இடுகைகள்

சீனா போன்கள் அபாயம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உளவுபார்க்க சீன போன்கள் போதும்!

உலகை உளவுபார்க்கும் சீனா ! சீனத்தயாரிப்பு போன்களான விவோ நெக்ஸ் , தானியங்கியாக இயங்கி பயனர்களை உளவு பார்க்கத் தொடங்கியது சர்ச்சையாகியுள்ளது . சீன அரசின் தூண்டுதலில் செல்போன் நிறுவனங்கள் இதுபோன்று செயல்பட்டுள்ளதா என்ற கேள்வி டெக் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது . கடந்த மாதம் விவோ நெக்ஸ் எனும் ஆண்ட்ராய்ட் போனில் QQ ப்ரௌஸர் , சிட்ரிப் , டெலிகிராம் ஆப்களை இயக்கினால் உள்ளிழுக்கும் கேமரா தானாக  இயங்கி மேலே வந்து பயனர்களை படம்பிடிக்க தொடங்கியது . உள்ளிழுக்கும்படியான டிசைன் பயனர்கள் தாம் எப்போது கண்காணிக்கப்படுகிறோம் என்பதையும் அறிய உதவுகிறது . இதுகுறித்த இணையநிறுவனமான டென்சென்ட் , "QQ ப்ரௌஸர் க்யூஆர் கோடுகளை படம்பிடிக்க வசதியாக கேமரா இயங்குகிறது . ஆனால் பயனர் விரும்பினால்தான் அதில் போட்டோக்களும் ஆடியோவும் பதிவாகும் " என புதுமை பதிலை கூறியுள்ளார் . வேறு ஆப்கள் கேமராக்களை பயன்படுத்துகிறதா என பயனர்கள் சோதித்தபோது பைடு ஆப் மாட்டியது . கேமரா மற்றும் குரல் பதிவு வசதியை பயனரின் அனுமதியின்றி தானாகவே பயன்படுத்துகிறது . வீடியோவில் பயனர் பேசுவதற்கு வசதியாக குரல்பதிவு வசதிய