கட்டணசேவையில் காதலர்களைச் சேர்த்து வைக்கும் காதல் ஒருங்கிணைப்பாளன்! - அட்டா 2013

அட்டா
இயக்கம்: சாய் கார்த்திக்
ஒளிப்பதிவு: அருண்குமார்
இசை: அனுப் ரூபன்ஸ்
கல்யாணம் பதிவு செய்யும்
சார்பதிவாளர் அலுவலகத்தில் பணி செய்யும் நாயகன் அபி, அங்கு வரும் காதல் தம்பதிகளுக்கு
கட்டணசேவை அளித்து திருமணம் செய்து வைக்கிறான். ஆனால் அதிலும் அவர் நேர்மையைக் கடைப்பிடிக்கிறார்.
ஒருமுறை பணக்கார காதல் தம்பதியை பிரிக்க நினைக்கும்போது, ஏற்படும் சிக்கலால் அவரின்
வாழ்க்கையே மாறுகிறது. அவரின் காதலி பிரியா, அவரை விட்டு பிரிகிறார். இருவரும் ஒன்றாக
எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் கதை.
ஆஹா
சுஷாந்த் நன்றாக நடித்திருக்கிறார்.
சிலசமயங்களில் வாயில் பீடாவைக் குதப்பிக்கொண்டே வசனம் பேசுகிறாரோ என்று தோன்றுகிறது.
ஷான்வி திமிரான பணக்காரி கதாபாத்திரத்திற்கு அம்சமாக பொருந்துகிறார். காதல் பாட்டு
முதல் கிளப் பாட்டு முதல் தனக்கு என்ன வருமோ அத்தனை விஷயங்களையும் நம்முன் இறக்கி வைத்திருக்கிறார்.
ஐயையோ
தன் அக்காவிற்கு எப்படி
திருமணம் ஆனது என்பதை அவரின் தங்கை அறிய இவ்வளவு தாமதம் ஆகுமா என்று தெரியவில்லை. காதல்
சோதனைகள் நீண்டுகொண்டே செல்வது அயர வைக்கிறது. மூத்த மகள் காதல் திருமணம் செய்துகொண்டதற்கே
ஆவேசமான அப்பா, இரண்டாவது பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொள்வதை சிரித்துக்கொண்டே
ஏற்பாரா என்ன? அப்பாவிற்கான மரியாதையும் அந்த இடத்தில் சறுக்கிவிடுகிறது.
உண்மையான காதலுக்கு மரியாதை
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக