இடுகைகள்

அம்மை தடுப்பூசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோவிட் -19 தொற்றை அழிப்பதே இப்போதைக்கு முக்கியம்! - சேத் பெர்க்லி

படம்
heartfile டாக்டர் சேத் பெர்க்லி கவி நிறுவனத்தின் இயக்குநர்- கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்துடன் இணைந்து மருந்து கண்டுபிடிக்க முயன்று வருகிறார். கோவிட் -19 நோய்த்தொற்றை தடுப்பதற்கான முயற்சி எப்படி சென்றுகொண்டிருக்கிறது? தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான பணியில் அனைத்து நாடுகளையும் இணைத்து பணி செய்வதாக கூறுகிறீர்கள். அது சாத்தியமா? சாதாரணமாக ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. அதனை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி வணிகரீதியில் பயன்படுத்த நமக்கு பதினைந்து ஆண்டுகள் தேவைப்படும். பல்வேறு நாடுகளும் தமக்குள் ஆராய்ச்சி தகவல்களை பகிர்ந்து கொண்டு செயல்படுவதால் பதினெட்டு மாதங்களில் இதற்கான மருந்துகளை நாம் கண்டுபிடித்துவிட முடியும். எங்களது கவி நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து எபோலா நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் உதவியிருக்கிறோம். மேலும் பல்வேறு சுகாதார திட்டங்களில் நாங்கள் அவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். எங்களது சுதந்திரமான செயல்பாட்டிற்காக தடுப்பூசி பத்திரங்களை வெளியிடுகிறோம். உலக தடுப்பூசி நிதிவசதி நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு தன்னார்வலர்களின் நிதியுதவியையும் ப

தடுப்பூசி வதந்திகளைத் தடுப்பது எப்படி?

படம்
themetrofile.com.ng ஆரோக்கியத்தைக் குலைக்கும் வதந்திகள்  இந்தியாவில் குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மை நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கு (MR Vaccine) எதிரான வாட்ஸ்அப் வதந்திகள் பரவி வருகின்றன.  இன்று பலரும் உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரைத் தேடி ஓடுவதில்லை. இணையத்தில் நோய், அதற்கான சிகிச்சை, மருந்துகள், செலவு ஆகியவற்றை மக்கள் முதலிலேயே திட்டமிட்டு விடுகின்றனர். இதனை செகண்ட் ஒப்பீனியனாக எடுத்துக்கொண்டால் நல்லதுதான். ஆனால், பொதுவான இணையத் தகவல்களைப் படித்துவிட்டு நாமே மருந்துகளை வாங்கி சாப்பிட்டால் அது சரியா? அம்மை தடுப்பூசி விவகாரத்தில் வாட்ஸ்அப் மூலம் பரவி வரும் வதந்திகள் இத்தகையதே. வதந்தி அபாயம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய தடுப்பூசித் திட்டத்தின் (Universal Immunization Programme)படி அம்மை நோய்க்கான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்பட்டன. இந்த ஆண்டின் ஜனவரியில் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. மும்பை, டில்லி உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள மக்கள் அம்மைத் தடுப்பூசி, குழந்தைகளை மலடாக்கிவிடும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளது அரசை அதிர்ச்சிக்குள்ளாக்