மீம்ஸ் தடை!
விமர்சனத்திற்கு சிறை!
பல்வேறு மதங்களின் மூடத்தனங்களைக் குறித்த மீம் கிண்டல்கள்
இணையத்தில் சகஜம். ஆனால் ரஷ்யாவில் அதுபோல ஏதாவது பகடி, அங்கதங்களை உருவாக்கி பகிர்ந்தால் போலீஸ் ரெய்டு மற்றும் மத அடிப்படைவாதம் புகாரில்
சிறைவாசத்தோடு வங்கி கணக்குகளும் அரசால் முடக்கப்படும் அபாயம் ரஷ்யாவில் உருவாகியுள்ளது.
மத நம்பிக்கைகளை புண்படுத்தியதாக(சட்டம் 148) பர்னால் நகரவாசியான டேனில் மார்க்கின் என்ற பத்தொன்பது
வயது இளைஞர் ரஷ்யாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதோடு மோடுஸ்நாயா, பத்திரிகையாளர் துவா ஆகியோரும் மீம்கள் மற்றும் கட்டுரைகளுக்காக
கைது செய்யப்பட்டுள்ளனர். நேரடியாக வன்முறை, அடிப்படைவாதம் ஆகியவற்றை இவர்களின் எழுத்துக்கள் வெளிப்படுத்தவில்லை என்றாலும்
கருத்து சொல்லவே பயப்படவேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய அரசு போலியாக புகார்களை உருவாக்கி
அரசை விமர்சிப்பவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகியுள்ளது. ரஷ்ய டெக் நிறுவனமான Vkontakte இது குறித்து அரசை விமர்சித்துள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்ய உளவு ஏஜன்சி, 5 ஆயிரம் மனித உரிமை ஆர்வலர்களை கைதுசெய்து
சிறையிலடைத்துள்ளது.