உளவுபார்க்க சீன போன்கள் போதும்!







உலகை உளவுபார்க்கும் சீனா!

சீனத்தயாரிப்பு போன்களான விவோ நெக்ஸ், தானியங்கியாக இயங்கி பயனர்களை உளவு பார்க்கத் தொடங்கியது சர்ச்சையாகியுள்ளது. சீன அரசின் தூண்டுதலில் செல்போன் நிறுவனங்கள் இதுபோன்று செயல்பட்டுள்ளதா என்ற கேள்வி டெக் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது.

கடந்த மாதம் விவோ நெக்ஸ் எனும் ஆண்ட்ராய்ட் போனில் QQ ப்ரௌஸர், சிட்ரிப், டெலிகிராம் ஆப்களை இயக்கினால் உள்ளிழுக்கும் கேமரா தானாக  இயங்கி மேலே வந்து பயனர்களை படம்பிடிக்க தொடங்கியது. உள்ளிழுக்கும்படியான டிசைன் பயனர்கள் தாம் எப்போது கண்காணிக்கப்படுகிறோம் என்பதையும் அறிய உதவுகிறது. இதுகுறித்த இணையநிறுவனமான டென்சென்ட், "QQ ப்ரௌஸர் க்யூஆர் கோடுகளை படம்பிடிக்க வசதியாக கேமரா இயங்குகிறது. ஆனால் பயனர் விரும்பினால்தான் அதில் போட்டோக்களும் ஆடியோவும் பதிவாகும்" என புதுமை பதிலை கூறியுள்ளார். வேறு ஆப்கள் கேமராக்களை பயன்படுத்துகிறதா என பயனர்கள் சோதித்தபோது பைடு ஆப் மாட்டியது. கேமரா மற்றும் குரல் பதிவு வசதியை பயனரின் அனுமதியின்றி தானாகவே பயன்படுத்துகிறது. வீடியோவில் பயனர் பேசுவதற்கு வசதியாக குரல்பதிவு வசதியை மாற்ற இதனை செய்கிறோம் என்கிறது பைடு நிர்வாகம். இதுதொடர்பாக பைடு நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டாலும் அரசு அதனை தள்ளுபடி செய்துவிட்டது.