பாம்பின் விஷத்திற்கு சவால்!
பிட்ஸ்!
கொசுக்களின் பறக்கும் வேகம் 1Mph. சிறிய மின்விசிறி ஒன்றே இதனை விரட்டிவிட போதுமானது.
இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு வீரர்களை விட அதிகம் பலியானது இந்திய வீரர்கள்தான்.
அமெரிக்காவில் நடந்த முதல் வங்கிக்கொள்ளையில் பறிபோன தொகை 1,62,821 டாலர்கள். கொள்ளையர் அதே வங்கியில் அப்பணத்தை முதலீடு செய்து மாட்டிக்கொண்டார்.
காற்றில் பரவி ஒரு கி.மீ தூரத்திலுள்ள மக்களை வாந்தியெடுக்க வைக்கும் துர்நாற்றம் கொண்ட வேதிப்பொருளின்
பெயர் Thioacetone.
அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரைச்சேர்ந்த டிம் ஃப்ரீடே, பதினாறு ஆண்டுகளில் 160 பாம்புகளிடம் கடிவாங்கி, விஷத்திற்கு எதிரான தன்மையை பரிசாக பெற்றுள்ளார்.