சைக்கோ கொலைகாரர்கள் காவல்துறையில் சிக்கிக்கொள்வதற்கான காரணங்கள்

 


சைக்கோ கொலைகார்கள் எப்படி மாட்டிக்கொள்கிறார்கள், கொலை செய்து என ஒற்றை பதிலைக் கூறிவிடலாம். ஆனால் அது உண்மையல்ல.

வீடு, வாழும் அறையில் கிடைக்கும் ஆதாரங்கள், விசாரணை

கொலைகாரரிடம் இருந்து உயிர் பிழைத்தவர் சொல்லும் வாக்குமூலம்

கூட்டாளிகள் கொலையாளிக்கு எதிராக திரும்புவது

கொலையாளியின் செயல்பாட்டைப் பார்த்து சந்தேகப்பட்டு காவல்துறைக்கு தகவல் சொல்லுவது

தங்களுக்கு தெரிந்த உறவினர், நண்பர்களை கொலையாளி கொல்வது

வேறு வழக்கில் கைதாகி கொலை செய்தேன் என ஒப்புக்கொள்வது

ஊடகங்களுக்கு அழைத்து அல்லது கடிதம் எழுதி குற்றங்களை ஒப்புக்கொள்வது

தாங்களே குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைவது

கொலை செய்து அல்லது உடலை அப்புறப்படுத்தும்போது மாட்டிக்கொள்வது

காவல்துறை தகவல் மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்படுவது

சந்தேகப்படும்படி நடந்துகொள்வது

கொலையாளி தற்கொலை செய்துகொண்டு இறந்தபிறகு நடைபெறும் விசாரணை

இது பெரும்பாலான வழக்குகளை ஆராய்ந்து செய்த முடிவுகளின் படி உளவியலாளர்கள் தொகுத்தது. காலம்தோறும் இதில் மாறுதல்களும் நடைபெறலாம்.

சைக்கோபாத்களைப் பொறுத்தவரை சமூகத்தின் எந்த விதிமுறைகளையும் பின்பற்ற மாட்டார்கள். இவர்களுக்கு சிறைதண்டனை அளிக்கப்பட்டாலும் தங்களது வசீகரமான செயல்பாடுகளால் எளிதாக சிறையிலிருந்து வெளியே வந்து குற்றங்களை செய்வார்கள். தன்னை மட்டுமே மையப்படுத்திய, யார் மீதும் எந்த கருணையும் பரிவும் இல்லாத வாழ்க்கையை வாழ்பவர்கள் உணர்வு ரீதியாக எந்த உறவுகளையும் உருவாக்கிக் கொள்ள முடியாதவர்கள் ஆவர்.

இந்த நூலை படிக்கும்போது இந்தளவு குற்றங்களைச் செய்பவர்கள் உலகில் இருக்கிறார்களா, நாம் வாழும் பகுதியில் வாழ்கிறார்களா என சந்தேகம் எழலாம். ஆனால் அவர்கள் எங்கும் இருக்கிறார்கள், மக்களோடு கலந்து வாழ்கிறார்கள். மேலும் இதற்கான எடுத்துக்காட்டுகளை டெய்லி பூந்தி நாளிதழைப் படித்தாலே அறியலாம்.அதன் செய்தியாளர் செய்தியை திரைப்படம் போல விவரித்தாலும் இறுதி உண்மையான குற்றம் என்னவோ உண்மை.

தொடர்கொலைகாரர்கள், வல்லுறவாளர்கள், திருடர்கள், குடும்ப வன்முறை குற்றவாளிகள், நிறுவனத்தில் நிதி மோசடி செய்பவர்கள், குழந்தைகளை சீண்டுபவர்கள், போதைப்பொருந்து விற்பவர்கள், சூதாட்டக்காரர்கள், உரிமம் இழந்த மருத்துவர்கள், ஒருங்கிணைந்த குற்றங்களை செய்யும் குழுக்கள், தீவிரவாதிகள், மத தலைவர்கள், வணிகர்கள், இரக்கமில்லாத வணிகர்கள் ஆகியோர் சமூகத்தில் இருப்பவர்கள்தான். இவர்களில் யார் வேண்டுமானாலும் சைக்கோபாத்களாக இருக்கலாம்.  

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை