வெடிகுண்டுகளை வைஃபை மூலம் கண்டுபிடிக்கலாம்!
வைஃபை பாதுகாப்பு!
பொது இடங்களில் நடைபெறும்
குண்டுவெடிப்புகளை தடுக்கும் கேமரா, ஸ்கேனர் தொழில்நுட்பத்திற்கும், அதன் பராமரிப்பு ஆட்களுக்கும்
அதிக செலவு பிடிக்கிறது.
வைஃபை மூலம் ஒருவரின் பைகளிலுள்ள
திட, திரவ பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்பதே
பிங்காம்டன், இந்தியானாபோலிஸ், நியூ ப்ரூன்ஸ்விக்,ம ரட்ஜெர்ஸ் உள்ளிட்ட பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு.
திரவப்பொருட்களின்(நீர், அமிலம், மது) அளவைக் கூட வைஃபை
மூலம் துல்லியமாக கண்டுபிடிக்கலாம் என்பதே இம்முறையின் சாதனை. மூன்று வைஃபை ஆன்டெனாக்களை கொண்டுள்ள இக்கருவி, பதினைந்து
வகையான பொருட்களை கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. வெடிகுண்டுப்பொருட்களை
கண்டறிவதில் 99 சதவிகிதமும், உலோகப்பொருட்களை
கண்டறிவதில் 98 சதவிகிதமும், திரவப்பொருட்களை
கண்டறிவதில் 95 சதவிகிதம் துல்லியமாக இக்கருவி செயல்படுகிறது.
"இம்முறையில் அதிக ஆட்கள் உதவியின்றி பாதுகாப்பை உறுதியாக அமைக்கலாம்"
என்கிறார் ஆராய்ச்சி குழு துணைத்தலைவரான யின்கியிங் சென்.