நவீன தாமஸ் எடிஸன் இவர்தான்!
உலகின்
மாஸ்டர் கண்டுபிடிப்பாளர்!
உலகமே கால்பந்து காய்ச்சலில் வீழ்ந்துகிடந்த அந்நேரத்திலும்
தாய்லாந்து சிறுவர்களை காப்பாற்ற மெனக்கெட்டு மினி நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி ஆச்சரியப்படவைத்திருக்கிறார்
நவீன தாமஸ் எடிசனான எலன் மஸ்க்.
டெஸ்லாவின் பெயரை நீக்கி நிறுவனத்தை
தனதாக்கியது, ஊழியர்களின் மின்னஞ்சல் எழுத்துப்பிழையை விமர்சிப்பது,
ஆறிய காபியை சந்திப்பு டேபிளில் ஊற்றுவது, உற்பத்தி
தாமதத்திற்கு மூத்த அதிகாரிகளை அவர்களின் மனைவி முன்னால் வசைபாடுவது என்பது மஸ்கின்
சிஇஒ குணங்கள்.
அதற்கு மாற்றாக இன்னொருபுறம், பல்வேறு துறைகளிலும் சிறப்பாக கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் மாணவர்களுக்கு
அறக்கட்டளை உதவிகளை வழங்குவது, வாரத்திற்கு நூறு மணிநேரங்கள்
உழைப்பது, அத்தனை தொழில்நுட்பங்களிலும் தொழில் தொடங்குவது என
அதிரடிப்பது இவரது ஸ்டைல். "தலை காயமுறும்படி நீங்கள் யோசிக்கவேண்டும்.
புதிதாக யோசித்து யோசித்து இரவு தூங்கச்செல்லும்போது உங்கள் ஒவ்வொருவரின்
தலையிலும் காயம் கட்டாயம் இருக்கவேண்டும்" என்று அதிகாரிகளை
மிரட்டுபவர் செவ்வாயில் இறக்க விரும்பி அங்கு குடியிருப்புகளை அமைக்க யோசித்து வருகிறார்.
டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் மட்டுமல்லாது அதிலேயே
எலக்ட்ரிக் ட்ரக்குகள், எலக்ட்ரிக் சூப்பர்சோனிக் ஜெட்
என வானளவு தாண்டியும் விரிகிறது மஸ்கின் திட்டங்கள். அதிலொன்றுதான்
நியூராலிங்க் எனும் 80 பில்லியன் மனித நியூரான்களின் மூலம் கணினியை
இயக்கும் பிளான். "எடிசன், உலகு இயங்கும்
விதம் குறித்தும், ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகளை பயன்படுத்துவதில் புரட்சியும்
செய்தார் எனில் எலன் மஸ்க் மக்களை கரிம எரிபொருட்களிலிருந்து காப்பாற்றி செவ்வாயில்
குடியமர்த்த நினைக்கிறார்" என்று குறிப்பிடுகிறார் நியூயார்க்
பல்கலைக்கழக பேராசிரியர் மெலிசா ஷில்லிங்(quirky,
PublicAffairs, 2018) முதல் மனைவி ஜஸ்டின் வில்சன்,
இரண்டாவது மனைவி தலுலா ரைலி, பெண்தோழி ஆம்பர்
ஹியர்ட் என பெண்கள் உடனான உறவு மிகமிக சிக்கலானதாகவே மஸ்குக்கு இருந்தது.
2014 ஆம் ஆண்டு தன் பெண்தோழியுடன் ஜாலி டூர் கிளம்பியபோது அவரின் ராக்கெட்
வெடித்தது. பத்திரிகையாளர்களிடம் பேசிய எலன் மஸ்க்,
"முதல்முறை நாங்கள் வெளியேற சென்றபோது ரிச்சர்ட் பியர்சன் ராக்கெட்
வெடித்தது. அடுத்தமுறை அதேவாரத்தில் விடுமுறை எடுத்தபோது எங்கள்
நிறுவன ராக்கெட் வெடித்தது. இதிலிருந்து வார விடுமுறை எடுக்ககூடாது
என்ற உறுதிக்கு வந்தேன்" என சீரியசாக பேசினார் மஸ்க்.
தொழில்புலி ப்ரோ நீங்க!
|