கென்யாவின் பசுமை வீரர்!
கென்யாவின் பசுமை வீரர்!
கென்யாவிலுள்ள சமூக நீதி மையத்தில் கூடியிருக்கும் ஐம்பதிற்கும்
மேற்பட்ட மக்களிடம் உரையாற்றிய மொர்டெகாய் ஒகடா, என்ஜிஓக்கள் எப்படி கென்ய மக்களின் நிலத்தை மக்களின் கைகளிலிருந்து விலங்குகளின்
பாதுகாப்பு என்று சொல்லி பறித்ததை விளக்க அரங்கு எங்கும் ஆமோதிக்கும் குரல்கள் எழுகின்றன. "வனப்பாதுகாப்பு நேர்மையுடன் நடப்பதில்லை. ஆப்பிரிக்காவில் வனம் அழிகிறது என போலியாக கண்ணீர் விடுபவர்கள் வனத்தை கருப்பின
மக்களிடமிருந்து பிரிக்கவே முயல்கின்றனர்" என பளீரென கென்ய அரசியலை பேசுகிறார் ஒகடா.
மக்களுக்கு முன்னுரிமை எனும் கோஷத்தை இயற்கை பாதுகாப்பில்
முன்வைத்து செயல்படும் ஒகடா, கென்யாட்டா பல்கலையில் சூழலியல் படிப்பில்
பிஹெச்டி முடித்துள்ளார். காண்டாமிருகம் உள்ளிட்ட அரிய விலங்குகளை
காப்பாற்றவென பெரும் நிலப்பரப்பை வேலியிடுவதை ஆதரிக்கும் சூழலியலாளர்களை விலைபோனவர்கள்
என வசைபாடுகிறார் ஒகடா. இதனால் பிற கால்நடைகளுக்கான உணவு பறிபோகும்
என்பது இவரின் கருத்து. "இயற்கை பாதுகாப்பு என்பது மனிதநேயத்துடன்
அமையவேண்டும் என்பதே எங்களது விருப்பம்" எனும் ஒகடாவை இவாஸோ லயன்ஸ் எனும் அமைப்பைச்
சேர்ந்த ஷிவானி பல்லா ஆதரிக்கிறார். கென்யாவின் லைக்கிபியாவில் வனப்பாதுகாப்பு
என உள்ளூர் மக்களையும் கால்நடைகளையும் அங்கு கொண்டு செல்ல தூண்டுதலாக இருந்தது ஒகடாவின்
சாதனை.