இடுகைகள்

சாதனையாளர்கள் கதை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூகுள் குரு சிறுவன் இவன்தான்!

படம்
இரண்டு வயது சிறுவன் என்ன செய்வான்? பேசவே தடுமாறுவார்கள். இதைத்தாண்டி வரம் வாங்கி வந்த பிறப்புகள் நாடுகளை, கொடிகளை அடையாளம் காட்டுவார்கள். பெயர்களை சொல்லுவார்கள். ஆனால் 2016 ஆம் ஆண்டு பிறந்த குரு உபாத்தியாய யுபிஎஸ்சியில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி அசத்தியிருக்கிறார். உள்ளூரில் கூகுள் குரு என பெயர் பெற்ற குரு அனைத்து இந்திய மாநிலங்களை நினைவு வைத்து சொல்லி பலரையும் வியக்க வைக்கிறார். இச்சாதனைகளை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்துள்ளனர். ஒரு நிமிடத்தில் பதினேழு நாடுகளின் கொடிகளை அடையாளும் காணும் சாதனை, தலைநகர்களை உடனே கூறுவது ஆகிய சாதனைக்கான குளோபல் ரெக்கார்ட்ஸ் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் குருவை அங்கீகரித்து தனது நூலில் அவரை பதிவு செய்ய இசைந்துள்ளது. ”நானும் என் மனைவியும் யுபிஎஸ்சி தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்தோம். அப்போது அருகிலிருந்த குரு எங்கள் நூல்களை படித்து நாடுகளை நினைவில் கொண்டிருக்கிறேன். இது முதலில் எங்களுக்கு தெரியவில்லை. விஷயம் தெரிந்தபோது பிரமித்துப் போனோம். ” என வியக்கின்றனர் குருவின் பெற்றோரான அர்விந்த் - பிரியா.