தொடர் கொலைகாரர்களுக்கான உளவியல் வரையறைகள்

 


ரகசியம் போல வந்து ரஹ்மான் தனது  இருக்கையில் அமர்கிறார் என பத்திரிகையாளர் நா.கதிர்வேலன் ஆனந்தவிகடனில் எழுதியிருப்பார். எத்தனை முறை படித்தாலும் இந்த வார்த்தையில் ஒரு வசீகரம் இருக்கிறதுதானே?

பெரிய கொலைகாரராக காமவெறி கொண்டவராக சித்திரவதை செய்பவராக மனிதர் இருப்பார். ஆனால் அவருக்கு குடும்பம் இருக்கும். ஏதேனும் வேலை செய்துகொண்டு இருப்பார். அவரின் கொலையாளி என்ற முகம் குடும்பத்திற்கு தெரியாது. கொலையாளி என தெரிந்தபிறகு முழு உலகமும் எப்படி தெரியாமல் இருக்கும். அறிகுறிகள் தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள். அல்லது கொலைகளுக்கு இவர்களும் உடந்தையாக இருந்தவர்கள்தான் என பேசுவார்கள். இப்படி பேசுவதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் தன் வாழ்க்கையை குறிப்பிட்ட ஒழுக்கத்துடன் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.

 தொடர் கொலைகார்கள் தோற்றுப்போனவர்களாக, தனி மனிதர்களாக இருப்பார்கள். உறவுகளையோ, வேலையையோ ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்கள். குறைவாக படித்திருப்பவர்கள், சுயமோகிகளாக இருப்பார்கள். மக்கள் கூட்டத்தில்தான் இருப்பார்கள். எளிதாக சூழலுக்கு ஏற்றபடி தங்களை அடையாளங்களை அறிகுறிகளை மறைத்து வாழ்வார்கள்.

ஜான் வெய்ன் கேசி, நோயுற்ற குழந்தைகளுக்கு நிதி சேகரித்து தந்துகொண்டிருந்தவர். குழந்தைகளைக் க்கொன்று அவர்களை கீழே புதைத்து மேலே பலகைகளை வைத்து வாழ்ந்து கொண்டிருந்தார். டெட் பண்டி, கிரிசிஸ் கிளினிக்கில் வேலை செய்தவர். அங்கிருந்தபடியே இளம்பெண்களை கடத்தி கொலை செய்து வந்தார். விலைமாதுக்களை வேட்டையாடிக் கொன்ற ராபர்ட் யேட்ஸ், புகழ்பெற்ற விமான பைலட்டாக இருந்தவர். இவருக்கு ஐந்து குழந்தைகள் உண்டு.

சார்லஸ் ஆல்பிரைட் அறிவியல் ஆசிரியர். மணமானவர். நிறைய மொழிகளை சரளமாக பேசுபவர். இவருக்கு ஐபால் கில்லர் என்ற கொலைப்பெயர் உண்டு. கிறிஸ்டோபர் வைல்டர் பந்தயக்கார் ஓட்டுநர், ஒப்பந்ததாரர். ஆண்ட்ரேய் சிகாடில்லோ பல்கலைக்கழக பட்டதாரி. ஆசிரியரும் கூட.

தான் கூறியதைக் கூட நேரத்திற்கு ஏற்ப மாற்றிச் சொல்லுவார்கள். பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயல மாட்டார்கள் அதைப்பற்றி கவலையும் படமாட்டார்கள். மனைவி, நண்பர் என யாராக இருந்தாலும் தனக்கு எப்படி பயன்படுவார்கள், பயன்படுத்தலாம் என்றே முயற்சி செய்வார்கள். வன்மம் கொண்டவர்கள், தங்களது பிரச்னைக்கு அடுத்தவர்கள் மீது பழி போடுபவர்கள்  என வாழ்வார்கள். இவர்களது மூளையை பரிசோதித்த போது, அதில் நடக்கும் சம்பவங்களைப் பொறுத்து எதிர்வினையாற்றும் பண்பு மிக குறைவு. இரக்கம், கருணை, பிறர் பற்றி நினைத்துப் பார்ப்பது ஆகியவை மிகவும் குறைவு. சைக்கோபாத் என்பவர்களாக இருப்பதால், பிற குற்றவாளிகளை விட கொலைகளில் கொடூர தன்மை அதிகமாக இருக்கும். கொலை செய்யப்படுபவர்கள் பல்வேறு வயதினராக இருப்பார்கள். கொலை செய்யப்படும் முறை மிகவும் கலவரப்படும் நிலையில் இருக்கும். இந்த சைக்கோபாத் குற்றவாளிகள் தொடர்ச்சியாக குற்றங்களை செய்துகொண்டே இருப்பார்கள். சம்பவங்களில் ஏற்படும் பயன்கள் என்பது பணம், ஊடகப் புகழ், சாகசம், பழிக்குப்பழி, உடலுறவு மகிழ்ச்சி என விரிவாக இருக்கும். சைக்கோபாத்களில் விரக்தி ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ள முடியாது.

