மஞ்சள் நிற தங்கமா, தங்க குணம் கொண்ட மனம் முக்கியமா? கோல்ட் - அல்போன்ஸ் புத்திரன்
கோல்ட்
மலையாளம்
கதை, திரைக்கதை,
அனிமேஷன், படத்தொகுப்பு, கிராபிக்ஸ், சண்டைப் பயிற்சி, இயக்கம் – அல்போன்ஸ் புத்திரன்
இசை – ராஜேஷ்
முருகேசன்
தமிழ் டப்
படத்தை மலையாள
மொழியில் பார்ப்பதே நல்லது. ஆங்கில சப் டைட்டில் போட்டுக்கொள்ளலாம்.
மஞ்சள் நிற
தங்கத்திற்கு மதிப்பு அதிகமா, தங்கத்தைப் போன்ற
மனசுடைய மனிதனுக்கு மதிப்பு அதிகமா என நிறுத்துப் பார்க்கிற படம்.
அல்போன்ஸ்
புத்திரன் படத்தில் என்ன இருக்கும்? நான் லீனியர் படத்தொகுப்பு, அதிரடிக்கும் இசை,
வித்தியாசமான சண்டைகள் என அத்தனையுமே இருக்கிறது. ஆனால் முக்கியமான விஷயம், படத்தில்
எதுவுமே மனதைக் கவரும்படி இல்லை.
படம் பார்த்தால்
அதில் வரும் பாத்திரங்கள், நகைச்சுவை என ஏதேனும் பிடித்திருக்கிறது என்று சொல்லுவார்கள்
அல்லவா? ஆனால் கோல்ட் படத்தில் உள்ள எதையும் அப்படி சொல்லமுடியாது. அனைத்துமே அரைகுறையாக
இருப்பது போலவே இருக்கிறது. கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட படம் போல இருக்கிறது. எனவே,
ஏதோ ஒரு இடத்தில் அடைக்கப்பட்டது போல இருக்கிறது.
உருப்படியான
விஷயங்களைப் பார்ப்போம். பிரிதிவிராஜ்தான் தயாரிப்பு, நடிப்பு எல்லாமே. நடிப்பை சிறப்பாக
செய்திருக்கிறார். அதுவும் ஸ்பீக்கர் வடிவில் தங்கத்தைப் பார்த்தபிறகு அவர் நடந்துகொள்ளும்
முறைகள்.. பிறர் சொல்லும் விஷயங்கள் கூட அவர் காதில் அப்படியே மங்கிக்கொண்டே செல்வது...
முதல் பாட்டிற்கு தீப்தி சதி பிரிதிவியோடு வந்து உற்சாக ஆடுகிறார். அவரையே நாயகியாக
போட்டிருக்கலாம். உற்சாகமாக முகம். அதிரடியான ஆட்டம். இந்த படத்திற்கு சுமங்கி பாத்திரத்தில்,
நயன்தாரா எதற்கு, அவர் பாப்கார்ன் சாப்பிடுவதை விட படத்தில் பெரிதாக எதையும் செய்யவில்லை.
படத்தின் இறுதிக் காட்சியில் சோளப்பொரியை வாயில் சரியாக எறிய முயற்சி செய்கிறார். ஆண்டவன்
அதற்கு அனுகிரகம் செய்யட்டும்.
காட்சி ரீதியாக
படம் நிறைய இடத்தில் தேங்குகிறது. அதையெல்லாம் ராஜேஷ் முருகேசன் தனது இசை மூலம் சரிசெய்ய
நினைக்கிறார். ஆனாலும் அதிக சுவாரசியம் இல்லாத திரைக்கதையை சரிசெய்யவே முடியவில்லை.
படத்தில் நினைவில் நிற்கும் பாத்திரங்கள் என ஜோஷி, ஐடியா ஷாஜி, பாஸ் ஃபிரெட்டி என மிகச்சிலரைத்தான்
நினைவுகூர்கிறோம். அதிலும் பாஸ் ஃபிரெட்டிக்கு இன்னும் காட்சிகளை ஒதுக்கியிருக்கலாம்.
ஜோஷிக்கு
பிரச்னை ஏற்படுத்தும் விஷயமாக படத்தில் ஏதுமில்லை. அவர் கடையை, சுமங்கலி காம்ப்ளெக்ஸில்
இருந்து காலிசெய்ய சொல்கிறார் அதன் உரிமையாளர். ஒரு வாரம் அதற்கான காலக்கெடு. அங்கேயே
இருக்க ஜோஷி ஏதாவது முயற்சி செய்கிறாரா என்றால் இல்லை. அவரை வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்க
காம்ப்ளெக்ஸ் முதலாளியும் ஏதும் செய்யவில்லை. எனவே, ஒரு செயல், அதற்கான எதிர்வினை என
ஏதும் நடக்கவில்லை.
ஜோஷியின்
வீட்டிற்கு முன்பாக வந்து நிற்கும் பொலிரோ. அதில்தான் தங்கம் இருக்கிறது. அதை எடுக்க
பறிக்க நினைக்கும் கூட்டம் சற்று புத்திசாலியாக
இருப்பார்கள் அவர்களாவது ஜோஷிக்கு டஃப் கொடுப்பார்கள் என்றால் அதுவும் இல்லை.
ஜோஷிக்கு இருக்கும் ஒரே நெருக்கடி, போலீஸ்தான். அவர்கள் அந்த வண்டியை எடுத்துச்செல்ல
நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு தடையாக அவர்களது வளாகத்தில் லாரி ஒன்று நிற்கிறது. இதுதான்
முரண் என்பதால் சுவாரசியம் பெரிதாக இல்லை.
இதில் பார்க்கும்போது
தோன்றுவது ஜோஷி நேர்மையானவனா, பேராசை பிடித்தவனா என்பதுதான். அதுமட்டுமே தெரிந்துகொள்வது
பெரிய ஆச்சரியமாகவெல்லாம் இல்லை. சுமங்கலி நகைக்கடை ஓனர்தான் தங்கத்தை அனுப்பி வைக்கிறார்
எனில் அவ்வளவு கோடி தங்கத்தை எளிதாக பிறருக்கு விட்டுக்கொடுப்பவர் போல தெரியவில்லை.
தங்கத்தை மஞ்சள் பிசாசு என்ன சொல்வதன் அர்த்தம் என்ன? அந்த பேராசை உணர்வு படத்தில்
பாத்திரங்களுக்கு தோன்றுவதில்லை. அப்படி தோன்றும்போது நடக்கும் விபரீதங்களை காட்சிகளாக
சேர்த்திருந்தால் படம் சுவாரசியமாக இருந்திருக்க வாய்ப்புண்டு.
படத்தில்
காதல் காட்சிகளோ, ஜோஷியின் இயல்பு பற்றி அறிய எந்த விஷயங்களும் நமக்கு கிடைப்பதில்லை.
அநேகமாக படத்தின் இரண்டாம் பகுதி வந்தால் அதிலேனும் சுவாரசியமான விஷயங்கள் இருந்தால்
பார்க்கலாம்.
கவரிங்
கோமாளிமேடை
டீம்
ராஜேஷ் முருகேசனின் இசைக்கோவைகளை தவறவிடாதீர்கள். யூட்யூப் அல்லது வேறு வலைத்தளங்களில் தரவிறக்கி கேளுங்கள்.....
கருத்துகள்
கருத்துரையிடுக