தில் அன்ஜி என்ற இடத்தில் கிராமம் அமைந்துள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றதால் மாசுபாடு அடைந்து உள்ளூர் நிர்வாகத்தால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அழகிய நீர்நிலைகள், மலைத்தொடர்களைக் கொண்ட இடம். ஹூவாங்லிங் கிராமம் வூயுவான் என்ற இடத்தில், ஜியாங்ஸி மாகாணத்தில் அமைந்துள்ளது. சமவெளியில் இருந்து 1,260 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி கிராமம். இங்குள்ள மக்கள் மூங்கில்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். தினசரி பயன்பாட்டுப் பொருட்களை மூங்கிலில் உருவாக்கி வருகிறார்கள். வரலாற்று ரீதியாக அறுநூறு ஆண்டுகள் பழமையானது. இங்கு செய்யப்படும் வேளாண்மை முறையும் தனித்துவமானது. ஸக்கானா கிராமம் கல் பெட்டி என தி...

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு

படம்
  காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு காலநிலை மாற்றம் என்பதைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் ஒருவிதமாகவும், வளரும் நாடுகள் ஒருவிதமாகவும் நடந்துகொள்கின்றன. வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்ற விதிகளை பயன்படுத்தி வளரும் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயல்கின்றன. வளரும் நாடுகள், பணக்கார நாடுகளின் விதிகள் தங்களுக்கு பொருந்தாது. நாங்கள் இன்னும் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்று கூறி பசுமை விதிகளை அமல் செய்ய மறுக்கின்றன. எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை அமல்படுத்த குறிப்பிட்ட தொகையை வளர்ந்த நாடுகள் தர வேண்டியிருக்கும். இதற்கான அடித்தளத்தை காப்29, அசர்பைஜானில் நடக்கும் மாநாடு அமைக்கும் என நம்பலாம்.  துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற காலநிலை மாநாட்டில், 2030ஆம் ஆண்டிற்குள் தூய ஆற்றல் வளங்களை மூன்று மடங்கு வளர்ச்சி கொண்டதாக மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நடப்பு ஆண்டில், இலக்கு என்பது நாடுகள் அளிக்க வேண்டிய நிதியாக இருக்கும். இதை என்சிக்யூஜி என சுருக்கமாக குறிப்பிடுகிறார்கள். புதிய ஒருங்கிணைந்த கூட்டு இலக்கு என தமிழில் கூறலாம்.  2025ஆம் ஆண்டு தொடங்கி வளர்ந்த ந...

தென் ஆப்பிரிக்காவில் இனவெறி ஒழிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது!

படம்
  சூயஸ் கால்வாய் கட்டப்பட்டபிறகு வணிகம் அதிகரித்ததை இங்கு முன்னமே எழுதியிருக்கிறோம். இதற்கு முன்னர், ஐரோப்பியர்கள் எப்படி வணிகம் செய்தார்கள்? தென் ஆப்பிரிக்கா வழியாக சென்று ஆசியாவை அடைந்து வணிகம் செய்தார்கள். வணிக உதவிகளுக்காக இங்கு பல்வேறு வணிக மையங்களை அமைத்து இருந்தனர். துறைமுகங்களையும் இந்த முறையில் அமைத்து வணிகம் கெடாதபடி பார்த்துக்கொண்டனர்.  தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க மக்களை இனவெறி கொண்டு பிரித்தனர். அவர்களை ஆப்பிரிக்கானர்ஸ் என்று அழைத்து வந்தனர். டேனியல் மாலன் என்பவர் அங்கு ஆட்சிக்கு வந்ததும் இனவெறிக் கொள்கையை உடனே நடைமுறைக்கு கொண்டு வந்தார்.  இதன் மூலம் அம்மக்களை எளிதாக சுரண்ட முடிந்தது கருப்பின மக்களை பொதுவெளியில் அரசு அனுமதிக்கவில்லை. பார்த்தால் அடி உதை அபராதம் என சென்றது. இவர்களால், நாடாளுமன்றத்திற்கு கூட வரமுடியாது. இதெல்லாம் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பூர்விக மக்களுக்குத்தான் என்றதும் அதிர்ச்சியாக இருக்கும்.  இவர்கள் உள்ள பகுதிகளுக்கு பந்துஸ்தான் என்று பெயர். இந்த மக்களுக்கு அடிப்படையான உரிமைகள் கிடைக்காத காரணத்தால் அமெரிக்கா, ஐ.நா அம...

இந்தியாவை முன்னிலை பெற செய்த பெண் அதிகாரிகள்! - ஈனம் காம்பிர், ஸ்னேகா துபே, விதிஷா மைத்ரா, பௌலோமி திரிபாதி

படம்
  ஸ்னேகா துபே அதிகாரம் வாய்ந்த பெண்கள்  கடந்த ஐந்து ஆண்டுகளாக நான்கு இந்திய பெண்கள் இந்தியா சார்பாக ஐ.நாவில் பேசியுள்ளனர். ஸ்னேகா துபே, ஈனம் காம்பிர், விதிஷா மைத்ரா,  பௌலோமி திரிபாதி ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இவர்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை ஐ.நாவில் வெளிப்படையாக தெரிவித்து நாளிதழ் செய்திகளில் இடம்பெற்றனர். அவர்களைப் பற்றிய சின்ன அறிமுகம்.  ஈனம் காம்பிர் நியூயார்க்கில் உள்ள ஐ.நாவின் இந்தியாவிற்கான நிரந்தர திட்ட கமிஷன் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஐ.நாவின் கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதி பிரிவில் மூத்த ஆலோசகராக பணியாற்றினார். கணிதப் பாடத்தில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். உலகநாடுகளில் பாதுகாப்பு பற்றியும் படித்துள்ளார். 2005இல் குடிமைத்துறை தேர்வு எழுதி வெளியுறவுத்துறைக்கு தேர்வான சாதனையாளர்.  ஸ்னேகா துபே கோவாவில் பிறந்து வளர்ந்த ஸ்னேகாவின் கனவே வெளியுறவுத்துறை அதிகாரி ஆவதுதான். தனது 12 ஆவது வயதிலேயே இதற்கான கனவு கண்டார் என்பதுதான் இவரைப் பற்றி நாம் இங்கே எழுத காரணம். 2011ஆம் ஆண்டு குடிமைத்தேர்வை முதல் முயற்சியிலேயே எழுதி வென்றார். வெளியுறவுத்துறைக்...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் வன்முறையை உலகிற்கு சொன்ன பெண்! - நாடியா முராத்

படம்
  நாடியா முராத்  நாடியா முராத் எழுதிய நூல் நாடியா முராத் மனித உரிமை செயல்பாட்டாளர்  யாசிடி என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர். நாடியா. இவரது இனக்குழு சிரியா, இராக், ஈரான் ஆகிய நாடுகளில் வசிக்கிறார்கள். 1995 ஆம் ஆண்டு கோச்சோ, ஈராக்கில் பிறந்தவர் இவர்.  விவசாயத்தை நம்பி வாழ்ந்த குடும்பம் நாடியாவினுடையது. இவர் தனது கிராமத்தில் வாழ்ந்து வந்தபோது, ஐஎஸ் தீவிரவாதிகள் இவர்களது கிராமத்தை தாக்கி அழித்தனர். 600 ஆண்களை கொன்றனர். ஐ.நா தீவிரவாதிகள் அமைப்பு என ஐஎஸ்ஐஎஸ்ஸை அறிவித்துள்ளது. யாசிடி என்ற இனக்குழுவைச் சேர்ந்த நிறைய பெண்களை தீவிரவாதிகள் பிடித்து சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்து சித்திரவதை செய்தனர். ஒருநாள் இருநாளல்ல மூன்று மாதங்கள் அந்த நரகத்தை நாடியா பிறருடன் சேர்ந்து அனுபவித்தார்.  ஒருநாள் அவரை பிடித்து அடைத்து வைத்திருந்த அறை திறந்து கிடக்க, அங்கிருந்து தப்பினார். அகதிகள் முகாம் உள்ள இடத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள குடும்பம் ஒன்று, நாடியாவிற்கு உதவிகளை செய்தனர். பின்னாளில் அவர் ஜெர்மனிக்கு செல்ல அங்கேயே உதவிகள் கிடைத்தது.  யாசிடி இனக்குழு பெண்களின் பாதிப்பிற்கு நாட...

சூழலியலில் போராடி வரும் இளைஞர்கள்!

படம்
              இளைய போராளிகள் ஜான் பால் ஜோஸ் இந்தியாவைச் சேர்ந்த சூழலியல் போராட்டக்கார ர் . உலகளவில் நடைபெறும் இயற்கை பேரிடர்களில் இந்தியாவைச் சார்ந்து கருத்துகளை முன்வைத்த சூழலியல்வாதி . இவர் எழுத்தாளரும் கூட . டெலானி ரினால்ட்ஸ் இவர் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் . மியாமி பல்கலைக்கழகத்தில் படித்தவர் . கடல்நீர்மட்டம் உயர்வது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு செய்கிறார் . ஷியா பட்டிஸ்டா அமெரிக்காவைச் சேர்ந்தவர் . நியூயார்க்கில் வசித்து வருகிறார் . பிரைடேஸ் பார் ப்யூச்சர் யூத் வெப்பநிலை மாற்ற சூழல் போராட்டத்தின் முக்கியமான தலைவர் . ஹோலி கில்லிபிராண்ட் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் .. இங்கிலாந்து நாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்திவர்கள் இவர்ரகள முக்கி ஆட்டும் பெல்டியர் கனடாவாசி . தூய்மையான தண்ணீருக்கு போராடி வருகிறார் . இதற்கான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் . பருவநிலை மாறுதல் போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடி வருகிறார் . ரித்திமா பாண்டே ...

