மருந்து தருவதற்கு எடையும் வயதும் முக்கியமா?
மருந்துக்கு வயது முக்கியமா?
நிச்சயமாக. அலோபதி மட்டுமல்ல, சித்தா,
ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவமுறைகளிலும் நோயாளியின் வயது மட்டுமல்ல
எடையும் மிக முக்கியம். வயதான நோயாளிகளுக்கு அவர்களின் சிறுநீரகம்
மற்றும் கல்லீரலின் செயல்பாடு திறன் குறைந்திருக்கும். குழந்தைகள்,
இளைஞர்கள் ஆகியோருக்கு செயல்திறன் அதிகம் என்பதால் மருந்துகளின் அளவும்
முதியவர்களோடு ஒப்பிடும்போது மாறுபடும். புற்றுநோய் உள்ளிட்ட
நோய்களுக்கு எதிர் நுண்ணுயிரி மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது பிஎம்ஐ
உள்ளிட்ட விவரங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்கிறார் இங்கிலாந்து மருத்துவ சங்கத்தைச்
சேர்ந்த பேராசிரியர் டொனால்டு சிங்கர்.