இடுகைகள்

அட்டாச்மென்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அட்டாச்மென்ட் கோட்பாடு என்றால் என்ன?

படம்
    அட்டாச்மென்ட் கோட்பாடு என்றால் என்ன? ஒரு குழந்தையை தாதி ஒருவர் வளர்க்கிறார் என்றால், அக்குழந்தைக்கு பெற்ற தாயை விட தாதி மீது மாறாத ஈர்ப்பு, பிணைப்பு உருவாகும். இதை உளவியல் பள்ளிகளில் ஏற்றுக்கொண்டு மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார்கள். தொடக்க காலத்தில் இக்கொள்கையை ஏற்கவில்லை. தொடர்பு கொள்கை, ஒருவரின் ஆளுமையை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கொள்கையை உளவியலாளர் ஜான் பௌல்பை உருவாக்கினார். இதுதொடர்பாக அட்டாச்மென்ட் அண்ட் லாஸ் என்ற நூலை எழுதினார். இதை விரிவாக்கியவர் மேரி அன்ஸ்வொர்த். ஜான் பௌல்பையின் தொடர்பு கொள்கையை விளக்கி கூற முடியுமா? ஒரு குழந்தைக்கு தாயின் பாதுகாப்பு தொடக்க ஆண்டுகளில் தேவை. குழந்தை பயப்படும்போது, தாயிடமிருந்து பிரிக்கப்படும்போது பாதுகாப்பு உணர்வை இழக்கிறது. உடனே அழுது தாயின் அணைப்பை கதகதப்பை உணர துடிக்கிறது. இந்த சூழலில் தாய் இல்லை என்றால் குழந்தையின் மனநிலை சோகத்திற்குள்ளாகிறது. மன அழுத்தம் உருவாகிறது. மூன்று மாதம் தொடங்கி, ஓராண்டு வரை பாதுகாப்பு தொடர்பான உணர்வு தீவிரமாக இயங்குகிறது. எட்வர்ட் ஓ வில்சன் யார்? சோசியோபயாலஜி துறையை உருவாக்கிய தந்த...