ஐபோனை உடைக்கும் தேசபக்தி!







Image result for brahmanandam

பிட்ஸ்!

பப்பி ஐஸ்க்ரீம்!

தைவானின் காவோஷியங் நகரிலுள்ள ஜே.சி.கோ ஆர்ட் கிச்சன் கஃபேவில்,  நாய்க்குட்டிகளைப் போன்ற அச்சு அசல் வடிவில் ஐஸ்க்ரீம்களை டிசைன் செய்து வாடிக்கையாளர்களை திகைக்க வைத்துள்ளனர். பல்வேறு ப்ளேவர்களில் லேப்ரடார், பக் வகை நாய்களின் உருவத்தில் செய்து தரும் ஐஸ்க்ரீம்களை சாப்பிடுவதா, ரசிப்பதா என வாடிக்கையாளர்கள் மலைத்துபோயுள்ளனர். 

சதுரங்க ஆசை!

அமெரிக்காவின் மிசௌரியைச் சேர்ந்த உலக செஸ் செஸ் சங்கத்தினர், 20 அடி உயரத்தில் ராஜா செஸ் காயை ஆப்பிரிக்க மரத்தில்(sapele mahogany) உருவாக்கி கின்னஸ் செய்துள்ளனர். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டில் 14 அடியில் செஸ் காய்களை செயின்ட் லூயிஸ் அமைப்பினர் உருவாக்கியிருந்தனர். “செஸ் அமெரிக்காவில் தாக்கம் ஏற்படுத்திய விளையாட்டு என்பதை இப்படைப்பு வலியுறுத்தும்” என்கிறார் சங்க ஒருங்கிணைப்பாளரான பிரையன் ஃப்ளவர்ஸ்.

கண்ணுக்குள் லென்ஸ்!

இங்கிலாந்தைச்சேர்ந்த பெண்மணி அங்குள்ள மருத்துவமனையில் கண்களில் வலி என அட்மிட் ஆனார். இடதுகண்ணின் இரப்பையில் வலி என்றவரை ஸ்கேன் செய்தபோது லென்ஸ் உள்ளே இருப்பது உறுதியாக, அறுவை சிகிச்சை மூலம் காலாவதியான லென்ஸ் அகற்றப்பட்டுள்ளது. “28 ஆண்டுகளுக்கு முன்பு இப்பெண்மணி பயன்படுத்திய லென்ஸ் இது” என்கிறது ஷிர்ஜுன் படேல் மருத்துவக்குழுவின் அறிக்கை. அபார விழிப்புணர்வு மேடம்!

ஐபோனை உடை!

துருக்கி தேசபக்தர்கள் தம் நாட்டிற்கு எதிராக அமெரிக்கா விதிக்கும் வரி, பொருளாதார தடைகளுக்கு சொந்த செலவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தாம் வாங்கியுள்ள ஐபோன்களை, கோலாக்களை, டாலர்களை சுத்தியலால் உடைத்து நொறுக்கி தேசபக்தியை ஸ்ட்ராங்காக நிரூபித்து ஏராளமான வீடியோக்களை அப்லோடி வருகின்றனர். பொதுச்சொத்துக்களுக்கு பிரச்னையில்லை!


பிரபலமான இடுகைகள்