இடுகைகள்

குழந்தை பலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளின் இறப்பை மறைத்தவர்களுக்கு பரிசுகள் கிடைத்தன! - மருத்துவர் காஃபீல் கான்

படம்
  மருத்துவர் காஃபீல் கான் மருத்துவர் காஃபீல் கான் உத்தரப் பிரதேசத்தில் பணிபுரிந்த மருத்துவர். ஆக்சிஜன் இல்லாமல் தடுமாறிய குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்தார். இதற்காக சிலிண்டர்களையும் சொந்தசெலவில் ஏற்பாடு செய்தார். இதனால் மக்களின் நாயகன் ஆனார். ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் இவர் மீது குற்றம் சுமத்தி சிறையில் தள்ளினார். இவரது குடும்பத்தினரையும் காவல்துறை மிரட்டத் தொடங்கியது. தற்போது சிறைவாசம் மீண்டு வந்தவர், சம்பவம் பற்றிய நூலை எழுதியுள்ளார்.  கோரக்பூர் சம்பவம் எப்படி நடந்தது? ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் அங்கு குழந்தைகள் இறந்துகொண்டே இருப்பது இயல்பானது என்கிறார்களே? புஷ்பா சேல்ஸ் என்ற நிறுவனம், முதல்வர், செயலாளர் ஆகியோருக்கு பதினான்கு கடிதங்களை எழுதியது. ஆனால் அவர்கள் யாருமே அதனை கண்டுகொள்ளவில்லை. பணத்தை சரியான நேரத்திற்கு கொடுத்திருந்தால் இப்படியொரு பிரச்னை வந்திருக்காது.  2017ஆம் ஆண்டு ஆகஸ்டில் பணம் பட்டுவாடா ஆனது. அதே ஆண்டில்தான் உ.பி மாநில அரசு சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடை 50 சதவீதமாக குறைத்தது.  குழந்தைகள் ஆண்டுதோறும் பலியாகிறார்கள் என்பதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்க ம