கொலையாளிகள் உங்கள் அருகே வாழ்ந்தாலும் அவர்களை இவரா கொலையாளி என நம்பவே முடியாது. அந்தளவு இனிமையாக பழகுவார். சாலையில் ஸ்தோத்திரங்களை பாடிக்கொண்டே செல்வார்கள். நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். இதெல்லாம் சந்தேகங்களை குறைப்பதற்குத்தான். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது, அதை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். ஒருவரை எளிதாக கொல்வதற்கான இடத்தில் வேலையை செய்துகொண்டிருப்பார்கள். ஒருவர் இவர்களை அடையாளம் காண்பதற்கு முன்னரே அவர்களை அடையாளம் கண்டுவிடுவார்கள். இவர்கள் எப்படி தங்களுக்குள் இரண்டு ஆளுமைகளாக பிளவுபடுகிறார்கள் என்பதே ஆச்சரியம்தான்.

இப்போது இப்படி சமூகத்திற்கு ஆபத்து விளைவிப்பவர்களின் அடிப்படைக் காரணங்களைப் பார்ப்போம். இந்த காரணங்களை உளவியலாளர்கள் பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் உருவாக்கியுள்ளனர்.

ட்ராமா கண்ட்ரோல் மாடல்

இந்த முறையில் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி அவரது வாழ்க்கையில் இயல்பை சமநிலையை குலைத்துவிடும். இதனால் அவர் கோபம், பதற்றம், குழப்பம், நம்பிக்கையின்மையோடு இருப்பார். தனது வாழ்க்கை நாசமாக போனதற்கு பிறர்தான் காரணம் என பழி கூறுவார். வழிகெட்டு வாழ்க்கை காரணமாக தன்னம்பிக்கையும் இழந்திருப்பார்.

மோட்டிவேஷனல் மாடல்

ஒருவரை ஊக்கப்படுத்தாத காயப்படுத்தும் சூழல், சமூக சூழல், சிறுவயதில் ஏற்படும் வறுமை, எதிர்கொள்ளும் வன்முறை காரணங்கள், நிஜத்தை எதிர்கொள்ள முடியாமல் கற்பனைகளுக்குள் மூழ்குவது, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள், எதிர்மறையான எண்ணங்கள் வழியாக பிறரை கட்டுப்படுத்த நினைத்தல், அதை நியாயப்படுத்தும் கருத்துகள் உருவாகுவது

லஸ்ட் மர்டர்ஸ்

மூளைக்குள் நடைபெறும் முறைகேடான சம்பவங்கள். இதன் மூலம், பாலியல் ரீதியாக, அடங்காத கோபம் கொண்டவராக மாறுவது.

இந்த மூன்று கோட்பாடுகள்தான் பெரும்பாலான தொடர் கொலைகார ர்கள் கொலை செய்வதற்கு அடிப்படையானவை. அதேசமயம் இதை மறுத்தும் உளவியலாளர்கள் பேசியுள்ளனர். அதாவது அவர்கள் கருத்து எப்படியானது என்றால், வெளியுலகில் சைக்கோ கொலைகார ர்கள் வருகிறார்கள் என்றால் இவரா கொலை செய்தார் என்பது போல நடந்துகொள்வார்கள். அமைதியாக இருப்பார்கள். கூச்ச சுபாவியாக நடந்துகொள்வார்கள். ஆனால் மனதில் ஆக்ரோஷமான எணணங்களை, கற்பனைகளை மறைத்து வைத்திருப்பார்கள். இதற்கு காரணங்களை தேடினால் மேற்சொன்ன கொள்கைகளை சென்றடையலாம். இரு மாறுபட்ட ஆளுமைகளை ஒரு மனிதர் தனக்குள்ளே கொண்டிருக்க முடியும் என்பதுதான் விஷயம்.

சிறுவயதில் ஏற்பட்ட மோசமான வன்முறை, பள்ளி கால கேலி, கிண்டல் ஆகியவற்றை எதிர்கொள்ள கற்பனைகளை உருவாக்கிக்கொள்ளும் கொலையாளிகள், தங்களின் அடையாளமாக இன்னொன்றை உருவாக்கி உலகில் வாழ்கிறார்கள். இப்படி வாழும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது. அதிகாரம் கிடைப்பதாக நினைக்கிறார்கள். சமூகத்தின் எந்த விதிகளுக்கும் உட்படாதவர்கள், தங்களது வாழ்க்கையை கற்பனை உலகில் வாழ்ந்து நிறைவு கொள்கிறார்கள். தங்களது தேவை மகிழ்ச்சி மட்டுமே முக்கியம் என வாழ்பவர்கள், கொலைகளை செய்தாலும் கூட அதற்கு காரணம் குறிப்பிட்ட நபர்கள்தான் என பழியைத் தூக்கி போடுவார்கள். இதற்கு அவர்கள் சிறு வயதில் நடந்த வன்முறை, பெற்றோரின் அலட்சியமான பண்பு, நடத்தை காரணமாக இருக்கலாம். ஆனால் செடியை முதலில் அகற்றாமல் பூ வைத்து காய் காய்க்கத் தொடங்கும்போது அது தவறான செடி என்ற கண்டறிந்து என்ன செய்வது?

 

நன்றி - ஃபைன் ஆர்ட் அமெரிக்கா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை