இடுகைகள்

பிரிதிவிராஜ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழிக்குப்பழி வாங்கத் துடிக்கும் மாபிஃயா குழுக்களின் அதிகார, ரத்தவெறி! - காப்பா - ஷாஜி கைலாஷ்

படம்
காப்பா - ஷாஜி கைலாஷ்   காப்பா இயக்கம் ஷாஜி கைலாஷ் பிரிதிவிராஜ், அபர்ணா, அன்னா பென், ஆசிஃப் அலி திருவனந்தபுரத்தில் வாழும் கொட்டா மது, பினு என இரு குழுக்களுக்கு இடையிலான சண்டையும், வாக்குவாதங்களும்தான் படம். மாஃபியா குழுக்களுக்கு இடையிலான சண்டை, அதில் பறிபோகும் உயிர்கள், வன்மம் ஆகியவற்றை நிதானமாக விவரிக்கிற படம். படத்தை ஆசிஃப் அலிதான் பெரும்பாலான காட்சிகளில் நகர்த்துகிறார். அவர் தனது மனைவி பினுவை, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அவரின் வீட்டிற்கு முன் போலீஸ்காரர் ஒருவர் வந்து காத்து நிற்கிறார். அவர் ஆனந்த் (ஆசிஃப் அலி), பினு (அன்னா பென்) ஆகியோரைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது பினுவின் பெயரின் பின்னே உள்ள திரிவிக்ரமன் என்ற பின்னொட்டு அவரை திடுக்கிடச் செய்கிறது. அவர் ஆனந்தை தனியாக அழைத்து விஷயத்தைச் சொல்கிறார். அதற்காக அவனிடம் 50 ஆயிரம் ரூபாய் காசும் வாங்கிக்கொள்கிறார். ஆனந்தைப் பொறுத்தவரை அவன் பினுவை மணந்துகொண்டதால், அவளை எப்படியேனும் பழிக்குப்பழி வன்மத்தில் இருந்து காப்பாற்ற நினைக்கிறான்.. ஆனால் அவனே எதிர்பார்க்காதபடி விவகாரத்தில் மாட்டிக்கொள்

மஞ்சள் நிற தங்கமா, தங்க குணம் கொண்ட மனம் முக்கியமா? கோல்ட் - அல்போன்ஸ் புத்திரன்

படம்
    கோல்ட் மலையாளம் கதை, திரைக்கதை, அனிமேஷன், படத்தொகுப்பு, கிராபிக்ஸ், சண்டைப் பயிற்சி, இயக்கம் – அல்போன்ஸ் புத்திரன் இசை – ராஜேஷ் முருகேசன் தமிழ் டப் படத்தை மலையாள மொழியில் பார்ப்பதே நல்லது. ஆங்கில சப் டைட்டில் போட்டுக்கொள்ளலாம். மஞ்சள் நிற தங்கத்திற்கு மதிப்பு அதிகமா, தங்கத்தைப்   போன்ற மனசுடைய மனிதனுக்கு மதிப்பு அதிகமா என நிறுத்துப் பார்க்கிற படம். அல்போன்ஸ் புத்திரன் படத்தில் என்ன இருக்கும்? நான் லீனியர் படத்தொகுப்பு, அதிரடிக்கும் இசை, வித்தியாசமான சண்டைகள் என அத்தனையுமே இருக்கிறது. ஆனால் முக்கியமான விஷயம், படத்தில் எதுவுமே மனதைக் கவரும்படி இல்லை. படம் பார்த்தால் அதில் வரும் பாத்திரங்கள், நகைச்சுவை என ஏதேனும் பிடித்திருக்கிறது என்று சொல்லுவார்கள் அல்லவா? ஆனால் கோல்ட் படத்தில் உள்ள எதையும் அப்படி சொல்லமுடியாது. அனைத்துமே அரைகுறையாக இருப்பது போலவே இருக்கிறது. கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட படம் போல இருக்கிறது. எனவே, ஏதோ ஒரு இடத்தில் அடைக்கப்பட்டது போல இருக்கிறது. உருப்படியான விஷயங்களைப் பார்ப்போம். பிரிதிவிராஜ்தான் தயாரிப்பு, நடிப்பு எல்லாமே. நடிப்பை சிறப்பாக செய்