உலக அமைதிக்கான நோபல் பரிசு! - வேர்ல்ட் புட் புரோகிராம் எனும் ஐ.நாவின் திட்ட அமைப்புக்கு கிடைத்துள்ளது

படம்
        உலக அமைதிக்கான நோபல் பரிசை 28 ஆவது அமைப்பாக வேர்ல்ட் புட் புரோகிராம் எனும் ஐ.நாவின் திட்டம் வென்றுள்ளது. பசியைத் தீர்ப்பதற்காக போராடி, போர் மற்றும் முரண்பாடுகள் சிக்கல்களை நிலவும் பகுதியை அமைதி நிலவச் செய்த பணிக்காக நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1961ஆம்ஆ ண்டு அமெரிக்க அதிபர் வைட் ஐசன்ஹோவர், வேர்ல்ட் புட் புரோகிராம் திட்டத்தை தொடங்குவதற்கான ஆலோசனையை தெரிவித்தார். இந்த அமைப்பு தொடங்கியபிறகு ஈரானின் போயின் ஜாஹ்ரா நகரில் நடைபெற்ற நிலநடுக்க பாதிப்பில் 12 ஆயிரம் மக்கள் பலியாயினர். மேற்சொன்ன அமைப்பு அங்கு கோதுமை, சர்க்கரை, தேயிலை ஆகிய பொருட்களை டன் கணக்கில் அனுப்பி உதவியது. பின்னர், தாய்லாந்து, அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் நிறைய உதவிகளை ஆபத்துகாலத்தில் செய்தது. 1963ஆம்ஆண்டு சூடானின் நியூபியன்ஸில் முதல் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியது. பின்னர், பள்ளிக்கான உணவு திட்டத்தை டோகோவில் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நாவின் முக்கியமான திட்டமாக வேர்ல்ட் புட் புரோகிராம் மாறியது. இத்தாலியின் ரோமில் இந்த திட்ட அமைப்பு செயல்படுகிறது. இதில் 36 நாடுகள் உறுப்பினர்கள...

ஆங் சன் சூகி மீது தொடங்குகிறது ஐ.நா வழக்கு!

படம்
honghong free press 2017ஆம் ஆண்டு மியான்மரில் உள்ள ரோஹிங்கிய முஸ்லீம்கள் மீது பௌத்தர்கள் தீவிர இன அழிப்பு செயல்முறைகளை செயல்படுத்தினர். இதனால் அங்கு கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. வாழ்வதற்கான சூழ்நிலை இல்லாத அம்மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர். இவர்களின் எண்ணிக்கையை மியான்மர் அரசு, 5 லட்சம் என்கிறது. ஆனால் வங்கதேசத்திற்கு அகதியாக வந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் ஆகும். 2018ஆம் ஆண்டு மியான்மரில் முஸ்லீம்கள் மீது நடந்த ராணுவ வன்முறை மற்றும் அரசின் நடவடிக்கைகள் பற்றி செய்தி எழுதிய இரு ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தது அந்நாட்டு அரசு. இதைப்பற்றி மூச்சு கூட விடாமல் இருந்தார் அந்நாட்டின் பிரமரான ஆங்சன் சூகி. இதன்விளைவாக அவரின் மீது உலகம் கொண்ட அபிமானமே தகர்ந்து போனது. இதனால் கனடா அரசு சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்ப பெற்றுக்கொண்டது. மேலும் மனித உரிமைக்கு பாடும் ஆம்னெஸ்டி அமைப்பும் தான் முன்னர் அமைதிக்காக பாடுபடும் வகையில் சூகிக்கு கொடுத்த உயர்ந்த விருதை திரும்ப பெறுவதாக அறிவித்து விட்டது.  வரும் டிச. 10-12 தேதிகளில் ஐ.நா வழக்கில் ரோஹிங்...

மின் வாகனங்களுக்கு அரசு உதவி! - நாம் என்ன செய்யவேண்டும் ?

