ஆய்வகத்தில் தயாரிக்கலாம் நுரையீரலை!



Image result for lab created lung




ஆய்வகத்தில் நுரையீரல்!

உலகில் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கான நுரையீரல் உறுப்பு தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. அமெரிக்காவில் மட்டும் 1,400 பேர் தங்கள் பெயரை பட்டியலில் பதிவு செய்துவிட்டு நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு காத்துக்கிடக்கின்றனர். டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு மூலம் இனி ஆய்வகங்களிலேயே நுரையீரல்களை தயாரிக்கும் வசதி ஏற்படப்போகிறது.
பன்றியின் செல்களின் மூலம் உருவாக்கிய நுரையீரல் உறுப்பை வெற்றிகரமாக பன்றியின் உடலில் பொருத்தி வெற்றிபெற்றுள்ளனர். ஆய்வகத்தில் முப்பது நாட்கள் கவனமாக வளர்க்கப்பட்ட நுரையீரல் பன்றியின் உடலில் பொருத்தப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி பிரச்னையின்றி செயல்படுவது புதிய நம்பிக்கையளித்துள்ளது. இது குறுகியகால ஆய்வு என்பதால் அதிக காலம் உறுப்பை கவனிக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் தட்டுப்பாட்டை குறைப்பதன் மூலம் ஆய்வகத்தில் இதனை தயாரித்து உறுப்புமாற்று அறுவைசிகிச்சைகளுக்கான பட்டியல் நீளத்தையும் குறைக்கமுடியும்.