இடுகைகள்

இயற்கைத் தேர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாம்பிடமிருந்து தவளைக்கு பரிமாறப்படும் மரபணுக்கள்!

படம்
 பாம்பிடமிருந்து பரிமாறப்படும் மரபணு! பாம்பின் முக்கியமான உணவு,  தவளை. உணவாகும் அந்த தவளை பாம்பின் உடலில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற ஆராய்ச்சித் தகவல் புதியது. தவளைகள் தங்களின் மரபணுக்களை, ஒட்டுண்ணி வழியாக  பாம்பிற்கு கடத்துகிறது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.  பொதுவாக ஒரு உயிரினத்திடமிருந்து, அந்நிய உயிரினம் ஒன்றுக்கு (எடு.தாவரத்திலிருந்து விலங்கு, தவளையிலிருந்து பாம்பிற்கு) மரபணு பரிமாற்றம் ஏற்படுவது மிகவும் அரிது. இதற்கு ஹரிஜோன்டல் டிஎன்ஏ டிரான்ஸ்பர் (Horizontal gene transfer (HGT))என்று பெயர். பாக்டீரியாக்களிடம் இந்த முறையில் மரபணு பரிமாற்றம் நடைபெறுகிறது.  பசுக்களின் உடலில் உள்ள போவைன் பி (BovineB BovB) என்ற மரபணு, உண்மையில் பாம்பிடமிருந்து பரிமாற்றமாகியுள்ளது.  இந்த நிகழ்ச்சி, 5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது என மரபியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  10 ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பானில் உள்ள நகாஹாமா இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆய்வாளர் அட்சுஷி குரபயாஷி , ஆய்வு உண்மை ஒன்றைக் கண்டறிந்தார். போவைன் பி மரபணு, மடகாஸ்கரிலுள்ள தவளைகளிடம்  காணப்பட்டது என்பதுதான் அது.