படம்
  மின் வாகனங்களை வாங்குவதற்கு இந்திய அரசு 1.5 லட்சம் வரை வரிவிலக்கு அளிப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது  பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை நம்பி இருப்பது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்ற வகையில் இதனை வரவேற்கலாம். தற்போது சந்தையிலுள்ள நிறுவனங்கள் இதனை எதிர்கொள்ள மறுத்தாலும் பின்னாளில் நிலை மாறும். அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கும்போது, மின் வாகனங்கள் சந்தைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய அரசு, ஜிஎஸ்டி வரியிலிருந்தும் 5 சதவீதம் விலக்கு அளித்துள்ளது சிறப்பம்சம்தான். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களோடு ஒப்பிட்டால், மின் வாகனங்களுக்கு தவணையில் வாங்கும் வசதிகள் என்பது குறைவுதான். ஆனால் அரசின் மானியங்கள் வழங்கப்பட்டால் மின் வாகனங்களை வாங்கும் விலை,  மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. அதேசமயம், மின் வாகனச்சந்தையில் இந்தியா இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. வாகனச்சந்தையில் வேலை இழப்புகளைத் தடுக்க மின் வாகன பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது ஒரே தீர்வு. இல்லையெனில் பேட்டரி, பாகங்கள் உள்ளிட்டவற்றை சீனாவிலிருந்து ...

இங்கிலாந்து மேயரின் சாதனை ஆர்வம்!

படம்
உலகம் முழுக்க வெப்பமயமாதல் பற்றி அக்கறையும் பயமும் உள்ளது. இதன்பொருட்டு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் உழைத்து வருகின்றனர். இதற்காக இங்கிலாந்தில் புதிதாக பொறுப்பேற்ற மேயர் அசத்தலான காரியம் ஒன்றை செய்திருக்கிறார். வெப்பமயமாதல் பற்றி மாணவர்களுக்கு விளக்க பாடம் சொல்லித்தரவென ஆசிரியர்களை தொடக்கப் பள்ளியில் நியமிக்க இருக்கிறார். ஜேமி டிரிஸ்கோல் என்பவர் வடக்கு டைன் பகுதியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவர்தான் இந்த ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த முறையில் சுற்றுச்சூழல் கல்வியை ஐ.நா அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் கற்றுத்தர இருக்கிறார். இது மாணவர்களின் கல்வியை முழுமையாக்கும் என்கிறார் இவர். இம்முறையில் ஐம்பதிற்கும் மேலான ஆசிரியர்கள் , இப்பயிற்சியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். இந்தவகையில் சூழல் தொடர்பான கவனத்தை மேயர் தொடக்கத்திலேயே ஏற்படுத்தியுள்ளது பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நன்றி: இகோ வாட்ச்

ஏமனுக்கு மானிய உதவிகளை நிறுத்தலாமா? - ஐ.நா யோசனை

படம்
ஏமன் நாட்டில் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை ஹூதி புரட்சியாளர்களுக்கு வழங்கினால் விரைவில் உணவுப்பொருட்களுக்கான மானியம் நிறுத்தப்படும் என ஐ.நா தலைவர் அறிவித்துள்ளார். ஏமனில் ஹூதி புரட்சியாளர்கள் அரசை எதிர்த்து கடுமையாக போரிட்டு வருகின்றனர். அவர்கள் கைப்பற்றிய நிலப்பகுதி சார்ந்த மக்களுக்கு உண்ண உணவில்லை. இதனை மனிதநேயமுறையில் பரிசீலித்த ஐ.நா சபை இவர்களுக்கு பதினைந்து மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உணவுப்பொருட்களை அனுப்பி வைத்தது. தற்போது ஐ.நாவின் உணவு வழங்கும் திட்டத்தலைவர் டேவிட் பீஸ்லி, ஐ.நா வழங்கும் உணவுப்பொருட்களை மக்களுக்கு வழங்காமல் ஹூதி புரட்சியாளர்களுக்கு கொடுத்தால் நாங்கள் உணவுப்பொருட்களையும் மானியம் வழங்குவதையும் நிறுத்திவிடுவோம் என அச்சுறுத்தி உள்ளனர். இதற்கு பதிலளித்த ஹீதி புரட்சியாளர்கள் சார்பான வெளிநாட்டுத்துறை அமைச்சர் ஹூசைன் அல் எசி,  தவறுகள் சிலசமயங்களில் நடைபெறலாம். ஆனால் நாங்கள் மக்களுக்கு வழங்கும் உணவுப்பொருட்களை புரட்சியாளர்களுக்கு வழங்கவில்லை. மக்களை நாங்கள் நம்புகிறோம். எங்களுக்கு ஆதரவளிக்கும் அவர்கள்தான் எங்கள் பலமும் கூட என்றார். பனிரெண...