மக்கள் பதிவேடு ஆபத்து!
மிரட்டும் குடியுரிமை மசோதா!
1951 ஆம் ஆண்டு மக்கள்
தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு அசாமில் வாழும் பிறபகுதி மக்கள் குறித்து NRC எனும் ஆவணம்
உருவாக்கப்பட்டது. பின்னர் 2015 ஆம் ஆண்டு இந்த ஆவணம் மேம்படுத்தப்பட்டு அந்நிய மக்களின்
விவரங்களோடு அவர்களின் உறவுகளும் பதிவு செய்யப்பட்டனர்.
2017 ஆம் ஆண்டு டிசம்பரில்
என்ஆர்சி மசோதாவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டது. இம்மசோதாவின் நடைமுறைப்படுத்தலால்
30-50 லட்சம் மக்கள் இந்தியக்குடியுரிமையை இழக்கவிருக்கின்றனர்.
வங்காளதேச அகதிகள், பிற
மாநில மக்களுக்கு இந்திய அரசு வேலை செய்வதற்கான பெர்மிட்களை வழங்குவதும், வாக்களிக்க,
நிலங்களை வாங்க தடைவிதிப்பதையும் தீர்வாக அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர்.
அதேசமயம் அகதி மக்களுக்கு
கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை இந்திய அரசு உறுதி செய்யவேண்டிய நிர்பந்தம் உள்ளதால், தோராயமாக
30 ஆண்டுகளுக்கு பிறகு குடியுரிமை வழங்கும் வாய்ப்பு உள்ளது.
குடியுரிமைக்கான 3.30 கோடி
விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதில் 3.10 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியில் வந்துள்ளன.
6.6 கோடி மக்களின் தகவல்கள் ஆவணங்களுடன் டிஜிட்டலாக்கப்பட்டு உள்ளன.