உளவியலாளர் ராபர்ட் ஹரேவை ஏமாற்றிய மோசடிக்காரன்!

 










சைக்கோபாத்களை பொறுத்தவரை வசீகரமான ஆட்கள். நம்பினால் நிச்சயம் மோசம் செய்வார்கள். தெலுங்கில் ஊசரவல்லி என்பார்கள். பச்சோந்தி தான் இதன் பொருள். தனக்கு தேவைப்படும் விஷயங்களை அடைய தன்னை  மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எங்காவது தங்களின் அடையாளம் வெளிப்பட்டு பிரச்னை ஆகிறது என தெரிந்தால் உடனே கிளம்பி சென்றுவிடுவார்கள். பிறகு அங்கென்ன வேலை?

எளிதில் பிறர் நம்பும்படியும், சோதிக்கமுடியாதபடியும் உள்ள வேலைகளை எடுத்துக்கொள்வார்கள். உளவியலாளர், நிதி ஆலோசகர், அமைச்சர்கள் என  பல்வேறு பதவிகளில் பணிகளில் உள்ளதாக அடித்து விடுவார்கள். உடனே சந்தேகம் கொள்ள முடியாதபடி சில துறை சார்ந்த வார்த்தைகள், வாசகங்கள் என  பலதையும் பேசி ஆச்சரியப்படுத்துவார்கள்.

 கனடாவில் வான்கூவர் நகரில் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இருந்தார். ஓராண்டுக்கு எளிய, சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்தார். இதனால் நிறைய நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். உடல், பொருளாதாரம், மன உளைச்சல் ஆகியவற்றாலும் பாதிக்கப்பட்டனர். இதேநபர் பின்னாளில் இங்கிலாந்தில் உளவியலாளராக இருந்தார். ஆனால் இம்முறை எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரை சரியாக திட்டமிட்டு கைது செய்தது. ஆனால் இவர்கள் கைது செய்வதற்கு முன்னரே காவல்துறை அதிகாரி, சமூக செயல்பாட்டாளர், சுங்கத்துறை அதிகாரி என வேலை செய்து பலரையும் ஏமாற்றியிருந்தார். எப்படி இத்தனை வேலைகளை தெரிந்தவராக நடிக்க முடிந்தது என்றபோது, நான் நிறைய நூல்களை படித்து தெரிந்துகொண்டேன் என்றார். இந்த நபருக்கு சிறை தண்டனை கிடைத்தாலும் அதன் கால அளவு குறைவுதான்.

எது எளிமையாக கிடைக்கிறதோ அதை பயன்படுத்திக்கொள்வதுதான் சைக்கோபாத்களின் லட்சியம். அந்தவகையில் ஆசிரியர், குழந்தைகளின் பள்ளி காவலர், ஆசிரியர், மருத்துவர், செவிலியர், கட்டிடங்களின் பாதுகாவலர் என வேலைக்கு ச் சேர்ந்த அங்குள்ள எளிய பலவீனமான ஆட்களை தங்களின் நலன்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். அந்த வகையில் குழந்தைகளை ஆசிரியர்கள் பாலியல் வேட்கைக்கு இரையாக்குகிறார்கள். இதனை எளிதாக கண்டுபிடிக்கவும் முடியாது.

இந்தியாவில் அரிய உலோகம் என இரிடியத்தை விற்பார்கள். அதை ஏமாந்து வாங்கும் ஆட்களைப் பற்றிய செய்திகளை டெய்லிபூந்தியில் அனைவரும்தானே படிக்கிறோம். ஆனால் இதை எப்படி திரும்ப திரும்ப சாத்தியப்படுத்துகிறார்கள். அதுதான் சைக்கோபாத்களின்  திறமை. திறமையாக பேசி பொய்யுடன் எந்த அளவில் உண்மையைக் கலக்குகிறோமோ அதுதான் வெற்றியைக் கொடுக்கிறது. ஒருவரை நம்பினால் அவரைப் பற்றிய விவரங்களை சொல்லும் விஷயங்களை அப்படியே நம்புவார்கள். இதுதான் விஷயம். அதை வைத்துத்தான் ஏமாற்று வணிகமும், மோசடிகளும் நடைபெறுகின்றன.

ராபர்ட் ஹரேவுக்கு ஒருமுறை விழா ஒன்றில் கலந்துகொண்டு பேச அழைப்பு வந்திருந்தது. பேசுவதற்கும் பயணத்திற்குமான பணத்தை கொடுப்போம் என ஒரு மனிதர் உறுதி கூறியிருந்தார். அவர் விழா நடத்துபவர், ஒருங்கிணைப்பாளராக இருக்கலாம். ஆனால் விழா நடக்கும் தினத்திற்கு முன்னரே விழா ஒருங்கிணைப்பாளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பல்வேறு பண மோசடிகளை செய்த காரணத்தால் அவரை கைது செய்தனர். பிணையில் வெளியே வந்தாலும் கூட உடனே காணாமல் போய்விட்டார். ராபர்ட் அவரை ஒரு முறை சந்தித்தபோது கூட அவநம்பிக்கை தோன்றவில்லை. அவர் கடன் கேட்டாலும் கூட ராபர்ட் தந்திருக்க வாய்ப்புண்டு.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்