கோவிட் -19 தொற்றை அழிப்பதே இப்போதைக்கு முக்கியம்! - சேத் பெர்க்லி



Seth Berkley on Immunization in Pakistan | Pakistan Health Policy ...
heartfile


டாக்டர் சேத் பெர்க்லி

கவி நிறுவனத்தின் இயக்குநர்- கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்துடன் இணைந்து மருந்து கண்டுபிடிக்க முயன்று வருகிறார்.

கோவிட் -19 நோய்த்தொற்றை தடுப்பதற்கான முயற்சி எப்படி சென்றுகொண்டிருக்கிறது? தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான பணியில் அனைத்து நாடுகளையும் இணைத்து பணி செய்வதாக கூறுகிறீர்கள். அது சாத்தியமா?

சாதாரணமாக ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. அதனை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி வணிகரீதியில் பயன்படுத்த நமக்கு பதினைந்து ஆண்டுகள் தேவைப்படும். பல்வேறு நாடுகளும் தமக்குள் ஆராய்ச்சி தகவல்களை பகிர்ந்து கொண்டு செயல்படுவதால் பதினெட்டு மாதங்களில் இதற்கான மருந்துகளை நாம் கண்டுபிடித்துவிட முடியும். எங்களது கவி நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து எபோலா நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் உதவியிருக்கிறோம். மேலும் பல்வேறு சுகாதார திட்டங்களில் நாங்கள் அவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். எங்களது சுதந்திரமான செயல்பாட்டிற்காக தடுப்பூசி பத்திரங்களை வெளியிடுகிறோம். உலக தடுப்பூசி நிதிவசதி நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு தன்னார்வலர்களின் நிதியுதவியையும் பெற்று வருகிறோம். கொரோனா பாதிப்பிலும் தனியார், அரசு பொது நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று அதனை சோதித்து சந்தைக்கு கொண்டு வர முயன்று வருகிறோம்.

கோவிட் -19 பிரச்னை தடுப்பூசிகளை கண்டுபிடித்துவிட்டால் தீர்ந்துவிடுமா?

நாங்கள் இப்போது நூறு மருந்துகளை ஆராய்ச்சி அடிப்படையில் தேர்வு செய்து சோதித்து வருகிறோம். இதனை முழுமையான தீர்வு என்று சொல்ல முடியாது. மருந்தை பல்வேறு நாடுகளுக்கு முழுமையாக கொண்டுபோய் சேர்ப்பது. அனைத்து நாடுகளும் தம்முடைய  மக்களுக்குத்தான் முதலில் மருந்து கிடைக்கவேண்டும் என நினைப்பார்கள். இதில் இரண்டு பிரச்னைகள் உள்ளன. பொதுமக்களுக்கான மருந்து தேவை, அடுத்து அதனை ஒப்பந்தங்கள் மூலம் யாருக்கு முன்னுரிமை கொடுத்து வழங்குவது என்பது. நாங்கள் விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண்போம் என நம்புகிறேன்.

மருந்துகளைக் கண்டுபிடித்து மேம்படுத்துவதில் உங்கள் நிறுவனத்தின் பங்கு என்ன?

நாங்கள் தடுப்பூசி மருந்தின் சந்தையை விரிவுபடுத்தி அதனை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய உதவுகிறோம். தரமான மருந்துகளை உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர் குழுவின் அங்கீகாரத்தோடு உருவாக்கி அவற்றை மேம்படுத்தி மக்களுக்கு கிடைக்கச்செய்து வருகிறோம். இம்முறையில் நாங்கள் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை நோய்களிலிருந்து காப்பாற்றியுள்ளோம். அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எபோலாவுக்கு மருந்து கண்டுபிடித்து அதனை வேகமாக அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச்செய்து வெற்றி கண்டோம். இந்த கோவிட் -19 விவகாரத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமாக இருக்கப்போகிறது. அதன்மூலம்தான் மருந்துகளை வேகமாக தயாரித்து சோதித்து உலகிற்கு வழங்கப்போகிறோம்.

கோவிட் -19க்கான தடுப்பூசி ஆய்வுகள், நடப்பிலுள்ள தடுப்பூசி திட்டங்கள் பாதிக்குமா?

வருமானம் குறைந்த ஏழைநாடுகள் மற்றும் தொடக்கநிலை சுகாதார திட்டங்கள் இல்லாத நாடுகளில் தடுப்பூசி திட்டங்களை தள்ளி வைத்திருக்கிறார்கள். காரணம், கோவிட் -19 நோய்த்தொற்று பரவும் வேகம் அதிகம். அதனை அவசரநிலையில் கட்டுப்படுத்த வேண்டியது உள்ளது. மேலும், தடுப்பூசி திட்டத்திற்கான பணியாளர்கள் நோய்த்தொற்று பணியில் இடம் மாற்றப்பட்டுள்ளனர். நிலைமை இப்படியே இருக்காது. விரைவில் நிலைமை மாறும். தடுப்பூசி திட்டங்களை அரசு பின்தொடர்வது அவசியம். ஆனால் கோவிட் -19 தடுப்புக்கு முன்னுரிமை அளித்து நாடுகள் செயல்பட்டு வருகின்றன. அதனை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்திய நாடுகள், எப்போதும் போல தடுப்பூசி திட்டங்களை பின்தொடர்வார்கள். நாங்கள் இப்போதும் காலரா, மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கொடுக்க தயாராக இருக்கிறோம்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆங்கிலத்தில்: கவிதா ஐயர்

 

 

 

 

 

 

 

கருத்துகள்