இடுகைகள்

எதிர்கால உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்கால உலகம் எப்படியிருக்கும்!

படம்
      cc   எதிர்கால உலகம் எப்படியிருக்கும் ! மனிதர்களின் மனம் மாறுகிறதோ இல்லையோ தொழில்நுட்பம் 5 ஏராளமான மாற்றங்களைப் பெற்று வருகிறது . அப்படி மாற்றம் பெறவிருக்கிற சில விஷயங்களைப் பார்ப்போம் அலுவலகம் கலந்துரையாடல் சந்திப்பு சாதாரணமாகவே அலுவலக மேனேஜர் ஒன்றரை மணி நேரங்களுக்கு மீட்டிங் போட்டு தன்னுடைய பெண் படிக்கும் படிப்பு , அவளின் ஆர்வமான விஷயங்களையெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள் . இதே டெம்பிளேட் இப்போது ஜூம் மீட்டிங்கிற்கு மாறியுள்ளது . மற்றபடி வேறு மாற்றம் ஏதுமில்லை . ஆனால் எதிர்காலத்தில் இப்போது நாம் ஹாலிவுட் படங்களில் பார்க்கும் ஹோலோகிராம் மீட்டிங்குகள் நடைபெறும் . இதில் நாம் வீட்டிலிருந்து பேசினால் போதும் . திரையில் பலருடனும் பேசுவது நம்முடைய ஹோலோகிராம் உருவமாக இருக்கும் . இப்போது பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ரோபோவை வைத்து சந்திப்புகளை திறம்பட நடத்த முயன்றுவருகின்றன . நமது உருவங்கள் 3 டி முறையில் இனி புராஜெக்டுகளை விளக்கிப் பேசும் நாள் வெகுதூரத்தில் இல்லை . வைஃபை பொதுமுடக்க காலத்தில் புத்தகம் இருந்தவர்கள் எப்படியோ சமாளித்து விட்டார்கள் . ஆன