தலித்துகள் விரைவில் அமைதியாவார்கள்!



Image result for chirag paswan





முத்தாரம் Mini

வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாக கிளர்ந்தெழும் தலித்துகளின் கோபத்தின் அரசியல்ரீதியான தாக்கம் என்ன?

2014 ஆம் ஆண்டைவிட நாங்கள் ஆற்றல் கொண்டவர்களாக மாறியுள்ளோம். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் எங்களுக்கு ஆதரவாக உள்ள நிலையில் பழைய சட்டத்தில் கமா கூட மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எதிர்காலத்தில் அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம் நம்புங்கள்.

தலித்துகள் முஸ்லீம்கள் மீதான படுகொலைகள் நிற்கவில்லையே?

வதந்தி படுகொலைகளுக்கு எதிர்ப்பான குரலை தொடர்ச்சியாக எங்கள் கட்சி எழுப்பி வருகிறது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் பல்வேறு மாநிலங்களுக்கு அறிக்கை அனுப்பி செயல்படும் விதம் திருப்தியளிக்கிறது.

தலித்துகள், முஸ்லீம்கள் பீகாரில் பிரிவினைக்குட்படவில்லை என கூறமுடியுமா?

என்னுடைய தொகுதியில் முஸ்லீம், தலித்துகள், பழங்குடிகள் என அனைவரும் ஒன்றுபோல்தான். போலிச்செய்திகள் எங்களை எதிராக சித்தரிக்கலாம். மேற்சொன்ன இனக்குழுக்கள் சாதியால் ஒன்றுபோல பாதிக்கப்பட்டவர்கள். தலித்துகள் இன்று கோபப்பட்டாலும் பின்னாளில் நிதானமாகிவிடுவார்கள்.  

-சிராக் பஸ்வான், லோக்ஜனசக்தி கட்சி




பிரபலமான இடுகைகள்