காதலியின் ஆவியைச் சுமந்து திரியும் சக்தி வாய்ந்த சிறுவனின் வாழ்க்கை - ஜூஜூட்சு கைசென்
இறுதிப் போர் |
வில்லன் |
ஜூஜூட்சு கைசென் 0 - நான்கு நண்பர்கள் |
ஜூஜூட்சு
கைசென்
அனிமேஷன்
யூடா என்ற
சிறுவன் ஜூஜூட்சு ஹை எனும் பள்ளிக்கு வருகிறான். இவன், அழிவு சக்தியை தன்னுடைய உடலில்
கொண்டிருக்கிறான். இவனை கிண்டல் செய்யும் பள்ளி நண்பர்களை தனது ரிகா சான் என்ற சக்தி
மூலம் அடித்து துவைத்ததில் பலருக்கும் வெண்டிலேட்டர் வைக்கும் நிலை.
அனிமேஷனில் முதல் காட்சியே தெருவிளக்கை கீழிருந்து
காட்டும் காட்சிதான். இந்த படம் நெடுக இதுபோல நிறைய காட்சிகள் உள்ளன. அதிக சண்டைக்காட்சிகள்
கொண்டுள்ள படம்.
படத்தின்
கான்செப்ட் என்னவென்றால், ஒருவர் பிறர் மீது காட்டும் அன்பு, கோபம், வருத்தம், வன்மம்,
பழிக்குப்பழி உணர்ச்சி என இவை அழிவு சக்திகளை உருவாக்குகின்றன. இப்படி உருவாக்குபவர்கள்
எல்லாம் தங்கள் சக்தியை கட்டுப்படுத்த முயலவேண்டும். இல்லாதபோது அது உலக மக்களை அழிக்கும்
ஆபத்தாக மாறும். யூடாவை தனது பள்ளியில் சேர்க்கும் ஆசிரியர், அவனுக்குள் இருக்கும்
சக்தியைக் கட்டுப்படுத்த நினைக்கிறார். இதற்கான பயிற்சிகளைக் கொடுக்கிறார். இப்படித்தான்
அவனுக்கு பாண்டா கரடி, சாப வார்த்தைகளை வீசும் இனுமாகி சான், பேசுவதை விட கத்தி பொருத்திய
கம்பை வேகமாக வீசும் மாகி ஆகியோரை சந்திக்கிறான்.
யூடாவுக்கு
முக்கிய எதிரியாக ஜூஜூட்சு பள்ளிக்கு எதிர்மறையாக செயல்படும் தாந்த்ரீக மந்திரவாதி
உள்ளார். இவர் யார், ஏன் யூடாவைப் பற்றி அறிந்து அவரை கொல்ல நினைக்கிறார் என்பது நீங்கள்
படத்தைப் பார்த்து அறிந்துகொண்டால் நன்றாக இருக்கும்.
யூடாவின் உடலில் உள்ள பூதமாக வரும் ரிகா சான் நிஜமாகவே
பயமுறுத்தும் படி இருக்கிறது. ஒற்றைக் கண், நீளமான கூர்மையான பற்கள், யூடாவின் சொற்களுக்கு
மட்டும் கட்டுப்படும் பிடிவாதம் என பீதியூட்டுகிறது.
இறுதியில்
நடைபெறும் சண்டைகள் பிரமாதமாக உள்ளன. நொடிக்கு நொடி ரத்தம் தெறிக்கிறது. ஒருகட்டத்தில்
நம் மீது கூட ரத்தம் தெறித்துவிட்டதாக என பயமாக இருக்கிறது.
சாபம், சாப
வார்த்தைகள், வினோதமான உருவங்கள், ஆக்ரோஷ சண்டைகள் என ஜூஜூட்சு கைசென், உங்களை வினோதமான
உலகிற்கு விரல் பிடித்து அழைத்துச் செல்கிறது.
சிவந்த வானம்
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக