சிறுவயதில் சிறுவர்களிடம் காணப்படும் குற்றத்தின் அடையாளங்கள்!
என் மகனை
என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இப்போது அவனுக்கு பதினைந்து வயதாகிறது.இதற்குள்
ஏழுமுறை சிறைக்கு சென்றுவிட்டு வந்துவிட்டான். ஒரு விஷயத்தை செய்து அவன் பிடிபட்டால்
அது தவறு. பிடிபடாவிட்டால் நல்லது என்று புரிந்துகொண்டு இருக்கிறான். நாங்கள் அவனை
அடித்தோம். மிரட்டினோம். மனநல சிகிச்சைகளை வழங்கினோம். ஆனால் எதுவும் அவனை மாற்றவில்லை
என தாயார் ஒருவர் ராபர்ட் ஹரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். சிலர், தங்களது மகன் பொய்யை
சொல்லி நிறைய சங்கடங்களை ஏற்படுத்துவார்கள்.
பெற்றோர்களுக்கு
தங்களது மகனை சைக்கோபாத் என்று சொல்லிவிடுவார்கள் என பயம் இருக்கிறது. அப்படி மருத்துவர்,
உளவியலாளர் சொல்லிவிடுவாரோ என்று டீனேஜ் பையன் சார் அவன் என மாற்றி பேசுவார்கள். ஆனால்
ஆய்வு அடிப்படையில் அறிகுறிகளை உணர்ந்தால் கசப்பான சைக்கோபாத் என்ற உண்மையை அவர்கள்
ஏற்றுத்தான் ஆகவேண்டும். வேறுவழியில்லை. ஏற்றாலும்
ஏற்காவிட்டாலும் மோசமான பொய் சொல்லும், கட்டற்ற வன்முறை, பிறரை ஏமாற்றும் குணம் கொண்டவர்கள்
மோசமான குற்றவாளிகளாக மாறுவார்கள் என்பது வரலாற்று உண்மை.
சில அறிகுறிகளைப்
பார்ப்போம்.
இயல்பாக தொடர்ச்சியாக
தேவையோ இல்லையோ பொய்களை சொல்லுவார்கள்.
உணர்வை, வலியை,
பிறர் படும் கஷ்டத்தை உணர மாட்டார்கள்.
பெற்றோர்,
ஆசிரியர், பள்ளி, விதிகள் என அனைத்துக்கும் அல்வா கொடுத்து ஏமாற்றுவார்கள்.
தண்டனைகளைப்
பற்றியெல்லாம் எந்த கவலையும் படமாட்டார்கள். அவர்கள் போக்கில் சென்றுகொண்டிருப்பார்கள்.
பள்ளியில்
உள்ள மாணவர்களிடம் பொருட்களைத் திருடுவார்கள்.
விலங்குகளை
சித்திரவதை செய்து கொல்வார்கள்
பொருட்களை
அடித்து உடைப்பார்கள். நெருப்பிட்டு எரித்து மகிழ்வார்கள்
உடலுறவுக்கான
ஆரம்ப கட்ட சோதனைகளை செய்வார்கள்.
வீட்டில்,
பள்ளியில் எங்கே இருப்பார்கள் என அவர்களுக்கே தெரியாது. அப்படி சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
உளவியலாளர்கள்
பைபிள் என கூறுவது டிஎஸ்எம் -4 எனும் நூலைத்தான். இந்த நூலில் சிறுவர்கள், வயது வந்தோர்
என தனியாக உளவியல் குறைபாட்டு வகைகள் பிரிக்கப்படவில்லை. மூன்று முக்கிய உப பிரிவுகளைப்
பார்ப்போம்.
அட்டென்ஷன்
டெஃபிசிட் ஹைப்பர் ஆக்டிவிட்டி டிஸார்டர்
அந்த வயதுடைய
சிறுவர்களை விட நிறைய செயல்களை செய்வார்கள். கோபம் எக்குவா, கவனம் தக்குவா என புரிந்துகொள்ளலாம்.
ஒரே இடத்தில் நிற்க அல்லது உட்கார வைக்க முடியாது.
கண்டக்ட்
டிஸார்டர்
சமூக விதிகள்,
தனிமனித உரிமைகள் என எல்லாவற்றையும் சர்வாதிகார அரசு தூக்கியெறிகிறது அல்லவா? அதைப்போலத்தான்
இந்த குறைபாடு உள்ளவர்கள் எழுத்தாளர் பாலபாரதி சொல்வது போல போடா புல்லே என்றபடி நடந்துகொள்வார்கள்.
எந்த விதிக்கும், யார் சொல்லுக்கும் கட்டுப்பட மாட்டார்கள். கோபம் கொள்ளக்கூடாது. இது
குறைபாடு வகையில் வரும்.
ஆப்போசிசனல்
டெஃபியன்ட் டிஸார்டர்
எதிர்மறையான
ஆட்கள். மற்றபடி பிறரது உரிமைகளை தடுப்பவர்கள், பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என்று சொல்ல
முடியாது.
இந்த மூன்று
உப பிரிவுகளிலும் கூட சிறுவர்கள் உள்ளே வரமாட்டார்கள். அதீத தன்முனைப்பு, கருணையின்மை,
குற்றவுணர்ச்சியின்மை ஆகியவை மேற்சொன்னவற்றில் உள்ளடங்குவதில்லை. சமூக உறவுகளில் தடுமாற்றம்,
பதற்றம், அதிகளவு கோபம் ஆகியவை அப்படியே சிறுவயது ஆட்களுக்கு இருக்கிறது என்றால் சரியானது.
இந்த அறிகுறிகளை கண்டக்ட் டிஸார்டரின் கீழே எழுதலாம். அதன் உட்பிரிவாக நினைத்தால் சரியாக
இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக