பூனை புரளிகள்!
மியாவ்! மியாவ்!
பூனைகளுக்கு சிறந்த உணவு பால்!
இது நம் கற்பனை. பாலூட்டிகளுக்கு
வளர்ந்தபிறகு பால் என்பது செரிமானத்திற்கு சிக்கலான ஒன்று. குட்டியாக இருக்கும்போத
பாலின் கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றுக்காக பாலை பூனைகள் டிக் அடிக்கின்றன. வளர்ந்த
பூனைக்கு பால் செரிமானச்சிக்கலை ஏற்படுத்தும்.
பூனைகளுக்கு பயிற்சியளிக்க முடியாது.
நாய்களைப் போலவே பூனைகளுக்கும்
பயிற்சிகளை கொடுத்து பழக்க முடியும். ஆனால் நாய்களை விட பூனைகளிடம் சற்று பொறுமையாக
நடப்பது அவசியம். மீனையும், கோழியையும் பரிசாக கொடுத்து போர் அடிக்காதபடி பூனையை பழக்கப்படுத்தலாம்.
மனிதர்களின் மனதை பூனைகள் அறியும்!
நாய், பூனை இரண்டுமே சில வகை உடல்மொழிகள்
மூலம் தம் உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இவற்றில் நாய், மனிதர்களின் கவனத்தை
ஈர்ப்பதில் டாப்பில் உள்ளது. மனிதர்களின் உணர்வை, கருத்துக்களை புரிந்துகொள்வதில் பூனைகள்,
நாய்கள் சமர்த்து என்பதை அவை நம் முகத்தை பார்க்கின்றன என்பதை வைத்து உறுதியாக கூறமுடியாது.