பிரிவினை நினைவுகளை மீட்கும் மியூசியம்!
பிரிவினை மியூசியம்!
பாகிஸ்தானின் லாகூரில் வசிக்கும்
தன் பாட்டியிடம் பேசியபோதுதான் 1947 ஆம்
ஆண்டு பிரிவினை பற்றிய வேதனை நிரம்பிய வரலாறு மல்லிகா அலுவாலியாவுக்கு தெரிய வந்திருக்கிறது.
பஞ்சாபில் அமிர்தசரசில் பிரிவினை நினைவுகளுக்கான
அருங்காட்சியகத்தை மல்லிகா அலுவாலியா அமைத்து வேதனை நினைவுகளை அடுத்த தலைமுறை அறிய
உதவியிருக்கிறார். 1947 ஆம் ஆண்டு நூல்கள், திரைப்படங்களில் பிரிவினைக்கால கற்பழிப்புகள், படுகொலைகள்
ஆகியவை பற்றிய சம்பவங்கள் இடம்பெற்று நம்மை இன்றுவரையும் குற்றவுணர்வுக்கு உள்ளாக்கி
வருகின்றன. "எந்த பதிலும் அளிக்கப்படாத சம்பவம் அது"
எனும் மல்லிகா, கேட்ஸ் பவுண்டேஷனில் பணியாற்றிய
முன்னாள் ஊழியர். அருங்காட்சியகத்தில் உடைந்த பெட்டிகள்,
சமையல் பாத்திரங்கள், திருமண சேலை, டைரி ஆகியவற்றை சேகரித்து அதன்மூலம் சொல்ல மறந்த கதைகளை மக்களின் மனதோடு பேசுகிற
மல்லிகா, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலையில் இயற்பியல் பட்டதாரி.
ஹார்வர்டில் எம்பிஏ பட்டம் வென்ற மல்லிகா, அக்டோபர்
2016 அன்று மியூசியத்தை தொடங்கியுள்ளார். இதனை பார்வையிட்ட பிரிவினை அகதிகளில் ஒருவரான முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்,
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிநிரம்பிய அத்தியாயம் என மியூசியத்தின்
பதிவேடுகளில் எழுதியுள்ளார்.